32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 177 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 177)
கேரளா கொடுக்க முன் வந்த குடிநீரை வேண்டாம் என்று சொன்னது எடப்பாடி அரசு! Running News

கேரளா கொடுக்க முன் வந்த குடிநீரை வேண்டாம் என்று சொன்னது எடப்பாடி அரசு!

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் குடிநீருக்கும் பிற தேவைகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப் பட்டு வருகின்றனர். ஆனால் பருவமழை பொய்த்து விட்டதால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதாக அமைச்சர்கள் கூறினாலும், தற்போதைய தண்ணீர் பிரச்சினையைப் போக்குவதற்காக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் தண்ணீர் பிரச்சினை இருப்பது போன்று தவறான தகவல் பரப்பப்படுவதாக அமைச்சர் வேலுமணி […]

June 20, 2019 admin
‘பஸ் டே’ என்ற பெயரில் சென்னையில் நடந்த விபரீதம்- வீடியோ! Running News

‘பஸ் டே’ என்ற பெயரில் சென்னையில் நடந்த விபரீதம்- வீடியோ!

பஸ் டே என்ற பெயரில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தின் போது பேருந்தில் இருந்து மாணவர் கள் கீழே விழும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.  மேலும் போலீஸ் எச்சரிக்கையை மீறிபொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததாகக் கூறி மாணவர்களை போலீசார் பிடித்துச் சென்றனர். சென்னை ஷெனாய் நகரில் நேற்று காலை மாநகரப் பேருந்தில் ஏராளமான மாணவர்கள் பஸ்டே கொண்டாடினர். அலங்கரிக்கப்பட்ட பேருந்தின் மேற்கூரையில் ஏராளமான மாணவர்கள் அமர்ந்திருந்தனர். உற்சாகத்துடன் அவர்கள் கோஷமிட்டுக்கொண்டு வந்தனர். பேருந்தின் முன்புறம் இரு சக்கர […]

June 18, 2019 admin
தண்ணிர் பிரச்னை ..அவ்வளவ்வா இருக்குது! – ராமதாஸ் கன்பியூஸ்! தமிழகம்

தண்ணிர் பிரச்னை ..அவ்வளவ்வா இருக்குது! – ராமதாஸ் கன்பியூஸ்!

இங்குள்ள ஊடகங்கள் ஊதிப்பெருக்கும் அளவுக்கு சென்னையில் தண்ணீர் பிரச்சினை அவ்வளவு மோசம் இல்லை என்றாலும் கூட, சென்னையிலும், தமிழகத்தின் வறட்சி பாதித்த மாவட்டங் களிலும் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருவது உண்மை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததும், நடப்பாண்டில் மிகவும் கடுமையான வறட்சி நிலவுவதும் […]

June 17, 2019 admin
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் பறிமுதலுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம்! Running News

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் பறிமுதலுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம்!

அரசாணை மூல தடை செய்யப்பட்ட நிலையில் நாளை முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட் கள் புழக்கம் இருந்தால் அவற்றை பறிமுதல் செய்து 5 லட்சம் ருபாய் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த 6 மாதத்தில் சென்னையில் 240 டன் அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நம்ம தமிழகத்தில்ல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு தடைவிதித்தது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ […]

June 16, 2019 admin
புளிச்ச மாவு சர்ச்சை : எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்! Running News

புளிச்ச மாவு சர்ச்சை : எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்!

இட்லியை நீங்கள் வீட்டில் மாவரைத்து சாப்பிட்டால் பிரச்சினை கொஞ்சமும் இல்லை. இதையே கடையில் வாங்கி சாப்பிட்டால் பல பேருக்கு ஒத்து வராது என்பது மறுக்க முடியாத உண்மை என்று பல வித சோஷியல் மீடியாக்களில் வந்த செய்தியை புறக்கணித்த பிரபல எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நேர்ந்த கொடுமை ஹாட் டாபிக்-காகி விட்டது. ஆம் முன்பு நாம் ஆட்டுரலில் மாவு அரைத்தோம், பின்பு அது மிக்ஸி மற்றும் கிரைண்டர் என்றானது. அதுவும் பரவாயில்லை வாழ்க்கை மாற்றங்களின் காரணத்தால் தவிர்க்க முடியாத […]

June 15, 2019 admin
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன? Running News

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

“பாராளுமன்றத் தேர்தல் முடிந்து அடுத்த கட்ட அரசியல் பணிகள் நடைபெற்று வருவதால், கழகத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை, கழகத்தின் செய்தித் தொடர்பாளர்கள், நிர்வாகி கள் யாரும் ஊடகத்திலோ, பத்திரிக்கையிலோ கருத்துக்களை கூற வேண்டாம். அவ்வாறு தவறும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த பார்லிமெண்ட் தேர்தலில் அதிமுக அணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதேபோன்று, சட்டப் பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக, […]

June 12, 2019 admin
கிரேசி மோகன் காலமானார் : ஆந்தையாரின் அஞ்சலி ரிப்போர்ட்! Running News

கிரேசி மோகன் காலமானார் : ஆந்தையாரின் அஞ்சலி ரிப்போர்ட்!

சிரிப்பூட்டும் நாடக இயக்குநர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என்று பன்முகம் கொண்ட கலைஞர் ‘கிரேசி’ மோகன் இன்று மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 66. கிரேசியின் இயற்பெயர் ரங்காச்சாரி மோகன். சென்னை அண்ணா யூனிவர்சிட்டியில் மெக்கா னிக்கல் எஞ்சினியரிங் படித்தவர். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே 1972ஆம் ஆண்டு கல்லூரி விழாவிற்காக Great Bank Robbery என்ற நாடகம் எழுதினார். அதற்காக சிறந்த எழுத்தாளர், சிறந்த நடிகருக்கான விருதை அன்று நாடகத்திற்கு வந்திருந்த கமல்ஹாசன் வழங்கினார். பின்னாளில் […]

June 10, 2019 admin
வாயை மூடி பேசவும்! – எடப்பாடி & பன்னீர் கூட்டறிக்கை! Running News

வாயை மூடி பேசவும்! – எடப்பாடி & பன்னீர் கூட்டறிக்கை!

கட்சியின் நிர்வாகம், தேர்தல் முடிவுகள், கட்சியின் முடிவுகள் குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது. அதிமுக செயல்பாடு குறித்து கட்சியினர் சிலர் கூறிவரும் கருத்துகள் வரவேற்கத்தக்கவை யாக இல்லை. கருத்துகளை கூற செயற்குழு, பொதுக்குழு என்று பல வாய்ப்புகள் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். ஊர் இரண்டுபட்டால் யாருக்கு கொண்டாட்டம் என்பதை அறிந்து வைத்திருக்கிறோம் என்று முதல்வர் பழனிச்சாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும், தற்போதைய இரட்டை தலைமையால், […]

June 9, 2019 admin
ஹெல்மெட் சட்டம்: காட்டமான ஐகோர்ட் Running News

ஹெல்மெட் சட்டம்: காட்டமான ஐகோர்ட்

தமிழகத்தில் 2018-ம் ஆண்டு ஜனவரி – ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் நடந்த விபத்து களில் 40.53% இருசக்கர வாகன விபத்துகள்தாம். இதில் 73.14 சதவிகிதம் பேர் தலையில் அடிபட்டே உயிரிழந்திருக்கிறார்கள். இந்தியாவில், 2016-ம் ஆண்டில் மட்டும் நாளொன்றுக்கு 28 பேர் தலைக் கவசம் அணியாததால் தலையில் அடிப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றுக்கு 15 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்கிறது போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் அறிக்கை. தலைக்கவசம் அணிவதன் மூலம் 69 சதவிகிதம் தலையில் ஏற்படும் […]

June 6, 2019 admin
24 மணி நேரமும் கடைகள், வணிக வளாகங்களை திறக்கலாம்! – தமிழரசு அரசாணை! Running News

24 மணி நேரமும் கடைகள், வணிக வளாகங்களை திறக்கலாம்! – தமிழரசு அரசாணை!

நம்ம தமிழ்நாட்டில்  24 மணி நேரமும் கடைகள், வணிக வளாகங்களைத் திறக்கலாம் என்று அனுமதி அளித்து இன்று (ஜூன் 6) தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதை அடுத்து கலவையான க்மெண்ட்டுகள் ஆன் லைனில் கலந்து கட்டி உலா வருகிறது. தமிழகத்தில் தற்போது வரை ஐடி நிறுவனங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட சில கடைகள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமே இரவு நேரங்களிலும், அதாவது 24 மணி நேரமும் இயங்கி வந்தன. ஹோட் டல்கள், வணிக நோக்கிலான கடைகள் திறந்திருக்க […]

June 6, 2019 admin
உடனடி செய்திகள்