ஹேக்கிங் எக்ஸ்பர்ட் ஜீவா : ‘கீ’ ரிப்போர்ட்!

ஹேக்கிங் எக்ஸ்பர்ட் ஜீவா : ‘கீ’ ரிப்போர்ட்!

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் நடிகர் ஜீவா மற்றும் நடிகை நிக்கி கல்ராணி முதன்முறையாக இணைந்து நடித்து வரும் படம் ‘கீ’. அறிமுக இயக்குநர் காலீஸ் இயக்கும் இந்த படத்தில் கல்லூரி மாணவனான ஜீவா ஹேக்கிங் செயலில் ஈடுபடுபவராக நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு தனது  ட்விட்டர் பக்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னல் (ஆகஸ்ட் 3) வெளியிட்டார்.

இந்தகீ’ திரைப்படம் குறித்து காலீஸ் விவரித்த போது, “இந்த படம் குறித்து ஜீவாவிடம் கூறிய உடனே சம்மதித்தார். அவர் தொழில்நுட்பம் குறித்து நிறைய தகவல்களை அறிந்து வைத்துள்ளார். மூன்று ஹார்டு டிஸ்க்குகள் நிறைய புதிய தொழில்நுட்பங்கள் பற்றியும் ஹேக்கிங் பற்றியுமான ஆவணப்படங்களை சேகரித்துள்ளார். படப்பிடிப்பின் போது அவர் கூறும் தகவல்கள் மிகுந்த பயனுள்ளதாக இருந்தன. படத்தின் தலைப்பான ‘கீ’ தொல்காப்பியத்திலிருந்து எடுக்கப்பட்டது. கீ என்றால் ஒவ்வொரு செயலும் சந்தர்ப்பமும் நல்லது, கெட்டது என்ற இரு புறங்களைக் கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளையில் இது ‘கம்ப்யூட்டர் Key’ என்பதை உருவகப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்  கீ போர்டில் ஏதாவது ஒரு ‘கீ’யை நாம் தவறாக அழுத்தினாலும், அதன் விளைவுகள் எப்படி வேண்டுமானாலும் ஆகலாம். அதையும், குறிக்கும் பொருட்டே படத்திற்கு ‘கீ என்று பெயர்” எனத் தெரிவித்தார். ஜீவாவுடன் இணைந்து சுஹாசினி, ராஜேந்திர பிரசாத், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

அனீஸ் தருண் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசைய மைக்கிறார்.  நாகூரன் படத்தொகுப்பு பணிகளை மேற் கொள்கிறார். கீ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவுற்று தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.

error: Content is protected !!