32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 180 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 180)
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நினைவஞ்சலிக் கூட்டம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி! Running News

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நினைவஞ்சலிக் கூட்டம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி!

தமிழகத்தையே அதிர வைத்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மே 22ம் தேதி நினைவஞ்சலிக் கூட்டம் நடத்த ஐகோர்ட் மதுரை கிளை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது உயிரிழந்த 13 பேருக்கு நினைவஞ்சலிக் கூட்டம் மற்றும் பேரணி நடத்த உத்தரவிடக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நினைவஞ்சலிக் கூட்டம் நடத்த சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. அதன்படி […]

May 9, 2019 admin
பிளஸ் 1 ரிசல்ட் வந்துடுச்சு ; ஈரோடு முதலிடம்! தமிழகம்

பிளஸ் 1 ரிசல்ட் வந்துடுச்சு ; ஈரோடு முதலிடம்!

தமிழ்நாட்டில் பிளஸ்1 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகம் மற்றும்  புதுச்சேரியில் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 6 -ஆம் தேதி தொடங்கி 22 -ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 650 மாணவ – மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததையடுத்து தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுள்ளது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற […]

May 8, 2019 admin
சபாநாயகர் 3 எம்.எல்.ஏக்களுக்கு அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை! – சுப்ரீம் கோர்ட் Running News

சபாநாயகர் 3 எம்.எல்.ஏக்களுக்கு அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை! – சுப்ரீம் கோர்ட்

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு எதிராக சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது சுப்ரீம் கோர்ட். மேலும் சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் 2 பேர் தொடர்ந்த வழக்கில் விளக்கம் அளிக்குமாறு சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால் விளக்கம் கேட்டு தங்களுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ் தொடர்பாக மேல்நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்கக் கோரி எம்எல்ஏக்களான ஏ.ரத்தினசபாபதி, வி.டி.கலைச்செல்வன் ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள […]

May 6, 2019 admin
உள்ளாட்சித் தேர்தல் நடத்த சான்ஸ் இப்போதைக்கு இல்லை! – தமிழக அரசு தகவல்! Running News

உள்ளாட்சித் தேர்தல் நடத்த சான்ஸ் இப்போதைக்கு இல்லை! – தமிழக அரசு தகவல்!

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் சூழல் தற்போது இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி,ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில், தமிழக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், “தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் சூழல் இப்போது இல்லை. மக்களவை தேர்தல் நடந்து […]

May 4, 2019 admin
தமிழ் படங்களில் நடிக்கத் தயார்!- மிஸ் சூப்பர் Globe’ அக்‌ஷரா ரெட்டி பேட்டி – விடியோ! Running News

தமிழ் படங்களில் நடிக்கத் தயார்!- மிஸ் சூப்பர் Globe’ அக்‌ஷரா ரெட்டி பேட்டி – விடியோ!

இந்திய அளவில் 22 மாநிலங்கள் கலந்துகொண்ட “மிஸ் சூப்பர் globe 2019” அழகிப் போட்டியில் சென்னையை சேர்ந்த மிஸ். அக்சர ரெட்டி என்பவர் தமிழ்நாடு சார்பில் அந்தப் போட்டியில் கலந்துகொண்டு அழகி பட்டம் வென்றார். இதைத்தொடர்ந்து அவர் இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் சார்பில் மிஸ் சூப்பர் குளோப் இந்தியா 2019 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்ததாக அக்டோபர் மாதம் துபாயில் 45 நாடு […]

May 4, 2019 admin
ஏப்ரல் 1 முதல் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை பதிவு செய்வது Running News

ஏப்ரல் 1 முதல் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை பதிவு செய்வது

 எதிர்வரும்  ஏப்ரல் 1 முதல் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை பதிவு செய்வது தமிழகம் முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் உள்ள  வாகனங்களில் டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகள் பொறுத்துவதை நடைமுறைப் படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதன் படி டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகளில் பார்க் கோட் இடம் பெற்றிருக்கும். பார்கோடை ஸ்கேன் செய்து பார்த்தால் வாகன உரிமையாளர் பெயர், முகவரி, எஞ்சின் மற்றும் சேசிஸ் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் […]

May 3, 2019 admin
தமிழக நீர்நிலைகளின் பரப்பளவை 6 மாதங்களில் அளவிட வேண்டும் – ஐகோர்ட் உத்தரவு Running News

தமிழக நீர்நிலைகளின் பரப்பளவை 6 மாதங்களில் அளவிட வேண்டும் – ஐகோர்ட் உத்தரவு

‘சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய பகுதிகளில் மொத்தம் 3,600 நீர்நிலைகள் இருக்கின்றன. அதில் 20 – 30 நீர்நிலைகளைக் குடிநீருக்குப் பயன்படக்கூடியவையாக மாற்றினாலே சென்னை யைச் சுற்றியுள்ள பகுதிகளில், ஓரளவிற்குத் தண்ணீர் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காணலாம். காவேரி டெல்டா பகுதிகளில் நீர் நிலையங்களைத் தூர்வாரினால் கடைமடை வரை நீர் செல்லும் வாய்ப்பிருக்கிறது. நீர்நிலைகளைப் பாதுகாக்க நாம் ஐந்து விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். கழிவு நீரை நீர் நிலைக்குள் வர விடாமல் தடுப்பது, கட்டுமானக் கழிவுகளை உள்ளே கொட்டாமல் […]

May 2, 2019 admin
மெட்ரோ ரயில் ஊழியர்களின் 3 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்! தமிழகம்

மெட்ரோ ரயில் ஊழியர்களின் 3 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றும் 7 ஊழியர்கள், பணியாளர் சங்கத்தை தொடங்கினர். இதைத் தொடர்ந்து 7 பேரையும் மெட்ரோ ரயில் நிறுவனம் பணிநீக்கம் செய்தது. இதைக்கண்டித்து கடந்த 3 நாட்களாக மெட்ரோ ரயில் நிறுவன ஊழியர்கள், வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இப்போராட்டம் தொடர்பாக தொழிலாளர் நலத்துறை, மெட்ரோ நிர்வாகத்தினர், ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து இன்று முதல் மெட்ரோ ரயில் ஊழியர்கள் […]

May 1, 2019 admin
10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது! Running News

10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது!

தமிழ்நாடு முழுவதும் எஸ் எஸ் எல் சி எனப்படும்  10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இம்முறைத் தேர்வு எழுதியவர்களில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு கடந்த மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மார்ச் 29ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 9,97,794 மாணவ- மாணவிகள் எழுதினார்கள். ரேங்க் பட்டியல் முறையை கல்வித்துறை ரத்து செய்து, தேர்ச்சி […]

April 29, 2019 admin
மெட்ரோ ரயில் ஊழியர்கள் திடீர் உள்ளிருப்புப் போராட்டம்! தமிழகம்

மெட்ரோ ரயில் ஊழியர்கள் திடீர் உள்ளிருப்புப் போராட்டம்!

சென்னையின் லேண்ட்மார்க் ஆகி விட்ட மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டதைக் கண்டித்து, கோயம்பேடு அலுவலகத்தில் மெட்ரோ ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மெட்ரோ ரயில் சங்கம் தொடங்கி பணிகளில் இடையூறு செய்ததாக பணி நீக்கம் செய்யப்பட்டவர் களை உடனடியாக பணியில் சேர்க்க வலியுறுத்தியும், மெட்ரோ ரயில் நிர்வாகத்தைக் கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. கோயம்பேடு மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில், மெட்ரோ ரயில் ஊழியர்கள் குடும்பத்துடன் உள்ளிருப்புப் போராட்டத்தில் […]

April 29, 2019 admin
உடனடி செய்திகள்