32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 216 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 216)
கடந்த நூறாண்டுகளில் காவிரி நீர் மூன்றில் ஒருபங்காய்ச் சுருங்கிவிட்டது! – வைரமுத்து வேதனை!. Running News

கடந்த நூறாண்டுகளில் காவிரி நீர் மூன்றில் ஒருபங்காய்ச் சுருங்கிவிட்டது! – வைரமுத்து வேதனை!.

’தமிழாற்றுப்படை’ வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை புதிய தலைமுறைக்கு கவிஞர் வைரமுத்து அறிமுகம் செய்துவருகிறார். தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில் ஒவ்வொரு கட்டுரையையும் அவரே வாசித்து அரங்கேற்றி வருகிறார். இதுவரை திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், அப்பர், திருமூலர், ஆண்டாள், வள்ளலார், மறைமலையடிகள், உ.வே.சாமிநாத அய்யர், பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், கருணாநிதி, கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. அந்த வரிசையில் இப்போது தொல்காப்பியர் பற்றிய கட்டுரையை வைரமுத்து எழுதியிருக்கிறார். இது […]

May 2, 2018 admin
கமல் & ரஜினியின் காலேஜ் விசிட்-டுகளுக்கு அரசு ஆப்பு! Running News

கமல் & ரஜினியின் காலேஜ் விசிட்-டுகளுக்கு அரசு ஆப்பு!

தமிழகத்தில் புதிதாக அரசியல் கட்சி தொடங்கியிருப்பதாக சொல்லும் கமல் நடிகர் கமல் மற்றும் கட்சி தொடங்க போவதாக சொல்லிக் கொண்டே இருக்கும் நடிகர் ரஜினி ஆகியோர் சமீப காலமாக சில கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுடன் உரையாடினார்கள். இதையடுத்து கல்லூரி வளாகங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக்கூடாது என்று உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் மஞ்சுளா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது குறித்து அவர் பிறப்பித்து இருக்கும் உத்தரவில் ”சமீப காலமாக கல்லூரி விழா, நிகழ்ச்சிகளில் கலந்து […]

May 2, 2018 admin
மதுரை அழகர் பச்சை பட்டுடுத்தி ஆற்றில் இறங்கினார்! – ஏன்? & அதனால்? Running News

மதுரை அழகர் பச்சை பட்டுடுத்தி ஆற்றில் இறங்கினார்! – ஏன்? & அதனால்?

சர்வதேச அளவில் பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, மீனாட்சியம்மன் கோயில் திருத் தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிலையில், மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பச்சைப் பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். இந்த நிகழ்வை காண அங்கு குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்தனர். வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளியதையொட்டி […]

April 30, 2018 admin
சென்னையில் சந்திரசேகர ராவ்! – ஸ்டாலினுடன்  3ம் அணி குறித்து அலோசனை! Running News

சென்னையில் சந்திரசேகர ராவ்! – ஸ்டாலினுடன் 3ம் அணி குறித்து அலோசனை!

மக்கள் விரோத போக்கை கையாளும் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டாட்சி முன்னணி (பெடரல் பிரண்ட்) என்னும் 3-வது அணியை தேசிய அளவில் அமைப்பதற்கான முயற்சிகளை தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் மேற் கொண்டு வருகிறார். இதற்காக அவர் ஏற்கனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில் சந்திரசேகர ராவ், இன்று சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.   […]

April 29, 2018 admin
ஆரம்பிச்சிட்டாருய்யா.. மன்னார்குடியில் அம்மா அணி !- திவாகரன் ஆரம்பிச்சிட்டார் Running News

ஆரம்பிச்சிட்டாருய்யா.. மன்னார்குடியில் அம்மா அணி !- திவாகரன் ஆரம்பிச்சிட்டார்

“அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என கட்சி ஆரம்பித்து போலி நாடகமாடிக் கொண்டிருக்கிறார் தினகரன்” என திவாகரன் பகிங்கரமாக குற்றம் சாட்டிய நிலையில் மன்னார்குடியில் அம்மா அணி என்ற பெயரில் அலுவலகத்தை திவாகரன் திறந்து வைத்தார்.. மறைந்த தமிழக முதலமைச்சரான ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஃபேமிலியைச் சேர்ந்த தினகரன் மற்றும் திவாகரன் இடையான மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது. தினகரன் யதேச்சதிகாரமாக நடந்துகொள்வதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் குற்றம் சாட்டியிருக் கிறார். கடந்த சில மாசங்களாக உள்ளுக்குள் புகைந்து […]

April 29, 2018 admin
11 எம் எல் ஏ-க்களை நீக்கச் சொல்லி சுப்ரீம் கோர்ட் போறோம்! – ஸ்டாலின் அறிவிப்பு Running News

11 எம் எல் ஏ-க்களை நீக்கச் சொல்லி சுப்ரீம் கோர்ட் போறோம்! – ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு அரசியலை புரட்டிப் போடப் போகிறது என்ற ரெஞ்சில் பலராலும் எதிர்பார்த்து வந்த 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை தள்ளுப்படி செய்து விட்டது சென்னை ஐகோர்ட். இதை அடுத்து இப்பிரச்ட்னை தொடர்பாக சட்டப்போராட்டம் தொடரும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அப்போது அதிமுக கொறடா உத்தரவை மீறி ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக […]

April 27, 2018 admin
தமிழ்நாட்டுலே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக  மட்டுமே! Running News

தமிழ்நாட்டுலே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே!

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் புதிது புதிகாக கட்சிகளை தொடங்கி, தேர்தல் கமிஷனில் பதிவு செய்து கொள்வது வாடிக்கைதான்; அதன் பின், அக்கட்சியை முறைப்படி நடத்துவதே இல்லை. அப்படி ஆரம்பித்த கட்சிகளின் தலைவர்கள் அண்மையில் வரும் தேர்தலில் மட்டும் ஏதாவது ஆதாயத்திற்க்காக ஏதாவதொரு கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துக் கொள்கிறார்கள். ஆக இப்படி ஓர் பிசினஸே நடப்பதன் காரணமாக கட்சிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்தபடிதான் உள்ளது. இந்நிலையில் தேர்தல் கமி‌ஷன் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் புதிய பட்டியலை […]

April 27, 2018 admin
குட்கா ஊழல் புகார்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்! Running News

குட்கா ஊழல் புகார்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்!

குட்கா ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி திமுக தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டு  உள்ளது. இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் மற்றும் சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கு வாய் புற்றுநோய், இதயக் கோளாறு உள்ளிட்ட பல கொடிய நோய்கள் அதிகரித்தது. இதையடுத்து கடந்த 2013 மே 8ம் தேதி தமிழக […]

April 26, 2018 admin
உதகை ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்ஸ் ஃபேக்டரி மூடியாச்சு! Running News

உதகை ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்ஸ் ஃபேக்டரி மூடியாச்சு!

கடந்த 50 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வந்த ஒரே பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் கடந்த 1967ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் தொடங்கப்பட்டது. ஆம். தமிழ்நாட்டில் தொழிற்சாலையில் பின்தங்கிய மாவட்டம் நீலகிரி மாவட்டம். ஊட்டியின் தட்பவெப்ப நிலையைக் கணக்கில் கொண்டு ஹிந்துஸ் தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை ஒன்று தொடங்கப்பட்டது. பின் 1986இல் ஒரு புதிய பகுதியும் தொடங்கப்பட்டு அமெரிக்க நிறுவனத்தின் கூட்டோடு பாலிஸ்டர் கலந்த எக்ஸ்ரே ஃபிலிம் தயாரிக்கப்பட்டது. […]

April 25, 2018 admin
கமல் ஹாசனும், ரஜினிகாந்தும் நிறைய கனவு காண்கிறார்கள்! – விஜயகாந்த் பேட்டி! Running News

கமல் ஹாசனும், ரஜினிகாந்தும் நிறைய கனவு காண்கிறார்கள்! – விஜயகாந்த் பேட்டி!

“அனைத்துக் கட்சி கூட்டத்தைப் பொறுத்தவரை அனைத்துமே ஸ்டாலினைச் சுற்றியே உள்ளன. மற்ற கட்சிகளுக்குத் தங்களின் தனிப்பட்ட அரசியல் நிலைபாடு இருக்கக் கூடாதா? அப்படிப்பட்ட கூட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொண்டு ஸ்டாலினைப் புகழ்ந்து பேச வேண்டும்? ஸ்டாலின் என்ன கருணாநிதியா? அவர் தன்னை கருணாநிதி போல நினைத்துக்கொண்டிருக்கலாம். கருணா நிதி மட்டும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருந்தால் முதல் ஆளாக நான் பங்கேற்றிருப்பேன். மு.க.ஸ்டாலினை எனக்குப் பிடிக்காது. நான் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார். […]

April 24, 2018 admin
உடனடி செய்திகள்