செஸ் ஒலிம்பியாட்: இந்திய ஆடவர், மகளிர் அணி தங்கம் வென்று புதிய சாதனை!

செஸ் ஒலிம்பியாட்: இந்திய ஆடவர், மகளிர் அணி தங்கம் வென்று புதிய சாதனை!

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்க இந்தியாவின் சார்பில் எப்போதும் இல்லாத வகையில், குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா, விதித் குஜ்ராத்தி முதலிய டாப் கிளாஸ் வீரர்கள் அடங்கிய குழு பயணப்பட்டுள்ளது.இதுவரை இந்தியா செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் வெண்கலப்பதக்கம் மட்டுமே வென்றிருக்கும் நிலையில், இந்தமுறை இந்த பவர்ஃபுல் டீம் ஆனது நிச்சயம் தங்கத்தை நாட்டிற்கு எடுத்துவரும் என்ற நம்பிக்கையுடன் இந்தியா காத்திருந்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதி சுற்றில் இந்திய அணி ஸ்லோவோனியாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா தரப்பில் குகேஷ் மற்றும் அர்ஜூன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதன் மூலம் இந்திய அணி செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. ஸ்ரீநாத் நாராயணன், குகேஷ்,பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, விதித் மற்றும் பெண்டாலா ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

மகளிர் அணியும்…

இதேபோல் இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடி வந்த அபிஜித் தலைமையிலான இந்திய மகளிர் அணி இறுதிச்சுற்று ஆட்டத்தில் அஜர்பைஜானுக்கு எதிராக விளையாடியது. இதில் திவ்யா, வந்திகா மற்றும் ஹரிகா ஆகியோர் வெற்றி பெற்று இந்திய அணி தங்கப்பதக்கம் வெல்ல உதவினர். திவ்யா, வந்திகா, ஹரிகா, தானியா மற்றும் அபிஜித் (கேப்டன்) ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக இந்திய மகளிர் அணியும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

அதிலும் இதற்குமுன்பு சென்னையில் நடைபெற்ற 2022 செஸ் ஒலிம்பியாட் மற்றும் 2014 செஸ் ஒலிம்பியாட் என இரண்டிலும் வெண்கலம் மட்டுமே பெற்றிருந்த இந்தியா ஒரு அணியாக 2024 செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!