32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 187 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 187)
பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது! Running News

பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது!

சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக சேவை வழங்கி வரும் பாம்பன் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, 84 நாட்களுக்குப் பிறகு ராமேஸ்வரத்துக்குப் பாம்பன் தூக்குப்பாலம் வழியாக இன்று மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. நம் தமிழகத்தின் பெரும் பகுதியையும் இராமேஸ்வரத்தையும் இணைப்பதுதான் பாம்பன் பாலம். இந்த இடத்தில் தரைவழி மற்றும் ரயில் பாதை இருந்தாலும், ரயில் பாதையே பாம்பன் பாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பாலத்தின் வரலாறு முன்னரே நம் ஆந்தை ரிப்போர்ட்டரில் வெளியாகி உள்ளது. […]

February 27, 2019 admin
மே மாத இறுதிக்குள் உள்ளாட்சித்தேர்தலுக்கான அறிவிப்பு!? Running News

மே மாத இறுதிக்குள் உள்ளாட்சித்தேர்தலுக்கான அறிவிப்பு!?

இதோ.. அதோ.. எதோ என்று ஏனோதானாவான காரணங்களால் தள்ளிப் போய் கொண்டே இருக்கும் தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு மே மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஜெயசுகின், தமிழ் நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் மாநிலத்தில் பல வளர்ச்சி பணிகள் தடைப்பட்டுள்ளன. அதனால்  தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, […]

February 27, 2019 admin
நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்குத் தடை!- ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி தமிழகம்

நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்குத் தடை!- ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி

தமிழக கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அருப்புக் கோட்டை பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடக்கும்வழக்கில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பலருக்கு தொடர்பிருப்பதாகவும், அவர்கள் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை என்றும் மனுதாரர் தெரிவித்திருந்தார். நிர்மலாதேவி யாருக்காக மாணவிகளிடம் அவ்வாறு பேசினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை என்று மனு வில் கூறப்பட்டிருந்தது. உயரதிகாரிகள் எனும் ஒற்றை வார்த்தையில் சுருக்கிவிடும் காவல்துறை […]

February 27, 2019 admin
இளவயதினரின் மனநலக்குழப்பத்திற்கு தீர்வு சொல்லும் ஹெல்ப்லைன்! Running News

இளவயதினரின் மனநலக்குழப்பத்திற்கு தீர்வு சொல்லும் ஹெல்ப்லைன்!

நம் நாட்டில் கடந்த 2015ஆம் ஆண்டு, பள்ளி, கல்லூரி மாணவர்கள் 8 ஆயிரத்து 934 பேர் தற்கொலை செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது. இதுதொடர்பாக, மக்களவையில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் உபேந்திர குஸ்வாகா எழுத்துப்பூர்வமாக பதிலளித் தில், கடந்த 2015ஆம் ஆண்டு, தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்சமாக, தமிழகத்தில் 955 மாணவர்கள் தற்கொலை செய்திருப்பதாக குறிப்பிட்ட்டிருந்தார். ஆந்திராவில் 360 மாணவர் களும், கேரளாவில் 374 பேரும், தெலங்கானாவில் 491 பேரும், கர்நாடகாவில் 597 […]

February 25, 2019 admin
அதிமுகவுடன் கூட்டணி ஏன் ?அன்புமணி  விளக்கம்! Running News

அதிமுகவுடன் கூட்டணி ஏன் ?அன்புமணி விளக்கம்!

தமிழக அரசியல் செய்திகளில் அன்றாடம் இடம் பெறும் கட்சிகளில் முக்கியமானது பாமக. அந்த வகையில் இங்குள்ளதிராவிடக் கட்சிகளுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்து வந்த பாமக, அதிமுகவை கடுமையாக விமர்சித்ததோடு மட்டுமல்லாமல் அமைச்சர்களுக்கு எதிராக ஆளுநரிடம் ஊழல் புகாரும் அளித்திருந்தது. இந் நிலையில் பார்லி மெண்ட்  தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில், முதல் ஆளாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது பாமக. இது சமூக வலைத்தளங்களில் அனல் பறக்கும் விவாதமாகிப் போன […]

February 25, 2019 admin
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஃப்ரீ வைஃபை! Running News

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஃப்ரீ வைஃபை!

தற்போது கொஞ்சம் டல்லடித்து வரும் சென்னை மெட்ரோ ரயில் சேவையை அதிகமானோர் பயன்படுத்து வகையில் மெட்ரோ நிலையங்களில் மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் முதற்கட்டமாக ஆலந்தூர், கிண்டி, வட பழனி மற்றும் அண்ணாநகர் டவர் என 4 மெட்ரோ நிலையங்களில் அறிமுகப் படுத்தப் பட்டு உள்ளது. மேலும் இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக இலவச வைஃபை வசதி செய்யப்படும் என்றும் இந்த வசதி மார்ச் மாதம் தொடங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்து […]

February 21, 2019 admin
தமிழகத்தில் 3வது அணி: கமல் தகவல்! Running News

தமிழகத்தில் 3வது அணி: கமல் தகவல்!

‘மக்கள் பலம் இருப்பதால் தேர்தலில் நாம் தனியே நிற்போம் என அறிவித்தேன், தனியே நிற்போம் என்றால் நான் தனித்து அல்ல; நாம் நிற்போம், மக்கள் பலம் எனக்கு உள்ளது என்பதால் கணிப்புகளை தாண்டி ஆதரவு உள்ளது, மக்கள் என் கையை பிடித்து நாடி பார்த்தில் புத்துயிர் இருப்பதால் நம்பிக்கையுடன் அனுப்பியுள்ளனர், எதிர்காலத்தை பற்றி கனவு காணும் பலரின் நினைவாக என்னை ஆசிர்வதித்து அனுப்பியுள்ளனர்’ என்று கமல் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது ஆண்டு விழாவை […]

February 21, 2019 admin
காங்கிரஸூக்கு புதுவையும் சேர்த்து 10 தொகுதிகள்!- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! Running News

காங்கிரஸூக்கு புதுவையும் சேர்த்து 10 தொகுதிகள்!- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

வரும் பார்லிமெண்ட் தேர்தலுக்காக தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 ம் புதுச்சேரி1மாக மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பார்லிமெண்ட் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், நேற்று அதிமுக-பாஜக-பாமக கூட்டணி உறுதி யானது. அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 5 தொகுதிகளும், பாமகவிற்கு 7 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் நேற்று திமுக எம்பி கனிமொழி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் […]

February 20, 2019 admin
வர இருக்கும் தேர்தலில் யாருடன் கூட்டணி ! – குடிகார சங்கம் தெளிவான அறிக்கை! Running News

வர இருக்கும் தேர்தலில் யாருடன் கூட்டணி ! – குடிகார சங்கம் தெளிவான அறிக்கை!

விரைவில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில், திமுக, அதிமுக போன்ற எந்தவொரு கட்சி யுடனும் கூட்டணி கிடையாது என்றும் டாஸ்மாக் பிரியர்களின் குடும்பங்களின் நலனை காக்கும் கட்சிகளோடு மட்டுமே கூட்டணி என்று தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கம் அறிவித்து உள்ளது. தெளிவுபடுத்தி உள்ளது. இந்த சங்க நிர்வாகிகள் சில சட்டமன்ற தொகுதிகளில், ஏற்கனவே அடித்த சரக்கு பாட்டிகள், வாட்டர் பாக்கெட்டுகள் ஆகியவற்றை கடையில் போட்டு, அதில் கிடைத்த பணத்தை  டெபாசிட் செய்து தேர்தலில் போட்டியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற தேர்தல் வரப் […]

February 20, 2019 admin
ஏன்.. இந்தக் கூட்டணி? என்று கேட்காத ஆளில்லை! – விளக்கம் அளித்துள்ளார் ராமதாஸ் Running News

ஏன்.. இந்தக் கூட்டணி? என்று கேட்காத ஆளில்லை! – விளக்கம் அளித்துள்ளார் ராமதாஸ்

பாமக தலைவர் ராமதாஸ், தான் சொல்வதை தானே நம்ப மாட்டார் என்பது ஊரறிந்த உண்மை தான். கடல் உள்ளளவும், வான் உள்ளளவு, பார் உள்ளளவும், கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் திமுக அதிமுக வுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டேன் என்று சூடம் கொளுத்தி சத்தியம் செய்யாத குறையாக பலக் கூட்டங்களில் சொல்லி வந்தார். மேலும் , எடப்பாடி அரசை பினாமி அரசு என்றும் இப்போதைய அமைச்சர்களின் ஊழல் பட்டியல் இதோ என்று கவர்னரிடம் புகார் […]

February 19, 2019 admin
உடனடி செய்திகள்