32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 215 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 215)
இரும்புக் குதிரைகள் படைத்த எழுத்துச் சித்தர் பாலகுமாரன் காலமானார்! Running News

இரும்புக் குதிரைகள் படைத்த எழுத்துச் சித்தர் பாலகுமாரன் காலமானார்!

பிரபல நாவலாசிரியரும் எழுத்துச் சித்தர் என்று கொண்டாடப்படும் எழுத்தாளர் பாலகுமாரன் இன்று காலமானார். நுரையீரல் நோய்த்தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 72. அமரர் சாவி இதழில் தொடராக எழுதிய ‘மெர்க்குரிப்பூக்கள்’ மூலம் ஏராளமான வாசகர்களைக் கட்டிப் போட்டவர் எழுத்தாளர் பாலகுமாரன்.  இரும்புக் குதிரைக’, ‘தலையணைப்பூக்கள்’, ‘கரையோர முதலைகள்’, ‘பயணிகள் கவனிக்கவும்’, ‘அகல்யா’ என 300க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதிய பாலகுமாரன், எண்பதுகளில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்து தன் எழுத்துக்களால் […]

May 15, 2018 admin
தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் 29ஆம் தேதி தொடக்கம்! Running News

தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் 29ஆம் தேதி தொடக்கம்!

தமிழ்நாடு சட்டசபையில் கடந்த மார்ச் 15ம் தேதி, 2018 – 19ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.அந்த பட்ஜெட் மீதான விவாதம் முடிந்த பின் சட்டசபை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே சட்டசபையில் பட்ஜெட் நிறைவேறிய பின்பு, அரசின் ஒவ்வொரு துறைகளும் அவற்றின் திட்டங்களை நிறை வேற்றுவதற்கு தேவையான நிதியைப் பெறவேண்டும்.இதற்கு சட்டசபையில் விவாதிக்கப்பட்டு, அவையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதற்காக துறை வாரியான நிதி ஒதுக்கீடு தொடர்பான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட […]

May 15, 2018 admin
சசிகலா இனி முன்னாள் சகோதரி! – திவாகரன் ஆவேசப் பேட்டி! Running News

சசிகலா இனி முன்னாள் சகோதரி! – திவாகரன் ஆவேசப் பேட்டி!

ஜெ. தோழியும் சிறைவாசியுமான சசிகலாவின் குடும்பத்தில் அவரது சகோதரர் திவாகரனுக்கும், டி.டி.வி. தினகர னுக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை நெருங்கி உள்ளது.ஆர். கே. நகர் தேர்தலில் வெற்ரி அடைந்த பின்னர் தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கியது குறித்து எங்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஆலோசிக்கவில்லை. மேலும் தினகரன் தன்னிச்சையாகவே செயல்படுகிறார் என்று திவாகரன் பரபரப்பு குற்றச் சாட்டு கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் “தற்போது திவாகரன் உடல்நலக்குறைவால் உளறிக் கொண்டு இருக்கிறார். இதை யாரும் […]

May 14, 2018 admin
என்னை அக்கா-ன்னு சொல்லாதேடா தம்பி! – திவாகரனுக்கு சசிகலா வக்கீல் நோட்டீஸ்! Running News

என்னை அக்கா-ன்னு சொல்லாதேடா தம்பி! – திவாகரனுக்கு சசிகலா வக்கீல் நோட்டீஸ்!

மறைந்த முதல்வர் ஜெ. மீதான் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். அவரது சகோதரரான திவாகரன் மற்றும் மருமகனான தினகரன் இடையே கடும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் குறை கூறி ஊடகங்களில் செய்தி வெளியிட்டு வருகிறார்கள். அதிலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு தினகரனின் கை ஓங்கியதால் திவாகரனால் கட்சியில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. தனது கணவர் ம.நடராஜன் இறந்தபோது 15 […]

May 11, 2018 admin
டிராஃபிக் விதிகளை மீறுபவர்களுக்கு பணமில்லா முறையில் அபராதம்! – சென்னையில் அறிமுகம் Running News

டிராஃபிக் விதிகளை மீறுபவர்களுக்கு பணமில்லா முறையில் அபராதம்! – சென்னையில் அறிமுகம்

ஹெல்மெட் போடாமலோ அல்லது கைவசம் லைசென்ஸ் இல்லாமல் அல்லது குடித்து விட்டு வாகனங்களை ஓட்டி  டிராஃபிக் விதிகளை மீறுபவர்களிடம், டிராஃபிக் போலீசார் லஞ்சம் வசூலிப்பதாகவும், அதேபோல் சாலை விதிகளை மீறுபவர்களும் தங்கள் குற்றங்களிலிருந்து தப்பிக்க லஞ்சம் கொடுப்பதாகவும், அதிக அளவில் புகார்கள் வந்தன.  இதையடுத்து, இதை தடுக்கும் விதமாக,  மின்னணு முறையில் -அதாவது பணமில்லா அபராதம்   அபராதம் செலுத்தும் வசதியை சென்னை மாநகர போலீஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.   தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப வாகன ஓட்டிகள் நேரடி அபராத […]

May 10, 2018 admin
பட்டி மன்ற பேச்சாளர் & நடுவர் அறிவொளி காலமானார் Running News

பட்டி மன்ற பேச்சாளர் & நடுவர் அறிவொளி காலமானார்

திருப்பங்கள் தரும் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகில் உள்ள ஹனீபா காலனியை சேர்ந்தவர் டாக்டர் அ.அறிவொளி. தமிழறிஞரும், ஆன்மீக இலக்கிய சொற்பொழிவாளருமான இவர் சிறந்த பட்டிமன்ற நடுவராகவும் திகழ்ந்து வந்தார். அவர் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 80. 1936ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி நாகை மாவட்டம் சிக்கல் கிராமத்தில் பிறந்தார் அறிவொளி. பள்ளிப்படிப்பை நாகப்பட்டினத்தில் படித்தார். கல்லூரிபடிப்பை தஞ்சையில் முடித்தார். அதன் பின்னர் அரசு வேலை உட்பட பல்வேறு இடங்களில் ஆசிரியா் பணியாற்றி வந்த […]

May 9, 2018 admin
ஜெயலலிதா நினைவிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கோலாகலம்! Running News

ஜெயலலிதா நினைவிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கோலாகலம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாநினைவிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா,  இன்று நடைபெற்றது. தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா  உடல் நலக்குறைவின் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அருகே ஜெ. வின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதா அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்படும் என முன்னமே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா […]

May 7, 2018 admin
வணிகர் சங்கக் கூட்டத்தில் புதிய அரசியல் கூட்டணி! Running News

வணிகர் சங்கக் கூட்டத்தில் புதிய அரசியல் கூட்டணி!

”தற்போது தமிழகத்தில் இருக்கும் வணிகர்கள் மீது இருமுனைத் தாக்குதல் நடந்து வருகிறது. அதில் ஒரு முனை மத்தியில் இருக்கக்கூடிய பி.ஜே.பி ஆட்சி, இன்னொரு முனை மாநிலத்தில் இருக்கக்கூடிய ஆட்சி. இந்த இரண்டு ஆட்சிகளும் வணிகர்கள் மீது தொடர்ந்து இருமுனைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது” என்று முக ஸ்டாலின் தெரிவித்தார்.. சென்னை திருவேற்காட்டில் நடைபெற்று வரும் வணிகர் சங்க பேரமைப்பு மாநாட்டில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பாமக தலைவர் ராமதாஸ் பங்கேற்றனர். ஆண்டு தோறும் மே […]

May 5, 2018 admin
தமிழகத்தில் படிக்கும் 1, 6, 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப்புத்தகங்கள் ரிலீஸ்! Running News

தமிழகத்தில் படிக்கும் 1, 6, 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப்புத்தகங்கள் ரிலீஸ்!

எதிர்காலத்தில் நீட் உள்பட எத்தகைய தேர்வுகள் வந்தாலும் அதை எதிர் கொள்ளும் வகையில் தமிழகத்தில் படிக்கும் 1, 6, 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப்புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். தேசிய கலைத்திட்டம் 2005ம் ஆண்டில் வெளியிடப்பட்ட நிலையிலும், மாநிலத்தில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் 7 ஆண்டுகளுக்கு முன்பும், மேல்நிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டம் 12 ஆண்டுகளுக்கு முன்பும் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கருத்தில் கொண்டு, […]

May 5, 2018 admin
7 பேண்ட்ஸ் இசைக்கலைஞர்கள் பங்குபெறும் “மெட்ராஸ் மேடை – 2018” பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!. Running News

7 பேண்ட்ஸ் இசைக்கலைஞர்கள் பங்குபெறும் “மெட்ராஸ் மேடை – 2018” பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!.

தமிழகத்தில் சினிமா தவிர்த்த இசையும் இசைக்கலைஞர்களும் கொண்டாடப்படுவதில்லை. ஆனால் இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் நடத்திய “THE CASTELESS COLLECTIVE” திறந்தவெளி இசை நிகழ்ச்சி அதை மாற்றியது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிய கேஸ்ட்லெவ் கலெக்டிவ் இசை நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு விவாதங்களையும் உருவாக்கியது. அதைத்தொடர்ந்து இந்தியாவில் முதன்முறையாக 7 பேண்ட்ஸ் மற்றும் பல தனியிசைக்கலைஞர்கள் பங்குபெறும் மெட்ராஸ் மேடை பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறது மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ் […]

May 4, 2018 admin
உடனடி செய்திகள்