32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 221 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 221)
சேலம் – சென்னை விமான கட்டணத்தில் சர்ச்சை ! தமிழகம்

சேலம் – சென்னை விமான கட்டணத்தில் சர்ச்சை !

சேலம் மாவட்டம் கமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து சென்னை – சேலம் விமான சேவை துவங்கியது. விமானத்தை முதல்வர் பழனிசாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.இந்த விழாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு வீடியோ கான்பரன்ஸ் முறையில் கலந்து கொண்டார். பொன்.ராதாகிருஷ்ணன், தங்கமணி உள்ளிட்ட மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனிடையே சேலம் – சென்னை விமான கட்டணத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சேலத்திலிருந்து காலை 11 மணிக்கு கிளம்பும் இந்த விமானம், 11.50 மணியளவில் […]

March 25, 2018 admin
குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்கும்  ஏடிஜிபி சைலேந்திரபாபு-வின்  உதயம் தன்னார்வலர்கள் குழு! Running News

குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்கும் ஏடிஜிபி சைலேந்திரபாபு-வின் உதயம் தன்னார்வலர்கள் குழு!

நம் நாட்டில் சராசரியாக ஒரு நாளில் 300 குழந்தைகள் காணாமல் போவதாகவும், தமிழகத்தில் காணாமல் போகும் மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தைப் பற்றிய தகவல்கள் கடைசிவரை தெரிவதேயில்லை என்றும் கூறப்படுகிறது. இதனிடையே ரயில் நிலையங்களில் காணாமல் போகும் குழந்தைகளை மீட்க 150 பேர் கொண்ட தன்னார்வலர் கொண்ட அமைப்பு ஒன்றை தமிழக ரயில்வே போலீசார் துவக்கியுள்ளனர். இதனை ரயில்வே போலீஸ் ஏடிஜிபி சைலேந்திரபாபு துவக்கி வைத்தார்.  குறிப்பாக ரயில் நிலையங்களில் குழந்தைகள் அடிக்கடி காணாமல் போவது கடந்த 3 […]

March 25, 2018 admin
பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம்! Running News

பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம்!

தன்னெழுச்சியாக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இதனால் தூத்துக்குடி நகரமே அரண்டு போனது . தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்படுகிறது. இந்த ஆலையால் அப்பகுதியன் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதா கவும், நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதாகவும் கூறி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் ஆலைலையை விரிக்க முயற்சி மேற்கொண்டது. இதற்கு அனுமதி கிடைத்ததையடுத்து, விரிக்காப்பணிகள் […]

March 24, 2018 admin
குடியிருக்கும் வீடுகளில் பிரார்த்தனை கூட்டம் நடத்துவதற்கு முன் அனுமதி பெற தேவையில்லை!. Running News

குடியிருக்கும் வீடுகளில் பிரார்த்தனை கூட்டம் நடத்துவதற்கு முன் அனுமதி பெற தேவையில்லை!.

நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன்,  மதுரை  ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் “பாளையங்கோட்டை அகஸ்தியபுரத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் போதகராக உள்ளேன். நான் வி.கே.புரம் தாலுகா ராஜகோபாலபேரி கிராமத்தில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டினேன். அந்த வீட்டில் வாரந்தோறும் வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் பிரார்த்தனை கூட்டம் நடத்துவது வழக்கம். இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள யாருக்கும் எந்த இடையூறும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் அனுமதி பெறாமல் பிரார்த்தனை கூட்டம் நடத்துவதாக ஒரு சிலர் வேண்டுமென்றே கொடுத்த […]

March 24, 2018 admin
அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மாரடைப்பு – அவர் ஆஸ்பத்திரியிலேயே அட்மிட்! Running News

அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மாரடைப்பு – அவர் ஆஸ்பத்திரியிலேயே அட்மிட்!

அப்போலோ மருத்துவக் குழுமங்களின் தலைவர் பிரதாப் சி.ரெட்டிக்கு நேற்று நள்ளிரவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மயங்கி விழுந்த அவருக்கு இருதய அடைப்புக்கான ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, முக்கிய பிரமுகர்களுக்கான வார்டு அறையில் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாள் ஒன்றுக்கு 100 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதித்த பிரதாப் ரெட்டி என்கிற அந்த […]

March 24, 2018 admin
அ.தி.மு.க. அரசு இன்னும் 100 ஆண்டுகள் நீடிக்கும் ! – எடப்பாடியார் நம்பிக்கை! Running News

அ.தி.மு.க. அரசு இன்னும் 100 ஆண்டுகள் நீடிக்கும் ! – எடப்பாடியார் நம்பிக்கை!

நயவஞ்சகர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் அ.தி.மு.க. அரசு இன்னும் 100 ஆண்டுகள் நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். மேலும் பூனைகள் கூடி யானையை அசைக்க முடியாது என்றும் முதல்வர் ஆவேசமாக பேசினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு ஓராண்டு பூர்த்தியானதை தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று தமிழக அரசின் சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், […]

March 24, 2018 admin
ராம ராஜ்ய ரதத்தோட நம்பர் பிளேட் எங்கேய்யா? – கனிமொழி கேள்வி! Running News

ராம ராஜ்ய ரதத்தோட நம்பர் பிளேட் எங்கேய்யா? – கனிமொழி கேள்வி!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டவேண்டும், ராமாயணத்தை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து அமைப்பு சார்பில், ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் வழியாகப் பயணித்து தமிழகம் வந்த இந்த ரதம் தமிழக பகுதிகளில் கடந்த சில தினங்களாக பயணித்தது. அந்த ரதம் தமிழகத்திற்குள் நுழைய கூடாது என்று திமுக உள்பட பல கட்சிகளின் தலைவர்கள் போராட்டம் நடத்தி கைதாகி பின்னர் […]

March 23, 2018 admin
‘ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை! – ஸ்டாலின் பெருமிதம்! Running News

‘ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை! – ஸ்டாலின் பெருமிதம்!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவை தொடர்ந்த வழக்குகளில், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 19 பேரை விடுதலை செய்து கடந்த டிசம்பர் 21-ந்தேதி சி.பி.ஐ. கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை சார்பில் நேற்றுமுன்தினம் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, சி.பி.ஐ. சார்பில் நேற்று டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதே சமயம் 2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பான 2ஜி – […]

March 22, 2018 admin
அதிமுக எம் பி சசிகலா புஷ்பா எம் புருஷனை மேரேஜ் பண்ணிக்க போறார்- கலெக்டரிடம் புகார்!- Running News

அதிமுக எம் பி சசிகலா புஷ்பா எம் புருஷனை மேரேஜ் பண்ணிக்க போறார்- கலெக்டரிடம் புகார்!-

அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா 2-வது திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படும் ராமசாமி என்பவரின் மனைவி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதிமுகவை சேர்ந்த எம்.பி.சசிகலா புஷ்பா சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரை எதிர்த்து பேசாமல் இருந்த எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களுக்கு மத்தியில் ஜெயலலிதாவும், சசிகலாவும் தன்னை தாக்கியதாக நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்தது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்து அவரது கணவர் அதிமுக தலைமை […]

March 20, 2018 admin
சசிகலா-வின் கணவர் நடராஜன் மரணம் Running News

சசிகலா-வின் கணவர் நடராஜன் மரணம்

மறைந்த ஜெ.யின் தோழி வி.கே.சசிகலாவின் கணவரும், ‘புதியபார்வை’ இதழின் ஆசிரியருமான ம.நடராஜன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடராஜனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, நடராஜனுக்கு, கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டன. இதன் பின்னர் உடல்நலம் தேறிய நடராஜனுக்கு மருத்துவமனையிலேயே ஒரு மாதம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி […]

March 20, 2018 admin
உடனடி செய்திகள்