32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 182 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 182)
அமுமுக பொதுச் செயலாளரரானார் டிடிவி. தினகரன்! தமிழகம்

அமுமுக பொதுச் செயலாளரரானார் டிடிவி. தினகரன்!

ஆளும் கட்சியான அதிமுகவுக்கு., எதிர் கட்சியான திமுகவுக்கும் டஃப் ஃபைட் கொடுத்து வரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளராக இருந்த டிடிவி.தினகரன் பொதுச்செயலாளராக நேற்று அறிவிக்கப்பட்டார். அ.ம.மு.க.வை தனிக்கட்சியாக பதிவு செய்யும் வேலைகள் நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அ.ம. .க) உதயமானது. டி.டி.வி. தினகரனால் தோற்றுவிக்கப்பட்ட அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், […]

April 19, 2019 admin
தமிழகத்தில் 70.90 %, இடைத் தேர்தலில் 71.62 % வாக்குகள் பதிவு! – வீடியோ!! Running News

தமிழகத்தில் 70.90 %, இடைத் தேர்தலில் 71.62 % வாக்குகள் பதிவு! – வீடியோ!!

நம் நாட்டின் பார்லிமெண்ட் இரண்டாம் கட்டதேர்தல் நடைபெறும் 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ஏப்ரல் 18ம் தேதி வியாழக்கிழமை தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அதே சமயம் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் அங்கு மட்டும் இரவு 8 மணி வரை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். தேசம்  முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடை பெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதலில் […]

April 18, 2019 admin
வாக்களிக்கும் அனைவருக்கும் உணவு விடுதியில் 10 சதவீதம் தள்ளுபடி! Running News

வாக்களிக்கும் அனைவருக்கும் உணவு விடுதியில் 10 சதவீதம் தள்ளுபடி!

தமிழகத்தில் 17வது மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், வாக்காளர்களை உற்சாகப்படுத்தவும், வாக்களிக்கும் அனைவருக்கும் உணவு விடுதியில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தமிழ்நாடு உணவு விடுதிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி,தமிழகத்தில் உள்ள சரவண பவன், சங்கீதா, ஹாட் சிப்ஸ், வசந்த பவன் உள்ளிட்ட சுமார் 10 ஆயிரம் உணவு விடுதிகளில் 10 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது.சென்னையில் மட்டும் சுமார் 1200 உணவு விடுதிகளில் இந்த சலுகை வழங்கப்படுகிறது. […]

April 17, 2019 admin
பார்லிமெண்ட் வேட்பாளர்களில் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள், குற்றப் பின்னணி கொண்டவர்கள்? Running News

பார்லிமெண்ட் வேட்பாளர்களில் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள், குற்றப் பின்னணி கொண்டவர்கள்?

பார்லிமெண்ட் தேர்தல் பல கட்டங்களாக நம் நாட்டில் நடைபெற்று வருகிறது. அதன்படி, 2 ஆம் கட்டமாக தமிழகம் உள்பட சில மாநிலங்களில் வரும் 18ம் தேதி அதாவது நாளை மறுநாள் நடை பெற இருக்கிறது. இந்நிலையில், மாற்றத்திற்கான ஜனநாயக அமைப்பு (Association For Democratic Reforms – ADR) தமிழகத்தில் போட்டியிடும் 845 வேட்பாளர் களில், 802 வேட்பாளர்களைக் குறித்து நடத்திய ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவில் அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் […]

April 16, 2019 admin
குட்கா, பான் மசாலாவுக்கு நிரந்தரத் தடை ஏன் விதிக்கலை? ஐகோர்ட் டவுட்! தமிழகம்

குட்கா, பான் மசாலாவுக்கு நிரந்தரத் தடை ஏன் விதிக்கலை? ஐகோர்ட் டவுட்!

2013 ஆம் ஆண்டு தமிழக அரசாங்கம் புகையிலை, குட்கா பொருட்களுக்கு தடைகளை விதித்தது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஒழுங்குமுறையால் இந்த தடை நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில். இந்த  குட்கா, பான்மசாலா போன்ற பொருள்களை தமிழ்நாட்டில் விற்க நிரந்தர தடை விதிக்காதது ஏன் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். குடிநோயைப் போலவே புகையிலை சார்ந்த எந்த ஒரு பழக்கமும் தீவிர நோயே. அதனால்தான் மெல்லும் புகையிலைப் பொருட்களுக்கு மட்டும் தடை விதித்திருக்கிறது தமிழக அரசு. […]

April 16, 2019 admin
வேலூர் தொகுதி எம்.பி. தேர்தல் ரத்து! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு! Running News

வேலூர் தொகுதி எம்.பி. தேர்தல் ரத்து! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

இன்னும் 36 மணி நேரத்தில் தமிழகமெங்கும் வாக்குப்பதிவு நடக்க இருந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தலை ரத்து செய்வதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 14-ம் தேதி தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று எண்.8 வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து மக்களவைக்கு ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை குடியரசுத் தலைவர் ரத்து செய்ததாக தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் ஷெஃபாலி ஷரன் தெரிவித்துள்ளார். அண்மையில் […]

April 16, 2019 admin
பரப்புரைச் செய்ய தேர்தல் கமிஷன் கெடு! தமிழகம்

பரப்புரைச் செய்ய தேர்தல் கமிஷன் கெடு!

இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், அடுத்த மாதம் 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி முடிவடைந்தது. அதில் 17 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் […]

April 15, 2019 admin
விஜயகாந்த சென்னையில் நாளை பிரச்சாரம் செய்கிறார் : ஆனா பேச மாட்டார்..? Running News

விஜயகாந்த சென்னையில் நாளை பிரச்சாரம் செய்கிறார் : ஆனா பேச மாட்டார்..?

பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. கடந்த சில தேர்தலில் சூறாவளிப் பரப்புரை செய்து தனிக் கவனம் பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக் குறைவால் தொடர் சிகிச்சை பெற்றப்ப்படி ஓய்வில் இருக்கிறார். அண்மைய் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகச் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்கள் முன் சென்னை திரும்பினார். […]

April 14, 2019 admin
விஜயகாந்த் குரல் இம்புட்டு மோசமாயிடுச்சே! – வீடியோ ரிப்போர்ட் Running News

விஜயகாந்த் குரல் இம்புட்டு மோசமாயிடுச்சே! – வீடியோ ரிப்போர்ட்

உடல் நலம் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்  அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து  தமிழகம் திரும்பி விட்ட நிலையில், இம்முறை பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று வரை பிரச்சாரக் களத்துக்கு விஜயகாந்த் வரவே இல்லை. ஆனால் இன்று தன் ட்விட்டர் பேஜில் கேப்டன் குரல் என்றொரு வீடியோ பதிவை போட்டுள்ளார். அதில் விரைவில் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவித்த விஜயகாந்த், 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிதான் வெற்றிபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் எல்லாக் கேள்விகளுக்கும் ஒரு வரியில் […]

April 9, 2019 admin
தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 தொகுதிகளுக்கு மே 19ந் தேதி இடைத்தேர்தல்! Running News

தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 தொகுதிகளுக்கு மே 19ந் தேதி இடைத்தேர்தல்!

தமிழ்நாட்டில் மேலும் காலியாக இருக்கும் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய தொகுதிகளுக்கும் மே 19ல் தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. நடக்க இருக்கும் பார்லிமெண்ட் மற்றும் இடைத்தேர்தலகளை ஒட்டி தமிழகத்தில் எக்கச்சக்கமான அரசியல் குளருபடிகள் அன்றாடம் நடந்த வண்ணம் உள்ளது. அதிகும் இது வரை தமிழக அரசியல் களம் காணாத வகையில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் ஆளும் கட்சியான அதிமுக தோற்றால் தமிழக அரசே […]

April 9, 2019 admin
உடனடி செய்திகள்