வர இருக்கும் தேர்தலில் யாருடன் கூட்டணி ! – குடிகார சங்கம் தெளிவான அறிக்கை!

வர இருக்கும் தேர்தலில் யாருடன் கூட்டணி ! – குடிகார சங்கம் தெளிவான அறிக்கை!

விரைவில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில், திமுக, அதிமுக போன்ற எந்தவொரு கட்சி யுடனும் கூட்டணி கிடையாது என்றும் டாஸ்மாக் பிரியர்களின் குடும்பங்களின் நலனை காக்கும் கட்சிகளோடு மட்டுமே கூட்டணி என்று தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கம் அறிவித்து உள்ளது. தெளிவுபடுத்தி உள்ளது. இந்த சங்க நிர்வாகிகள் சில சட்டமன்ற தொகுதிகளில், ஏற்கனவே அடித்த சரக்கு பாட்டிகள், வாட்டர் பாக்கெட்டுகள் ஆகியவற்றை கடையில் போட்டு, அதில் கிடைத்த பணத்தை  டெபாசிட் செய்து தேர்தலில் போட்டியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற தேர்தல் வரப் போவதை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் பலத் தரப்பட்ட தேர்தல் கூட்டணி குறித்து விறுவிறுப்பாகவும், மும்முரமாகவும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். திமுக ஒருபுறமும், அதிமுக ஒருபுறமும் கூட்டணி அமைப்பது குறித்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், ஜாதி சங்கங்களை அணுகி ஆதரவுகள் கோரி வருகின்றன. அப்படி பேசி முடிந்த கூட்டணி குறித்து பல வகையான வசவுகளும் அரங்கேறி வருகின்றன. இப்படி கூட்டணி அமைந்தாலும் இன்னும் வரு நாட்களில், எந்த தொகுதி யாருக்கு என்று பேசி முடிப்பதில் கொஞ்சம் பிணக்கு ஏற்பட வாய்ப்புண்டு.

இந்நிலையில்தான் டாஸ்மாக் மதுக்குடிப்போர் சங்கம் தாங்கள் திமுக அதிமுக உள்பட எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்து உள்ளது. நம் இந்தியாவில் எத்தனை பேர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர் என்பது குறித்து பிரபலமான எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு ஆய்வை நடத்தியது. அந்த ஆய்விற்காக 186 மாவட்டங்களில் உள்ள 2,00,111 வீட்டிற்கு நேரடியாக சென்று மொத்தம் 16 கோடி பேரிடம் கருத்து கேட்ட வெளியிட்ட ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை தந்துள்ளது.

அதில் தான்.. இத்தனை பேர் நம்மை சுற்றி குடிமகன்களாக உள்ளனர் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. ஆய்வின்படி, இந்தியாவில் 5.7 கோடி பேர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் சத்தீஸ்கர், கோவா, திரிபுரா, பஞ்சாப் மற்றும் அருணாச்சலபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில்தான் அதிகமாக மக்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். அதே சமயம் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை 5.20% அதிகரித்திருக்கிறது. இதே வயதுடைய பெண்களிடையேயும் மதுப் பழக்கம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து இருக்கிறது என்று முன்னரே ஒரு ஆய்வறிக்கை தெரிவித்திருந்தது.

இதனிடையேதான் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க மாநில தலைவர் செல்லப் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் நாடாளுமன்ற தேர்தலில், திமுக, அதிமுக கூட்டணியில் சேரும் எந்த கட்சியுடனும் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சேராது, ஆதரிக்காது. 61.4% டாஸ்மாக் பிரியர்களின் குடும்பங்களின் நலனை காக்கும் கட்சிகளோடு மட்டுமே கூட்டணி சேரும். இல்லையேல் தனித்து தேர்தலை சந்திக்கும்” என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!