32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 179 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 179)
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடப் போகுது : – மத்திய அரசு எச்சரிக்கை! தமிழகம்

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடப் போகுது : – மத்திய அரசு எச்சரிக்கை!

உலகளவில் அன்றாட தேவைக்கான சுத்தமான குடிநீர் இல்லாமல், 400 கோடி மக்கள் திண்டாடு வதாகவும், இந்தியாவில் சுமார் 100 கோடி மக்கள் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் அவதிப் படுவதாகவும், இதில், 60 கோடி மக்கள் அதிக வறட்சியான நிலங்களில் வசிப்பதாகவும் wateraid நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு போதிய பருவ மழை பெய்யவில்லை. உலகம் முழுவதும் இயற்கையை அழித்ததன் விளைவாக, பருவநிலை மாற்றம் ஏற்பட்டு உலகம் வேகமாக வெப்பமயமாகி வரும் நிலையில் தமிழகம் உட்பட 6 […]

May 19, 2019 admin
கால அவகாசம் கொடுத்தும் ரிஜிஸ்டர் செய்யாத கிளினிக், நர்சிங்ஹோம்களுக்கு சீல்! தமிழகம்

கால அவகாசம் கொடுத்தும் ரிஜிஸ்டர் செய்யாத கிளினிக், நர்சிங்ஹோம்களுக்கு சீல்!

சென்னை உள்ளிட்ட தமிழகத்தில், மருத்துவ சேவைகள் இயக்குனரகத்தின் 3 குழுக்கள்  அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. அதில் பதிவு செய்யப்படாத மருத்துவமனைகள், கிளினிக் குகள், நர்சிங் ஹோம்கள் ஆகியவை இழுத்து மூடப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். பதிவு செய்யும் மருத்துவமனைக்கு 5 ஆண்டுகளுக்கு உரிமம் கிடைக்கும். என தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இயங்கிவரும் அனைத்து மருத்துவம் சார்ந்த நிறுவனங்களும், தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டம் 2018-ன் கீழ் மருத்துவமனை குறித்து கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான […]

May 18, 2019 admin
தனியார் பள்ளிகள் ஸ்கூல் பேக், யூனிஃபார்ம் விற்க சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழகம்

தனியார் பள்ளிகள் ஸ்கூல் பேக், யூனிஃபார்ம் விற்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!

பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு பள்ளிகளிலேயே புத்தகங்கள், உபகரணங்கள் வழங்கப் படுகின்றன. ஆனால், பல பள்ளிகளில் புத்தகங்களை மூட்டையாக தூக்கி கொண்டு செல்லும் வகையில் அதிகளவு உபகரணங்கள் வழங்கப்படும் நிலையில். தனியார் பள்ளிகள் பெற்றோர் களிடம் குழந்தைகளுக்கான ஸ்கூல்பேக், லஞ்ச்பேக் போன்றவற்றை தங்களிடம் வாங்க வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவையில் உள்ள மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக ஹேமலதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.பள்ளி நிர்வாகம் பாடப் […]

May 18, 2019 admin
கோதண்டராமர் சிலை இன்னும் தமிழகத்தை தாண்டவில்லை! தமிழகம்

கோதண்டராமர் சிலை இன்னும் தமிழகத்தை தாண்டவில்லை!

கடந்த சில மாதங்களாகவே அன்றாடச் செய்திகளில் இடம் பெற்று வரும்  கோதண்டராமர் சிலை இன்னும் தமிழக எல்லையையே தாண்ட முடியாமல் தற்போது ஓசூரில் உள்ளது. கர்நாடக மாநில பெங்களூரில் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்று 108 அடி உயரத்தில் கோதண்டராமர் சிலை ஒன்று அமைக்க முடிவு செய்தது. இந்த சிலையானது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு மலையில் இருந்து ஒரே கல்லை எடுத்து வடிவைக்கப்பட்டது. இந்த சிலையின் பணிகள் முடிவடைந்து கடந்த டிசம்பர் மாதம் […]

May 17, 2019 admin
இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சொன்னது சரித்திர உண்மை! – கமல் ரிபீட்! Running News

இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சொன்னது சரித்திர உண்மை! – கமல் ரிபீட்!

“நான் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சொன்னது சரித்திர உண்மை. நான் அவரக்குறிச்சியில் பேசியதற்கு கோபப்படுகிறார்கள். எனக்கு பல இடங்களில் பெருமை கிடைக் கிறது சில இடங்களில் அவமானப்படுத்துகிறார்கள். நான் பேசுவது நிஜம். நான் நினைத்திருந்தால் பயங்கரவாதி என்றோ கொலைகாரன் என்றோ சொல்லியிருக்கலாம். நீங்கள் கூடதான் என் தீவிர ரசிகர்கள் (கூட்டத்தை நோக்கி) எங்கள் பேச்சில் இனி தீவிர அரசியல் பிறக்கும்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் […]

May 16, 2019 admin
தந்தைக்கு இணையாக, தோழனை வைத்து நினைவஞ்சலி நடத்திய ஐசரி கணேஷ்! Running News2

தந்தைக்கு இணையாக, தோழனை வைத்து நினைவஞ்சலி நடத்திய ஐசரி கணேஷ்!

மறைந்த முதலமைச்சர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் உற்ற நண்பனாக விளங்கியவரும், அவரது அமைச்சரவையில் அறநிலையத்துறை துணை அமைச்சராகவும் இருந்த ஐசரி வேலன் 33ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு மற்றும் மறைந்த ஜேகே ரித்தீஷ் -க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னை அடையாரில் உள்ள சத்யா ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்ரியில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், “பிறருக்கு தர்மம் செய்ய வேண்டும் […]

May 14, 2019 admin
தெலுங்கானா முதல்வர் சென்னை வந்து ஸ்டாலினுடன் ஆலோசனை! Running News

தெலுங்கானா முதல்வர் சென்னை வந்து ஸ்டாலினுடன் ஆலோசனை!

நாட்டில் மூன்றாவது அணிக்கான முயற்சியை முன்னெடுத்து வரும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது மட்டுமே  என்று திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் மே 23-ஆம் தேதி வர உள்ளன. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே பாஜக, காங்கிரஸ் அல்லாத ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் சந்திரசேகர ராவ் ஈடுபட்டு வருகிறார். இதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்துப் பேசினார். அதைப்போல, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மே 13-ஆம் தேதி சந்தித்துப் […]

May 13, 2019 admin
கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அரசு குடியிருப்பு வீட்டிலிருந்து வெளியேற்றம்! தமிழகம்

கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அரசு குடியிருப்பு வீட்டிலிருந்து வெளியேற்றம்!

சென்னை தியாகராயநகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இருந்து மூத்த தலைவர் நல்ல கண்ணுவை காலி செய்ய உத்தரவிட்டதை அடுத்து அவர் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராய நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் 94 வயது அரசியல்வாதியுமான நல்லகண்ணுவுக்கு அரசு சார்பில் குடியிருக்க கடந்த 2007-ம் ஆண்டு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இலவசமாக அரசு கொடுத்தாலும் கூட, அதை ஏற்காத அவர் […]

May 11, 2019 admin
உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்: அரசாணை வெளியீடு! தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்: அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்வது தொடர்பான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலுக்கான பணிகள் தற்போது நிசமாகவே தொடங்கி யுள்ளது. இது தொடர்பான தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்டவாரியாக வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்தும் வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு அதில் விடுப்பட்ட அனைவரையும் சேர்த்து திருத்தம் […]

May 10, 2019 admin
சாய்வு நாற்காலி படைப்பாளி தோப்பில் முகமது மீரான் காலமானார்!- அஞ்சலி ரிப்போர்ட்!! Running News

சாய்வு நாற்காலி படைப்பாளி தோப்பில் முகமது மீரான் காலமானார்!- அஞ்சலி ரிப்போர்ட்!!

பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான தோப்பில் முகமது மீரான் புற்று நோய் பாதித்து உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார். கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டினத்தில் 1944 ஆம் ஆண்டு பிறந்தவர் தோப்பில் முகமது மீரான் (74). இவர் பல்வேறு புதினங்கள், சிறுகதை தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்களை எழுதி உள்ளார். சாய்வு நாற்காலி என்ற நாவலுக்காக 1997-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர். அவரது ஒரு கடலோர கிராமத்தின் கதையை […]

May 10, 2019 admin
உடனடி செய்திகள்