32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 185 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 185)
குக்கர் சின்ன வழக்கில் தீர்ப்பு வந்த மறுநாள் அம்முக -வினர் வேட்புமனு தாக்கல் – தினகரன் பேட்டி! Running News

குக்கர் சின்ன வழக்கில் தீர்ப்பு வந்த மறுநாள் அம்முக -வினர் வேட்புமனு தாக்கல் – தினகரன் பேட்டி!

நேஷனல் லெவலில் செல்வாக்குப் பெற்ற கட்சிகளுடன் இங்குள்ள முக்கியக் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும் சூழ்நிலையில்  “அமமுக வேட்பாளர்கள் ஒவ்வொரு தொகுதி யிலும் ஒவ்வொரு சின்னத்தில் நின்றாலும் மாபெரும் வெற்றியைப் பெறுவோம்” என்று அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன்  நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர் களை அறிவித்து பிரச்சாரத்தை துவங்கிவிட்டன. அமமுக சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அக்கட்சி […]

March 21, 2019 admin
நாற்பதுக்கு நாற்பது, பதினெட்டுக்கு பதினெட்டு என 100 சதவீத வெற்றி!- ஸ்டாலின் விருப்பம்! Running News

நாற்பதுக்கு நாற்பது, பதினெட்டுக்கு பதினெட்டு என 100 சதவீத வெற்றி!- ஸ்டாலின் விருப்பம்!

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி இல்லாமல் தி.மு.க. சந்திக்கிற முதல் தேர்தல் களம் என்பது அவரது தொண்டர்களான உங்களுக்கு மட்டுமல்ல, உங்களில் ஒருவனான எனக்கும் பெரும் சுமைதான். ஆனாலும் நமக்கு எதிராக நிற்கும் பாசிச சக்திக்கும் அதற்குத் துணை போகும் அடிமை மனநிலை கொண்டோருக்கும் ஜனநாயக ரீதியில் தக்க பாடம் புகட்டிடும் வகையில் நம்முடைய களப்பணி அமைந்திட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தன் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தந்தை […]

March 19, 2019 admin
பம்.. பம்..பம்.. ஆரம்பம் – தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்! Running News

பம்.. பம்..பம்.. ஆரம்பம் – தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்!

நாடு முழுக்க தேர்தல் ஜூரம் அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமை செயலகத்தில் அளித்த பேட்டியின் போது, ’தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற வகையில் வேட்புமனு பெறப்படும். வேட்புமனுவை பெறுவதற்கான விதிமுறைகள் அடங்கிய புத்தகங்கள், […]

March 19, 2019 admin
டிடிவி. தினகரனின் அமமுக வேட்பாளர் முதல் பட்டியல் ரிலீஸ்! Running News

டிடிவி. தினகரனின் அமமுக வேட்பாளர் முதல் பட்டியல் ரிலீஸ்!

தமிழக அரசியலில் தனி ஒருவராக வலம் வந்து தனிக் கவனம் பெற்று வரும் டிடிவி தினகரன் தன் அமமுக சார்பில் 24 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டார். நம்ம தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற  தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. தற்போது தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.   […]

March 17, 2019 admin
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு ; என்ன ஸ்பெஷல்? Running News

பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு ; என்ன ஸ்பெஷல்?

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து வர இருக்கும் பார்லிமெண்ட் தேர்தலை எதிர்கொள்ளும் பாமக இங்கு ஜஸ்ட் ஏழே தொகுதிகளில் போட்டியிட்டாலும் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை தனியாக வெளியிட்டு வழக்கம் போல் சலசலப்பை ஏற்படுத்தி விட்டனர். சில முரண்பாடான அறிவிப்புகளுடன் சமூக பாதுகாப்பு, வேளாண்மை, பயிர்க்கடன் தள்ளுபடி, ஊரக வேலைவாய்ப்பு, நீர்ப்பாசனம், சுற்றுச்சூழல், மாநில சுயாட்சி, நல்ல ஆளுகை, சமூக நீதி, தனியார் துறை இடஒதுக்கீடு, மாநில முன்னுரிமை, வருமான வரி, ஜிஎஸ்டி, மதுபுகை ஒழிப்பு, […]

March 16, 2019 admin
சிலைக் கடத்தல் : இந்து அற நிலையத்துறை முன்னாள் ஆணையர் கைது! Running News

சிலைக் கடத்தல் : இந்து அற நிலையத்துறை முன்னாள் ஆணையர் கைது!

நம் நாட்டில் சுமார் 70 லட்சம் சிலைகள் உள்ளன. இதில் சுமார் 13 லட்சம் பொருள்களுக்கு மட்டுமே முறையான ஆவணப் பதிவு உள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டுமே இந்தியாவுக்குச் சொந்தமான சிலைகள் உள்ளிட்ட 4,408 கலைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை சொல்கிறது. தமிழகத்தில் உள்ள 37,000 கோவில்களில் கிட்டத்தட்ட 4.3 லட்சத்துக்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன என்று இந்து அறநிலையத் துறை […]

March 15, 2019 admin
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிப்பு! Running News

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிப்பு!

வர இருக்கும் பார்லிமெண்ட் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்தக் கூட்டணிக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு ஏற்கெனவே முடிந்துவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக கட்சிகளுக்கு தலா 2, மதிமுக, […]

March 15, 2019 admin
நம்ம சென்னை பையன் லிடியனுக்கு ஏ ஆர் ரஹ்மான் பாராட்டு விழா! Running News

நம்ம சென்னை பையன் லிடியனுக்கு ஏ ஆர் ரஹ்மான் பாராட்டு விழா!

அமெரிக்காவில் நடைபெற்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ’தி வேர்ல்ட் பெஸ்ட்’ நிகழ்ச்சி யில் பட்டத்தையும், 10 லட்சம் அமெரிக்க டாலர்கள்(இtந்திய மதிப்பில் சுமார் 7 கோடி) பரிசுத் தொகையை வென்று உலகையே திரும்பிப் பார்க்க செய்துள்ளார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம். அமெரிக்காவில் ’தி வேர்ல்ட் பெஸ்ட்’ என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதனை புகழ்பெற்ற ஹாலிவுட் தொகுப்பாளரான ஜேம்ஸ் கார்டன் தொகுத்து வழங்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து […]

March 15, 2019 admin
மோடிக்கு ஜெயில் கன்ஃபார்ம்! – ராகுல் பேச்சு! Running News

மோடிக்கு ஜெயில் கன்ஃபார்ம்! – ராகுல் பேச்சு!

பிரதமர் மோடி, அவருடைய நண்பர்களான தொழிலதிபர்களுக்காகவும் கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்காகவும் மட்டுமே பணியாற்றுகிறார். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு  மோடி சிறைக்கு போவார்…. என்று பேசிய காங்கிரஸ் தலவர் ராகுல்காந்தி, மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால்,   தமிழகத்தில் ஸ்டாலின்முதல்வராவார்.. மேலும் தமிழகத்தில் தொழில் துறையை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார். நாகர்கோவிலில் இன்று மாலை நடைபெற்ற திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி […]

March 13, 2019 admin
அசிஸ்டெண்ட் புரொபசர் ‘மாமி’ நிர்மலாதேவி-க்கு ஜாமின்! Running News

அசிஸ்டெண்ட் புரொபசர் ‘மாமி’ நிர்மலாதேவி-க்கு ஜாமின்!

பலான  செயலுக்கு அழைக்கும் விதமாக மாணவிகளுடன் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப் பட்டிருந்த நிலையில் அவருக்கு மதுரை ஐகோர்ட் கிளை ஜாமின் வழங்கியது . தமிழகத்தில் கல்லூரி மாணவிகளிடையே நிர்மலா தேவி போனில் பேசிய விவகார வழக்கு கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, […]

March 12, 2019 admin
உடனடி செய்திகள்