32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 145 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 145)
மு.க. அழகிரி மறுபடியும் திமுக-வுக்குள் மெம்பரா ஆயிட்டாரே! தமிழகம்

மு.க. அழகிரி மறுபடியும் திமுக-வுக்குள் மெம்பரா ஆயிட்டாரே!

திமுகவிலிருந்து நிரந்தரமாக விலக்கி வைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அண்மையில் தன்னை மீண்டும் திமுகவில் சேர்க்கக் கோரி வெளிப்படையாகவே தெரிவித்தார். ஆனால், திமுக அதைப் பொருட்படுத்தாத நிலையில், இணையவழி உறுப்பினர் சேர்க்கையில் மு.க.அழகிரி பெயரில் உறுப்பினர் அட்டையைப் பெற்றிருக்கிறார் அவரது ஆதரவாளர் கபிலன். கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பேரூர் திமுகவின் முன்னாள் செயலாளராக இருந்தவர் பெ.கபிலன். தீவிர அழகிரி ஆதரவாளரான இவர் அழகிரியின் வெளியேற்றத்துக்குப் பின் திமுகவில் ஓரம்கட்டப்பட்டார். குமரி மாவட்ட அழகிரி விசுவாசிகளில் முக்கியப் […]

September 22, 2020 admin
வீடுதேடி வரப் போகுது ரேஷன் – முதல்வர் பழனிசாமி தொடங்கி வச்சிட்டார்! தமிழகம்

வீடுதேடி வரப் போகுது ரேஷன் – முதல்வர் பழனிசாமி தொடங்கி வச்சிட்டார்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (21–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே கொண்டு சென்று விநியோகிக்கும் வகையில் 9 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளின் சேவையினை துவக்கி வைக்கும் அடையாளமாக 7 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளின் வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், பொது […]

September 21, 2020 admin
தமிழ்நாடு இணையப் பாதுகாப்புக் கொள்கை 2020 -கே. பழனிசாமி வெளியிட்டார்! தமிழகம்

தமிழ்நாடு இணையப் பாதுகாப்புக் கொள்கை 2020 -கே. பழனிசாமி வெளியிட்டார்!

தமிழக அரசு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பால் நடத்தப்பட்ட ‘கனெக்ட் 2020’ மாநாட்டில் பங்கேற்று, தமிழ்நாடு இணையப் பாதுகாப்புக் கொள்கை 2020யை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பொன்றில், தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி இன்று (19.9.2020) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பால் செப்டம்பர் 15 முதல் 19-ஆம் தேதி வரை காணொலிக் காட்சி வாயிலாக நடத்தப்பட்டு வரும் […]

September 19, 2020 admin
கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டதன் பின்னணியில் இவ்வளவு போராட்டமா? தமிழகம்

கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டதன் பின்னணியில் இவ்வளவு போராட்டமா?

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாலரை மாதங்களுக்கும் மேலாக சென்னை கோயம்பேட்டில் உள்ள உணவு தானிய வளாகம் மூடிக் கிடந்தது. பலவித கோரிக்கைகளுக்கும், சட்டப் போராட்டங்களுக்கும்  பின்னர் கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகம் 18-ந்தேதி (இன்று) திறக்கப்படும் என்றும், காய்கறி சந்தை 28-ந்தேதி திறக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்ததை .தொடர்ந்து உணவு தானிய வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் சீரமைப்பு பணி நடந்தது. நேற்று உணவு தானியங்கள் மூட்டை மூட்டைகளாக வணிக வளாகத்துக்கு கொண்டு […]

September 18, 2020 admin
மேரேஜ் ரிஜிஸ்ட்ரேசன்? இதோ நியூ ரூல்! தமிழகம்

மேரேஜ் ரிஜிஸ்ட்ரேசன்? இதோ நியூ ரூல்!

மணமகன் அல்லது மணமகளின் சொந்த ஊரில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்யலாம் என சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009-ன் படி திருமணப்பதிவு என்பது அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி திருமணம் முடிந்த தம்பதி தங்கள் திருமணத்தை 90 முதல் 150 நாட்களுக்குள் பதிவுசெய்ய வேண்டும். இவ்வாறு 150 நாட்களுக்குள் பதிவு செய்யாதவர்கள் பின்னர் எப்போதுமே தங்கள் திருமணத்தை பதிவு செய்திட முடியாது. திருமணத்தைப் பதிவு செய்யாதவர்கள் அரசு தரும் […]

September 16, 2020 admin
மு.க.ஸ்டாலின் முன் வைத்த புதிய கல்விக் கொள்கை குறித்த கோரிக்கைகள்! தமிழகம்

மு.க.ஸ்டாலின் முன் வைத்த புதிய கல்விக் கொள்கை குறித்த கோரிக்கைகள்!

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சில புதிய கல்விக் கொள்கை குறித்த கோரிக்கைகளை முன்வைத்தார். அக்கோரிக்கை ஏற்கப்படாததால் திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அக்கோரிக்கை பின்வரும் பின்வருமாறு “தேசிய கல்வி கொள்கை பற்றி ஆராய இரு குழுக்களை நியமித்துள்ளனர். அக்குகுழுகள் விரிவுபடுத்தப்பட வேண்டும். தமிழும் ஆங்கிலமும் என்ற இரு மொழிக் கொள்கை தமிழகத்தின் உயிர்மூச்சாக உயிர்நாடியாக விலகிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் விவாதிக்க வேண்டும். சட்டப்பேரவையில் சிறப்பு […]

September 16, 2020 admin
திமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து கு.க.செல்வம் வழக்கு! தமிழகம்

திமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து கு.க.செல்வம் வழக்கு!

பாஜகவின் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினராகி விட்ட கு.க.செல்வத்தை திமுகவிலிருந்து நீக்கம் செய்தது தொடர்பாக அக்கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கு.க.செல்வம். இவர் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்த நிலையில், கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவரிடம் கட்சி தரப்பிலிருந்து விளக்கமும் கேட்கப்பட்டது. ஆனால் கு.க.செல்வம் அளித்த பதிலில் திருப்தியில்லாததால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து […]

September 10, 2020 admin
இன்று நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.: திமுக பொதுக் குழுவில் ஸ்டாலின் பேச்சு முழு விபரம்! தமிழகம்

இன்று நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.: திமுக பொதுக் குழுவில் ஸ்டாலின் பேச்சு முழு விபரம்!

திமுக பொதுக்குழு தலைவர் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதல்முறையாக இந்த பொதுக்குழு கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலும் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். திமுக துணைப் பொதுச்செயலாளராக ஆ.ராசா,பொன்முடி ஆகியோர் நியமனம் செய்யப் பட்டனர். இதை அடுத்து மு.க.ஸ்டாலின் பேசிய விபரம் இதோ:: “என்றும் இல்லாத அளவுக்கு இன்று […]

September 9, 2020 admin
கலைவாணர் அரங்கில் கூடும் தமிழக சட்டப்பேரவை கூட்டம் 3 நாட்கள் நிகழ்ச்சி நிரல்! தமிழகம்

கலைவாணர் அரங்கில் கூடும் தமிழக சட்டப்பேரவை கூட்டம் 3 நாட்கள் நிகழ்ச்சி நிரல்!

கொரோனா பெருந்தொற்று காரணமாக தற்போதைய கூட்டத்தொடர் சென்னை வாலாஜா சாலையில் கலைவாணர் அரங்கில் மூன்றாம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் நடத்தப்படும் என்று சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் முன்னதாக தெரிவித்திருந்தார். சட்டப்பேரவைக் கூட்டுவதற்கான ஒப்புதலை மாநில ஆளுநர் பன்வாரிலால் செப்டமபர் 1ம் தேதி அளித்தார். சட்டசபையை நடத்துவதற்கு ஏற்ற வகையில் கலைவாணர் அரங்கம் மாற்றியமைக்கப்பட்டது. சபாநாயகர், முதல்-அமைச்சர், அரசு தலைமை கொறடா, எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சிகள் ஆகியோருக்கும் அலுவலக வசதிகளை அளிப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் […]

September 8, 2020 admin
தனது கண்களை தானம் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு l தமிழகம்

தனது கண்களை தானம் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு l

கண் தானம் செய்ததற்கான பத்திரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து இட்டார். இதற்கான சான்றிதழை முதலமைச்சரிடம் சுகாதார துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வழங்கினார். கண்தானத்தை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்திருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (7–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் கண்தானம் செய்ய விரும்புவோர்களுக்கு உதவிடும் வகையில், தமிழ்நாடு மாநில நலவாழ்வு குழுமத்தால் உருவாக்கப்பட்ட www.hmis.tn.gov.in/eye-–donor என்ற இணையதளத்தை […]

September 7, 2020 admin
உடனடி செய்திகள்