உ.பி. :லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கு விசாரணை – சுப்ரீம் கோர்ட் அதிருப்தி!

உ.பி. :லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கு விசாரணை – சுப்ரீம் கோர்ட் அதிருப்தி!

நாட்டை அதிர வைத்த உ.பி. லக்கிம்பூர் கேரி வன்முறைச் சம்பவங்கள் பற்றிய வழக்கு விசாரணை எதிர்பார்த்த வகையில் திருப்தி தரும் அளவில் அமையவில்லை என்று சுப்ரீம் கோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது அதனால் பஞ்சாப் அரியானா மாநில முன்னாள் நீதிபதி ஒருவர் மேற்பார்வையில் வழக்கு விசாரணையை நடத்த உத்தரவிடலாமா என்று உத்தரப் பிரதேச மாநில அரசின் கருத்தை சுப்ரீம் கோர்ட் திங்களன்று (8-11-2021) கோரியுள்ளது.

லக்கிம்பூர் கேரி வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டிதில் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் ஹிமா கோலி, சூரியகாந்த் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது விசாரணை நடைபெறும் முறை அதிருப்தி அளிப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

பல சாட்சிகளின் சாட்சியங்கள் பதிவு செய்யப்படாமல் உள்ளது பதிவு செய்யப்பட்ட சிலரது சாட்சியங்களும் முறைப்படி பதிவு செய்யப்படவில்லை.

சாட்சியம் அளிக்க முன் வருவோருக்கு மாநில அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியம்.

சாட்சியங்கள் பதிவு செய்யப்படும் பொழுது நீதிபதி முன்னிலையில் முறைப்படி பதிவு செய்யப்பட வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறோம்.

இறந்தவர்களின் ஃபோரன்சிக் ரிப்போர்ட்டுகள் இன்னும் விசாரணைக்குழு கைக்கு வந்து சேரவில்லை விசாரணைக் குழுவினர் இந்த வேகத்தில் விசாரணை நடத்தினால் பல ஆண்டுகள் விசாரணை நடைபெறும் விசாரணையும் வேகம் முடுக்கி விடப்பட வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் அசிஸ் மிஸ்ரா மொபைல் போன் மட்டுமே கையகப்படுத்தப் பட்டுள்ளது மற்றவர்களின் மொபைல் போன்களை விசாரணைக்குழு கையகப் படுத்தவில்லை இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை அவர்கள் மொபைல் போன்களை பயன்படுத்த மாட்டார்களா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். விவசாயிகள் மீது கார் ஏற்றிக கொல்லப்பட்ட வழக்கும் பாஜக தொண்டர்கள் தடியால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கும் தனித்தனியாக விசாரிக்கப்படவேண்டும் என்று பலமுறை தெரிவித்திருக்கிறோம்.

பாஜக தொண்டர்கள் தடியால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 56 பேர் சாட்சியம் அளிக்க முன்வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் விவசாயிகள் மீது கார் ஏற்றிக கொன்றவர்களை காப்பாற்ற சாட்சியம் அளிக்கிறார்கள். இதனை ஏற்கமுடியாது.

ஒரு வழக்குச் சாட்சியத்தின் அடிப்படையில் மற்றொரு வழக்கின் குற்றவாளியை விடுவிக்க முடியாது. இரண்டு வழக்குகளும் இன்னும் தனிமைப் படுத்தப்படவில்லை.

விசாரணையில் வேகம் இல்லை. உரிய விதிப்படி நடைபெறவும் இல்லை. அதனால் விசாரணையை மேற்பார்வையிட அரியானா, பஞ்சாப் மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒருவரை நியமிக்கலாம். நீதிபதிகள் ராகேஷ் குமார் அல்லது ரஞ்சித் சிங்கை மேற்பார்வையிடும் பணியை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் விரும்புகிறது.

விசாரணை பாரபட்சம் அற்ற வகையில் நடைபெற வேண்டும். விசாரணை அதிகாரிகள் மீதான நம்பிக்கை தேய்ந்து வருகிறது.

இந்நிலையில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பாரவையில் விசாரணை நடைபெறுவதை உத்தரப்பிரதேச அரசு விரும்புகிறதா என்பதை அறிந்துகொள்ள உச்ச நீதிமன்றம் விரும்புகிறது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆலோசனைக்கு உத்தரபிரதேச அரசு தனது கருத்தை தெரிவிக்கும்படி உத்தரப்பிரதேச மாநில அரசு சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர்களை சுப்ரீம் கோர்ட் கேட்டுக் கொள்கிறது. – இவ்வாறு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரபிரதேச மாநில அரசுக்கு தெரிவித்துள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்

Related Posts

error: Content is protected !!