32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 183 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 183)
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் கருத்துக் கணிப்பும் லயோலா மறுப்பும்! Running News

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் கருத்துக் கணிப்பும் லயோலா மறுப்பும்!

வரும் பார்லிமெண்ட் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 27-33 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என பண்பாடு மக்கள் தொடர்பகம் தங்களை முன்னாள் லயோலா கல்லூரி மாணவர்கள் என்று வெளியிட்ட கருத்துக் கணிப்பை அடுத்து மேற்படி பண்பாடு மக்கள் தொடர்பகத் துக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று லயோலா நிர்வாகம் தெரிவித்துள்ளது. ‘பண்பாடு மக்கள் தொடர்பகம்’ தேர்தல் நேரத்தில் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில், எந்தக் கட்சி […]

April 5, 2019 admin
லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்திற்கு இடைக்காலத் தடை ! Running News

லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்திற்கு இடைக்காலத் தடை !

தமிழக லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற டிஎன்பிஎஸ்சி தலைவர் ராஜாராம், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஆறுமுகம் நியமிக்கப்பட்ட நிலையில் இருவரின் நியமனத்திலும் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என தெரிகிறது என்று தெரிவித்த நீதிபதிகள் மேற்படி இருவர் நியமனத்துக்கு தடை விதித்தனர். நம் நாட்டில் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதி நிதிகள், உயர் அதிகாரிகள் தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் செய்தல் ஆகியவற்றை விசாரிக்க லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா […]

April 5, 2019 admin
டிடிவி தினகரனின் அமமுக-வுக்கு எதிரான போக்கில் தேர்தல் கமிஷன்! தமிழகம்

டிடிவி தினகரனின் அமமுக-வுக்கு எதிரான போக்கில் தேர்தல் கமிஷன்!

வர இருக்கும் தேர்தலை நடத்தும் நம்ம தேர்தல் கமிஷன் நடுநிலையோடு செயல்படுவதில்லை என்று சில பலர்  பகீங்கரக் குற்றச்சாட்டு வைத்த வண்ணம் உள்ளனர். இதனிடையே நம்ம தமிழகத்தில் நடைபெற உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் அமமுக வேட்பாளர்களின் பெயரிலேயே சுயேட்சைகளை களமிறக்கி அவர்களுக்கு குக்கர் சின்னமும் வழங்கச் செய்து திட்டமிட்டு தினகரன் தரப்பை பழி வாங்கியுள்ளது அதிமுக. இதற்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருந்திருக்குமோ என்ற கேள்வியும் எழாமலில்லை. அமமுக கட்சிக்கு குக்கர் […]

April 4, 2019 admin
டிக் டாக் ஆப்-புக்கு எச்சரிக்கை: குறும்பு வீடியோக்களுக்கு தடை! – ஐகோர்ட் அதிரடி! Running News

டிக் டாக் ஆப்-புக்கு எச்சரிக்கை: குறும்பு வீடியோக்களுக்கு தடை! – ஐகோர்ட் அதிரடி!

சகல தரப்பினரையும் தன்னுள் இழுத்துப் போட்டு கொண்டிருக்கும் யூ டியூப் சேனலில் ப்ராங் ஷோ என்பது ரொம்ப பிரபலம். அதாவது சாலையில் நடந்து செல்பவர்களிடம் சென்று ஏதாவது கலாய்த்து பிறகு கேமராவை காட்டுவார்கள். இதை யு-டியூபில் மில்லியன் கணக்கானோர் விரும்பி பார்ப்பார்கள். ஆனால் இப்படியான குறும்புத்தனமான வீடியோ எடுப்பதற்கான செயல்களால் தனி நபர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. ஒரு சிலர் இந்த நிகழ்வுகளால் அதிர்ச்சிக்குள்ளாகி உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. ஆகையால் அதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை […]

April 3, 2019 admin
வாயை மூடி பேசவும்! – மதுரை ஆதீதனத்துக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை! Running News

வாயை மூடி பேசவும்! – மதுரை ஆதீதனத்துக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை!

அந்த அதிமுக-வோடு நாங்க இணையப் போறோம்-முன்னு  தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வந்தால், மதுரை ஆதீனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் அறிக்கையின் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவுடன் அமமுக இணைவது உறுதி என்றும், இரு கட்சிகளும்  இணைய மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், மதுரை ஆதினம் தெரிவித்து வருகிறார். யாருக்கோ உதவுவதற்காக இப்படி பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பினால், […]

April 1, 2019 admin
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு! தமிழகம்

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு!

இந்தியா முழுவதும் கடந்தாண்டு ரூ.16,365.20 கோடி சுங்கக் கட்டணம் வசூல் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ.1756.57 கோடியும், ராஜஸ்தானில் ரூ.2,391.39 கோடியும் சுங்கக் கட்டணம் வசூலாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடிகளில், ஏப்ரல் 1 ம் தேதி முதல், 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில், 461-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளை, சாலை போக்குவரத்து […]

March 30, 2019 admin
சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி!- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு Running News

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி!- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

சென்னை சரவணபவனில் வேலை செய்து வந்த பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் அண்ணாச்சி என்ற அடைமொழியை விரும்பிப் போட்டுக் கொள்ளும் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட் இன்று உறுதிசெய்து உத்தரவிட்டு அவர்  கோர்ட்டில் ஆஜராகவும் கெடு விதித்துள்ளது.. சென்னையில் உயர்தர சைவ உணவகம் என்ற பெயரில் கொஞ்சம் டேஸ்ட்டான உணவைக் கொடுத்து எக்கச்சக்கமான பில் போட்டும் விறு விறுவென வளர்ச்சி அடைந்த சரவண பவன் ஓட்டல் அதிபர் அண்ணாச்சி […]

March 29, 2019 admin
இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆன டி.டி.வி. தினகரனின் பரிசுப் பெட்டி  சின்னம்! Running News

இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆன டி.டி.வி. தினகரனின் பரிசுப் பெட்டி சின்னம்!

பார்லிமெண்ட் தேர்தல் மற்றும் அசெம்பளி பை எலெக்‌ஷனில் போட்டியிடும் டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு கிப்ட் பாக்ஸ் (பரிசுப்பெட்டி) சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் நேற்றிரவு உத்தரவிட்ட விஷயம் இன்று காலை முதல் மாலை வரை இந்திய அளவில் ட்ரெண்டிங்காகி விட்டதுதான் ஹைலைட் . தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேட்பு மனுத்தாக்கல் முடிந்து, அதன் இறுதிகட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ள நிலையில், […]

March 29, 2019 admin
தமிழகத்தில் எத்தனை பேர்  தேர்தலில் போட்டியிட மனுத் தாக்கல் தெரியுமா? தமிழகம்

தமிழகத்தில் எத்தனை பேர் தேர்தலில் போட்டியிட மனுத் தாக்கல் தெரியுமா?

தமிழ் நாட்டில் பார்லிமெண்ட் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முடி வடைந்தது. 39 தொகுதிகளுக்கும் சேர்த்து 1587 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் 932 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி பாராளுன்ற தேர்தல் வாக்குப்பதிவுடன், 18 சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 18ந்தேதி தொடங்கி நேற்றுடன் கடந்த 26ந்தேதி முடிவடைந்தது. நேற்று (27ந்தேதி) வேட்புமனு […]

March 28, 2019 admin
சி விஜில் மூலம் 23 ஆயிரம் புகார்கள் வந்திருக்குது..! ஆனா..? – எலெக்‌ஷன் கமிஷன் நோ ஆக்சன்! Running News

சி விஜில் மூலம் 23 ஆயிரம் புகார்கள் வந்திருக்குது..! ஆனா..? – எலெக்‌ஷன் கமிஷன் நோ ஆக்சன்!

பாராளுமன்றத் தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரத்துடன் புகார் தெரிவிக்க சி-விஜில் என்ற மொபைல் ஆப்-ஐ வடிவமைத்துள்ளது. இதில் பொதுமக்கள் ஆதாரத்துடன் எளிதாக புகார்களை தெரிவிக்கலாம். இந்த சி-விஜில் என்ற மொபைல் ஆப்-இல் புகார் செய்யப்படும் விபரங்கள் மாவட்ட தேர்தல் அலுவல ருக்கு வரப்பெற்றவுடன் சம்பந்தப்பட்ட பறக்கும் படை அல்லது நிலைக்கண்காணிப்புக் குழுவிற்கு அனுப்பப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவித்தவருக்கு, புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை […]

March 28, 2019 admin
உடனடி செய்திகள்