32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 146 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 146)
வக்கீல்கள் கருப்பு கோட்டு, கவுன் அணிந்து வர வேண்டாம் – ஐகோர்ட் அறிவுறுத்தல்! தமிழகம்

வக்கீல்கள் கருப்பு கோட்டு, கவுன் அணிந்து வர வேண்டாம் – ஐகோர்ட் அறிவுறுத்தல்!

ஆள் கொல்லி நோயானா கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக நீதி மன்றத்தில் வழக்கிற்காக ஆஜராக வரும் வக்கீல்கள் கருப்பு கோட்டு, கவுன் அணிந்து வர வேண்டாம் என்று சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக மார்ச் 25 முதல் சென்னை ஐகோர்ட் மூடப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு வீடியோ கான்பரன்ஸ் மூலம் மட்டும் விசாரணை நடந்தது. இந்நிலையில், செப்டம்பர் 7ம் தேதி முதல் ஐகோர்ட்டில் வக்கீல்கள் ஆஜராகலாம் என்றும் வழக்கு விசாரணை உள்ள […]

September 5, 2020 admin
தமிழகத்தில் 9 சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு! தமிழகம்

தமிழகத்தில் 9 சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தமிழகத்தில் செப்டம்பர் 7ம் தேதி முதல் மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்து துவங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து 9 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் மாநிலங்களுக்கு இடையேயான சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. இந்நிலையில் மாநிலத்துக்குள் ரயில் போக்குவரத்தை மீண்டும் துவங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பல்வேறு தளர்வுகளை அறிவித்த முதல்வர் எடப்பாடி […]

September 4, 2020 admin
திமுக : துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு! தமிழகம்

திமுக : துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு!

திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் 4 மணியுடன் நிறைவடைந்த நிலையில், துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். திமுக பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் மறைவை தொடர்ந்து, அவர் வகித்து வந்த பதவி நீண்ட நாட்களாக காலியாக இருந்தது. அந்த பதவிக்கு ஒருவரை தேர்வு செய்வதற்காக கட்சியின் பொதுக்குழு வரும் 9-ந்தேதி கூடுகிறது.இதையொட்டி தி.மு.க. பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு பெறலாம் என அறிவிக்கப்பட்டு […]

September 3, 2020 admin
7–ந் தேதி முதல் பஸ், ரயில் போக்குவரத்துக்கு முழு அனுமதி! – முதல்வர் அறிவிப்பு! தமிழகம்

7–ந் தேதி முதல் பஸ், ரயில் போக்குவரத்துக்கு முழு அனுமதி! – முதல்வர் அறிவிப்பு!

இம்மாதம் 7–ந் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து அனுமதி அளிக்கப் படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதேபோன்று மாநிலத்துக்குள் பயணிகள் ரெயில் சேவைக்கும் அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.கொரோனா நோய் தொற்றை தடுக்க அரசு எடுக்கும் முயற்சி களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய […]

September 2, 2020 admin
தமிழகத்தில் அது, இது எதுவெல்லாமே இயங்கலாம் -ஆனா 144 நீடிக்கும்! – முதல்வர் அறிவிப்பு முழு விபரம்! Running News

தமிழகத்தில் அது, இது எதுவெல்லாமே இயங்கலாம் -ஆனா 144 நீடிக்கும்! – முதல்வர் அறிவிப்பு முழு விபரம்!

நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.முதலில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டது. தற்போது நாளை வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனி டையே நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதில், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று தெரிவித்தது. பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். மெட்ரோ ரயில் சேவை […]

August 30, 2020 admin
கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் கொரொனா தொற்றால் காலமானார்! : தமிழகம்

கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் கொரொனா தொற்றால் காலமானார்! :

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யான எச். வசந்தகுமார் இன்று, வெள்ளிக்கிழமை, மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் வசந்தகுமாருக்கு ஆகஸ்ட் 10-ம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த அவரது உடல்நிலை இன்று மோசமடைந்து, இன்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 70. காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த வசந்தகுமாா் […]

August 28, 2020 admin
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் திறக்கப்படும்! தமிழகம்

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் திறக்கப்படும்!

நாடெங்கும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், விளையாட்டு அரங்குகள், வழிபாட்டு தளங்கள், நூலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டன.இதனை அடுத்து கடந்த ஜூன் மாதம் முதல் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்தது. அதன் படி தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அவ்வப்போது சில தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அவ்வகையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு பொது […]

August 28, 2020 admin
கல்லூரி இறுதி பருவத் தேர்வு தவிர பிற பருவத் தேர்வுகளை ரத்து – முதல்வர் அறிவிப்பு! தமிழகம்

கல்லூரி இறுதி பருவத் தேர்வு தவிர பிற பருவத் தேர்வுகளை ரத்து – முதல்வர் அறிவிப்பு!

பல்வேறு தரப்பிலும் இருந்து வந்த கோரிக்கையை அடுத்து கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர மற்றத் தேர்வுகளுக்கு விலக்கு அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்பவும், யுஜிசி, இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு வழிகாட்டுதலின் அடிப்படையிலும், தமிழக உயர்மட்டக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும், கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற தேர்வுகளில் இருந்து விலக்கு அளித்து தமிழக உயர்கல்வித்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தெரிவித்தார். இதுகுறித்த முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு இதோ:: கரோனா […]

August 26, 2020 admin
விநாயகர் சதுர்த்தியன்று தடையை மீறினால்..? – ஐகோர்ட் எச்சரிக்கை! தமிழகம்

விநாயகர் சதுர்த்தியன்று தடையை மீறினால்..? – ஐகோர்ட் எச்சரிக்கை!

விநாயகர் சதுர்த்தியன்று தடையை மீறி ஊர்வலம் செல்ல முற்படுபவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக மெட்ராஸ் ஐகோர்ட் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து செல்லவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பத்திரிகையாளர் அன்பழகன் என்பவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தடையை மீறி ஊர்வலமாக எடுத்துச் சென்றால் இந்து முன்னணியின் மூத்த தலைவர் ராமகோபாலன் மற்றும் […]

August 19, 2020 admin
பெண்ணையாறு & மேகதாது அணைகள் கட்ட அனுமதி கொடுக்காதீங்க!- எடப்பாடி கோரிக்கை! தமிழகம்

பெண்ணையாறு & மேகதாது அணைகள் கட்ட அனுமதி கொடுக்காதீங்க!- எடப்பாடி கோரிக்கை!

தமிழ்நாட்டின் ஜீவாதாரம் காவிரி. விவசாயத்துக்கு மட்டுமல்ல, குடிநீருக்கும், காவிரி தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே நமாமி கங்கை திட்டத்தை விசேஷ திட்டமாக மத்திய அரசு செயல்படுத்தி வருவதைப் போல, ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தையும் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். இதை தேசிய சிறப்பு திட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம் இன்று வலியுறுத்தினார். தமிழகத்தில் நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதன் சாத்தியக் […]

August 18, 2020 admin
உடனடி செய்திகள்