வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருக்கும் சிங்கங்களுக்கு கொரோனா!

வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருக்கும் சிங்கங்களுக்கு கொரோனா!

மிழகத்தில் உள்ள பிரபலமான  பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது. இந்தப் பூங்கா தான் இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா. 1855-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ‘மெட்ராஸ் பூங்கா’ என்ற பெயரில் விலங்கியல் பூங்கா ஒன்றை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைத்தார்கள். பின்னர் விரிவாக்கம் செய்வதற்காக 1985-ம் ஆண்டு இந்தப் பூங்கா வண்டலூருக்கு மாற்றப்பட்டது .பின்னர் வண்டலூர் உயிரியல் பூங்கா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த பூங்காவில் உள்ள விலங்குகளை ஆன்-லைன் மூலம் கண்டு களிக்கும் அறிமுகப்பட்டுத்தப் பட்டுள்ளது என்பதும் இந்த பூங்காவில் இரவில் தங்கி விட்டு பகலில் பூங்காவிலுள்ள பல்வேறு மிருகங்களை அணமையில் பார்க்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது என்பதெல்லாம் தெரிந்திருக்கும்.

இந்நிலையில் இந்தப் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பசியின்மை மற்றும் சளித் தொந்தரவு இருந்ததைத் தொடர்ந்து அவற்றின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. உயிரியல் பூங்காவில் அவை நெருக்கமாக வசிப்பதால் அவற்றுக்கிடையே கொரோனா பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது.

இதற்கு முன்பு ஸ்பெயினின் பாா்சிலோனா, அமெரிக்காவின் பிராங்க்ஸ் நகரங்களில் உள்ள உயிரியல் பூங்காக்களில் சிங்கங்கள் மற்றும் புலிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதும் இந்தியாவில் இதற்குமுன் தெலங்கானா, ஹைதராபாத்தில் உள்ள விலங்கியல் பூங்காக்களின் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!