32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 219 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 219)
அண்ணா பல்கலை. துணை வேந்தராக கர்நாடகாவின் சூரப்பா நியமனம்!. Running News

அண்ணா பல்கலை. துணை வேந்தராக கர்நாடகாவின் சூரப்பா நியமனம்!.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பாவை நியமனம் செய்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று உத்தரவிட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி கடந்த 2016 -ம் ஆண்டு மே முதல் காலியாக உள்ளது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய மூன்று முறை தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டு துணைவேந்தரை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வந்தன.  கடந்த வாரம், அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தரைத் தேர்வுசெய்வதற்கான நேர்முகத்தேர்வு, ஆளுநர் மாளிகை யான ராஜ்பவனில் […]

April 5, 2018 admin
தமிழகம் வரும் பிரதமருக்கு கறுப்பு கொடியா? – ஸ்டாலின் யோசனை! தமிழகம்

தமிழகம் வரும் பிரதமருக்கு கறுப்பு கொடியா? – ஸ்டாலின் யோசனை!

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் வியாழக்கிழமை (இன்று) முழு அடைப்புப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள், வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்து இருந்ததால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் […]

April 5, 2018 admin
நம்ம சென்னையில் பாதுகாப்புத் துறையின் ‘டெபெக்ஸ்போ’ பிரமாண்ட கண்காட்சி! Running News

நம்ம சென்னையில் பாதுகாப்புத் துறையின் ‘டெபெக்ஸ்போ’ பிரமாண்ட கண்காட்சி!

பாதுகாப்பு கண்காட்சி இந்தியா என்ற நிகழ்ச்சி உலகின் மிகப்பெரிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகி உள்ளது. முதல் முறையாக இந்த பாதுகாப்பு கண்காட்சி சென்னையில் ஏப்ரல் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. ராணுவம், கப்பற்படை மற்றும் விமானப்படையின் செயல்பாடு மற்றும் ராணுவ தளவாடங்கள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்வதற்காக டெல்லி, கோவா உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு துறை சார்பில் கண்காட்சிகள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு மந்திரி நிர்மலா சீதாராமன் முயற்சியால் முதன் முறையாக தமிழகத்தில் […]

April 5, 2018 admin
முதல்வராகி முதல் கையெழுத்து என்று பேசுவது அதிகபிரசிங்கித்தனமா? கமல் விளக்கம்! Running News

முதல்வராகி முதல் கையெழுத்து என்று பேசுவது அதிகபிரசிங்கித்தனமா? கமல் விளக்கம்!

புதிய அரசியல் நாயகன் கமலின் இரண்டாவது அரசியல் கூட்டம் திருச்சி பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலம் முழுவதும் இருந்து வரும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள், பெண்கள் அமருவதற்காக தனித்தனியே 14 பிரிவுகளாக இருக்கைகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் இருவழியாக வந்து செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டது. மேடையின் கீழ் முன்வரிசையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்கார இருக்கைகள் அமைக்கப்பட்டன. திறந்தவெளி மேடையின் பின்புறமும், வலது, இடது புறங்களிலும் பிரமாண்ட எல்.இ.டி. திரையில் […]

April 4, 2018 admin
மாணவர்கள் தற்கொலை: தமிழ்நாட்டுக்கு 3வது இடம்! Running News

மாணவர்கள் தற்கொலை: தமிழ்நாட்டுக்கு 3வது இடம்!

நாட்டில் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவது தொடர்பாக மத்திய மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் பாராளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் மாணவர்கள் தற்கொலை விகிதம் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிகரித்து வருவதாக குறிப்பிடப் பட்டுள்ளது. அதாவது நாடு ழுழுவதும் 2014-ம் ஆண்டு 8068 மாணவர்கள் தற்கொலை செய்தனர். 2015-ல் இது 8934 ஆக அதிகரித்தது. 2016-ல் 9474 மாணவர்கள் தற்கொலை செய்ததாக அதிலும்  தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2.68 மாணவர்கள் தங்களின் உயிரைத் தாங்களே […]

April 4, 2018 admin
ஜெ. பாணியில் போராட்டம் தொடரும்! – அதிமுக முதல் + துணை முதல் அமைச்சர் பேச்சு Running News

ஜெ. பாணியில் போராட்டம் தொடரும்! – அதிமுக முதல் + துணை முதல் அமைச்சர் பேச்சு

சுப்ரீம் கோர்ட் ஸ்கீம் என்ற பெயரில் ரீல் சுற்றி அனுப்பியிருக்கும் நிலையிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதம் மாலை 5-30 மணிக்கு நிறைவடைந்தது. உண்ணாவிரதம் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் பழரசம் வழங்கி முடித்து வைத்தார், போராட்டத்தின் இறுதியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “காவிரி […]

April 3, 2018 admin
காவிரி விவகாரம்: அதிமுக எம்.பி.முத்துக்கருப்பன் ராஜினாமா! Running News

காவிரி விவகாரம்: அதிமுக எம்.பி.முத்துக்கருப்பன் ராஜினாமா!

நம் தமிழக விவசாயிகள் கோரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் . முத்துக்கருப்பன் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். அதே சமயம்  .முத்துக்கருப்பனின் ராஜினாமா ஏற்கப்படுமா? அல்லது, நிராகரிக்கப்படுமா? என்பது ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கய்ய நாயுடு எடுக்கப் போகும் முடிவுகளில் தெரியவரும் என்று தகவல் வருகிறது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக முத்துக்கருப்பன், தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான வெங்கைய்யா […]

April 2, 2018 admin
புலி, வில், மீன் சின்ன கொடியுடன் நியூட்ரினோவை எதிர்த்து வைகோ பயணம்! Running News

புலி, வில், மீன் சின்ன கொடியுடன் நியூட்ரினோவை எதிர்த்து வைகோ பயணம்!

“கற்புக்கரசி கண்ணகி நீதி கேட்டு கிளம்பியதுபோல், நியூட்ரினோவை எதிர்த்து வைகோ பயணம் தொடங்கியுள்ளார்”என்று வைகோ நடைப்பயணத்தைத் தொடங்கி வைத்த ஸ்டாலின் குறிப்பிட்டார். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலை பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மதுரை, தேனி மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த திட்டத்தை கைவிடக்கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றன.இந்த நிலையில் ம.தி.மு.க. […]

March 31, 2018 admin
காவிரி பிரச்னை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு + மத்திய அரசு தனித் தனி மனுத் தாக்கல்! Running News

காவிரி பிரச்னை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு + மத்திய அரசு தனித் தனி மனுத் தாக்கல்!

காவிரி பிரச்னையில், மேலாண்மை வாரியம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழுவை, ஆறு வாரத்திற்குள் அமைக்க வேண்டும்’ என, பிப்., 16ல், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட நிலையில் இந்த விவகாரத்தில்  மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசும்  இந்த விஷயத்தில் 3மாத கால அவகாசம் கேட்டு மத்திய அரசும்  சுப்ரீம் கோர்ட்டில்  மனுத்தாக்கல் செய்துள்ளது. காவிரி நதிநீர் வழக்கில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்எசி தண்ணீரை ஒதுக்கீடு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இது […]

March 31, 2018 admin
ம.நடராஜன் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி  முழு விபரம்! Running News

ம.நடராஜன் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி முழு விபரம்!

புதிய பார்வை’ இதழ் ஆசிரியரும், தமிழகத்தில் நிழல் அரசியல் நடத்தி வந்தவருமான மறைந்த முனைவர் ம.நடராஜன் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி தஞ்சாவூரில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நடராஜனின் நெடுநாள் தோழர் பழ. நெடுமாறன் நிகழ்வுக்குத் தலைமை தாங்க, கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு படத்தைத் திறந்து வைத்தார். நடராஜன் நினைவு மலரை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட திவாகரன் பெற்றுக் கொண்டார்.  இந்த நிகழ்ச்சியில் திமுக சார்பில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த எல்.கணேசன் உடல் நலக் குறைவு […]

March 30, 2018 admin
உடனடி செய்திகள்