🚨சென்னை H-1B விசா மோசடி-அனுமதி வரம்பை விட 2.5 மடங்கு அதிகம்! பகீர் தகவல்!

🚨சென்னை H-1B விசா மோசடி-அனுமதி வரம்பை விட 2.5 மடங்கு அதிகம்! பகீர் தகவல்!

மெரிக்காவில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பொருளாதார வல்லுநரான டாக்டர் டேவ் பிராட் எழுப்பியுள்ள அதிரடி குற்றச்சாட்டுகள், அமெரிக்காவின் மிகவும் விரும்பப்படும் H-1B விசா நடைமுறையில் நடக்கும் மிகப்பெரிய மோசடிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன. குறிப்பாக, இந்தியாவில், அதிக விசாக்கள் கையாளப்படும் மையங்களில் ஒன்றான சென்னையிலிருந்து வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை சட்ட வரம்புகளை மீறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய வரம்பை மீறிய சென்னை 

டாக்டர் டேவ் பிராட்டின் கூற்றுப்படி, நாடு முழுவதும் H-1B விசாக்களுக்கான வருடாந்திர உச்ச வரம்பு 85,000 ஆக இருக்கும் நிலையில், இந்தியாவில் உள்ள சென்னை மாவட்டத்தை சேர்ந்த பகுதிகளில் மட்டும், 2024 ஆம் ஆண்டில் சுமார் 2,20,000 H-1B விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

  • இது அமெரிக்க அரசால் அனுமதிக்கப்பட்ட சட்ட வரம்பைவிட 2.5 மடங்கு அதிகம் ஆகும்.

  • ஒட்டுமொத்த H-1B விசாக்களில் சுமார் 71% இந்தியாவுக்கு வழங்கப்படுவதாகவும், இது ஒரு மோசடி என்றும் பிராட் குறிப்பிட்டுள்ளார்.

தென் இந்திய மையத்தின் அழுத்தம் 

சென்னை அமெரிக்கத் தூதரகம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் தெலங்கானா ஆகிய நான்கு முக்கியப் பகுதிகளிலிருந்து வரும் விண்ணப்பங்களைச் செயல்படுத்துகிறது. இதுவே உலகின் அதிகச் சுறுசுறுப்பான H-1B விசா மையங்களில் ஒன்றாகும்.

  • 2024 ஆம் ஆண்டில், சென்னைத் தூதரகம் 2,20,000 H-1B விசாக்களுடன், கூடுதலாக 1,40,000 H-4 (சார்பு) விசாக்களையும் கையாண்டுள்ளது, இது விசா நடைமுறையில் நிலவும் மிகப்பெரிய அழுத்தத்தைக் காட்டுகிறது.

மோசடி குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் அதிகாரியின் உறுதி 

இந்த அதிர்ச்சியூட்டும் மோசடி குற்றச்சாட்டுகளை, முன்னாள் அமெரிக்க வெளியுறவுப் பணி அதிகாரி மவஷ் சித்திக் உறுதிப்படுத்தியுள்ளார்.

  • 2005 முதல் 2007 வரை தாம் கையாண்ட விசாக்களில், இந்தியாவிலிருந்து வந்த H-1B விசாக்களில் 80 முதல் 90 சதவீதம் வரை போலியானவை என்றும், அவை போலியான சான்றிதழ்கள் அல்லது ஆவணங்களைக் கொண்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  • அமெரிக்க வெளியுறவுத் துறையில் பணிபுரிந்த ஒருவரே இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியிருப்பது, H-1B நடைமுறையின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சட்ட வரம்பு மீறலும் அதன் தாக்கமும் 

அமெரிக்காவின் சட்டபூர்வமான விசா வரம்புகளை மீறி, இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான விசாக்கள் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திலிருந்து வழங்கப்படுவது, விசா நடைமுறையின் ஒருமைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்குகிறது. இந்த முறைகேடுகள் அமெரிக்காவின் வேலைவாய்ப்புச் சந்தை, புலம்பெயர்ந்தோர் கொள்கைகள் மற்றும் விசா வழங்குவது தொடர்பான சட்டதிட்டங்களை மீறுவது போன்ற பல சிக்கல்களை எழுப்பியுள்ளன.

இந்த விவகாரம், அமெரிக்கப் பாராளுமன்றத்தின் கவனத்தை ஈர்ப்பதுடன், H-1B விசா நடைமுறையின் மறுஆய்வுக்கும் கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனாமிகா

Related Posts

error: Content is protected !!