சென்னை 2 சிங்கப்பூர் ரிலீஸூக்கு ரெடி!

சென்னை 2 சிங்கப்பூர் ரிலீஸூக்கு ரெடி!

வாகை சூடவா படம் மூலம் பிரபலமான இசை அமைப்பாளர் ஜிப்ரான், அதன்பிறகு உத்தம வில்லன், பாப நாசம், தூங்காவனம் படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் கமலஹாசனுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். படு பிசியாகி விட்ட  நிலையிலும் அண்மையில் இந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களை போற்றும் வகையில் ஒரு பாடலை கவிப்பேரரசு வைரமுத்து இயற்றிய தற்கு இதே இசை அமைப்பாளர் ஜிப்ரான்தான் இசை அமைத்து இருந்தார். அப்பேர் பட்டவர்  திரை இசையில். அறிமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கி, ‘சிங்கபூர் மீடியா டெவலப்மெண்ட் அத்தாரிட்டி’ துணையோடு, ‘காமிக்புக் பிலிம்ஸ் இந்தியா பிரைவேட்’ நிறுவனம்  ‘சென்னை 2 சிங்கப்பூர்’ என்ற படத்தை தயாரித்துள்ளது.

புதுமுகங்கள் கோகுல் ஆனந்த் மற்றும் அஞ்சு குரியன் நடிக்கும் இப்படத்தின் ஆறு பாடல்களும், ஏற்கெனவே பலரின் கவனத்தையும் ஈர்த்து விட்டது. குறிப்பாக சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தில் இடம் பெற்றுள்ள ஆறு பாடல்களை இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் குழுவினர் ஆறு நாடுகளில் வெளியிட முடிவு செய்து. கடந்த ஆகஸ்ட் மாதம்  சென்னையில் பயணத்தைத் தொடங்கியவர்கள் பூட்டான், மியன்மார், தாய்லாந்து மற்றும் மலேசியா என ஐந்து நாடுகளில் ஒவ்வொரு பாடலையும் வெளியிட்டதும் திட்டமிட்ட முப்பது நாட்கள் பயணத்தில், கடினமான சூழ்நிலைகளை கடந்து, ஒரு வழியாக சிங்கப்பூரை அடைந்த ஜிப்ரான் மற்றும் பட குழுவினருக்கு சிங்கப்பூர் ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்ததும் அதிலும் .தனித்துவமான இந்த யோசனைக்கு பிக் பாஸ்  கமல் அப்போதே தன் பாராட்டுகளை தெரிவித்திருந்ததும் நினைவிருக்கும். அந்த படம் தர்போது முழுமையாக தயாராகி ரிலீஸூக்கு தயாராகி விட்டது. உடனே தங்கள் படத்தை சென்னையை சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கு போட்டு காட்டிய போது மாணவர்களின் கைத்தட்டல் உற்சாகத்தை கண்டு மகிழ்ச்சியடைந்து ரிலீசூக்கு உரிய காலம நேரம் கணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதையொட்டி நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசிய இயக்குநர், “நான் சிங்கப்பூர்வாசிதான் என்றாலும் தமிழ்நாடுதான் பூர்வீகம், சிங்கப்பூரில் பல டாகுமெண்டரி,  விளம்பர படங்கள் எடுத்த அனுபவம் மட்டுமே கொண்ட எனக்கும் தமிழ் சினிமா ஒன்று – அதையும் சகல தரப்பினரும் ரசிக்கும் படியாக எடுக்க வேண்டுமென ஆசை இருந்தது. அப்படி ஒரு படத்தை எடுத்து முடித்து விட்டோம் என்பதில் கொஞ்சம் பெருமை. இப்படத்தின் கதை என்ன என்று கேட்டால் சென்னையைக் சார்ந்த ஒரு வளரும் இயக்குனர் சிங்கப்பூருக்கு வாய்ப்பு தேடி வருகிறான். அங்கே அவன் சென்னையைக் சேர்ந்த ஒரு பெண்னை சந்திக்க நேரிடுகிறது. அவர்களுக்குள் அங்கே உருவாகும் காதலும், அதன் தொடர்ச்சியாக எற்படும் சம்பவங்களும்தான் சென்னை சிங்கப்பூர் படத்தின் கதை. முழுக்க என்டர்ட்யினா வந்துருக்குது படம்” என்றார்

தொடர்ந்த இசையமைப்பாளர் ஜிபரான், “இதோட கதை பத்தி ரொம்ப ஆராய்ச்சி எல்லாம் செய்ய வேண்டாம். ஜஸ்ட் ரிலாக்ஸ்டா வந்து பார்த்து ரசிச்சிட்டு போற படம். ஆரம்பத்திலேயே சொன்ன மாதிரி ரீசண்டா இந்த படத்தைப் பார்த்த காலேஜ் ஸ்டூடன்ஸ் நாங்க எந்த இடத்துக்கு கை தட்டுவாங்க? எப்ப வாய் விட்டு சிரிப்பாங்கன்னு ஒரு கணக்கு போட்ட இடத்திலே எல்லாம் எங்க கணிப்பு தப்பலை. அதுனாலே இந்த மாசமே ரிலீச் செய்ய பிளான் பண்றோம்” என்றார்

error: Content is protected !!