32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11703 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1100 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1100)
திட்டமிட்டபடி மலேசியா இசை நிகழ்ச்சி! – இளையராஜா நம்பிக்கை! Running News

திட்டமிட்டபடி மலேசியா இசை நிகழ்ச்சி! – இளையராஜா நம்பிக்கை!

“இசைஞானி இளையராஜா தன இசை நிகழ்ச்சி வரும் 28-ம் தேதி மலேசியாவில் நடத்த திட்டமிட்டபடி நிச்சயமாக நடைபெறும் எனறும் இதனால் மலேசிய ரசிகர்கள் யாரும் ஏமாற்றம் அடைய வேண்டாம் “என, மலேசிய ரசிகர்களுக்கு பத்திரிகையாளர்கள் மூலம் இளையராஜா நம்பிக்கை அளித்துள்ளார்.இதற்கிடையில் இசைஞானி நாளை டிஸ்ஜார்ஜ் செய்யப்படலாம் எனத் அப்பல்லோ தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை வரும் 28ம் தேதி மலேசியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ரிகர்சலில் அவர் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று காலை […]

December 24, 2013 admin
ஜாக்கி சான் பாடகராக அறிமுகமாகும் “ போலீஸ் ஸ்டோரி 2013 “ ஆல்பம் + பாடல் வீடியோ Running News

ஜாக்கி சான் பாடகராக அறிமுகமாகும் “ போலீஸ் ஸ்டோரி 2013 “ ஆல்பம் + பாடல் வீடியோ

இன்றளவில் உலக பிரபல நாயகர்களில் முக்கிய நாயகனாக, குழந்தைகளை மிகவும் கவர்ந்த நாயகனாக இன்றும் இருப்பவர் ஜாக்கி சான். அதிலும் இவரது “போலீஸ் ஸ்டோரி” படத்தை பார்க்காதவர்களே இருக்க முடியாது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தின் தொடர் படைப்பாக இப்பொழுது “போலீஸ் ஸ்டோரி 2013” படத்தை தயாரித்து நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் இப்படம் உலகம் முழுக்க இம்மாதம் இறுதியில் வெளியாகிறது. தமிழ்நாட்டில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொங்கல் வெளியீடாக வருகிறது. தமிழகமெங்கும் 200-க்கும் அதிகமான திரை அரங்குகளில் வெளியிடப்படுகிறது. […]

December 24, 2013 admin
‘எந்த அரசியல் கட்சியும் பெரும்பான்மையைப் பெற முடியாது!’ – ஹிந்து ராம் பேச்சு! Running News

‘எந்த அரசியல் கட்சியும் பெரும்பான்மையைப் பெற முடியாது!’ – ஹிந்து ராம் பேச்சு!

“காங்கிரஸாக இருந்தாலும் பா.ஜ.க.-வாக இருந்தாலும் மக்களவையில் பாதி தொகுதிகளைக் கைப்பற்றுவதில் தோல்வியடைவார்கள். இதைத்தான் அரசியல் விமர்சகர்களும் தேர்தல் கணிப்பாளர்களும் கூறுகின்றனர். பலருடைய பார்வையில் எந்த கட்சியும் ஸ்திரத்தன்மையை உருவாக்க முடியாது, எந்த அரசியல் கட்சியும் பெரும்பான்மையைப் பெற முடியாது” என்று இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம் தெரிவித்துள்ளார். திருச்சி அறிவாளர் பேரவையின் 12-வது ஆண்டு நிறைவு விழா, சிவானந்த பாலாலயாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம் பேசும்போது,”விலைவாசி உயர்வு, […]

December 24, 2013 admin
108 மெகாபிக்ஸ்ல் கொண்ட எரியும் கேமரா…!வீடியோ Running News

108 மெகாபிக்ஸ்ல் கொண்ட எரியும் கேமரா…!வீடியோ

இப்போதுள்ள பெரும்பாலான கேமராவில் அதிகபட்சம் 32 பிக்சல் வரை கன்ஸ்யூமர் உபயோகத்துக்கு வந்திருக்கிறது. இந்நிலையில் இப்போது பனானோ என்னும் புது காமெரா வந்துள்ளது. இது ஒரு சிறிய கமலா ஆரஞ்சு பழம் அளவுக்கு இருக்கும் இதில் கோல்ஃப் பந்துக்கள் போல 36 குழிகள் அதில் ஒவ்வொரு குழியுலும் ஒரு காமெரா. அதாவது 36 கேமராவும் ஒரே நேரத்தில் 360 டிகிரி கோண்த்தில் படம் எடுக்கும் அதிசயம். அதிலும் இது மிகவும் உயர்ந்த தரத்துடன் 108 மெகாபிக்ஸல் வரை […]

December 24, 2013 admin
வேட்பாளர் விவரங்கள்  தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி Running News

வேட்பாளர் விவரங்கள் தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி

சொத்து மதிப்பு, குற்ற வழக்கில் கைது, தண்டனை, நிலுவையில் உள்ள வழக்குகள் போன்ற முக்கியமான விவரங்களை வேட்புமனு தாக்கல் செய்யும்போது பல வேட்பாளர்கள் தெரிவிக்காமல் மறைத்துவிடுவதால் தேர்தல் ஆணையம் அதிரடியான முடிவை எடுத்திருக்கிறது.இந்த விவரங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் பதிவு செய்து, அதன் காகித நகல்களை வேட்புமனுவுடன் இணைத்து தாக்கல் செய்ய வேண்டும் என புதிய வழிமுறையை ஆணையம் அறிமுகம் செய்கிறது. மேற்கண்ட விவரங்கள் குறித்த ஏதேனும் ஒரு கேள்விக்கு ஆன்லைனில் பதிலை பதிவு […]

December 24, 2013 admin
இனி எஸ் எம் எஸ் -கூட அதிகாரப்பூர்வ செய்தி! மத்திய அரசு முடிவு? Running News

இனி எஸ் எம் எஸ் -கூட அதிகாரப்பூர்வ செய்தி! மத்திய அரசு முடிவு?

இனி இந்தியாவில் பணப்பரிமாற்றம், பதிவு செய்வது உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பொதுமக்கள் அனுப்பும் குறுஞ் செய்தியையே ஆதாரமாக ஏற்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. பொதுமக்கள் கொடுத்த 241 மனுக்களை, 100 துறைகளுக்கு அனுப்பி தங்களின் குறுஞ்செய்தி சோதனையை இன்று அதிகாரிகள் மேற்கொண்டனர். பொதுமக்கள் தங்கள் மனுக்களில் தகவல் அறியும் உரிமை சட்டம், சுகாதாரம், ஆதார், கல்வி பற்றிய விவரங்களை கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த “மொபைல் சேவா” திட்டத்தை அறிமுகப்படுத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சத்யநாராயணா கூறுகையில், […]

December 24, 2013 admin
‘வி.ஐ.பி கலாசாரம’ ஒழிவதன் தொடக்கம்?! Running News

‘வி.ஐ.பி கலாசாரம’ ஒழிவதன் தொடக்கம்?!

தேவையில்லாத சஸ்பென்ஸ் கொடுத்து நாலாபக்கமும் விமர்சனங்கள் வர வழி வகுத்த ஆமாத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒருமாதிரியாக முதலமைச்சர் என்ற முள் கிரீடத்தை தரிக்க சம்மதித்து விட்டார்.அரசியலில் நுழைந்ததில் இருந்து ‘மே ஆமாத்மி ஹூம்’ என அச்சிட்ட குல்லா அணிந்து வலம் வந்த அவருக்கு அதில் பெரிய கஷ்டம் இருக்காது. ஒன்றை கழற்றிவிட்டு இன்னொன்றை மாட்டுவதுதானே. ‘மே முக்ய மந்த்ரி ஹூம்’ என கிரீடத்தில் பொறிக்க மாட்டார். ஏனென்றால், இசட் செக்யூரிடி தனக்கு தேவையில்லை என்று […]

December 24, 2013 admin
ஏ.கே. 47 ரக துப்பாக்கியை வடிவமைத்தவர் மரணம் Running News

ஏ.கே. 47 ரக துப்பாக்கியை வடிவமைத்தவர் மரணம்

ஏ.கே. 47 ரக துப்பாக்கியை வடிவமைத்த ரஷ்யாவின் லெப்டினண்ட் ஜெனரலாக இருந்த மிகைல் கலாஷ்னிகோவ் ரத்தக்கசிவு நோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் தனது 94 வயதில் மரணம் அடைந்தார். ஏ.கே.47 என்பதன் விரிவாக்கம் அவ்தோமத் கலஷ்னிகோவா 47 என்பதாகும்.1947 ஆம் ஆண்டில் இது கண்டுபிடிக்கப்பட்டதால் இதற்கு 47 என்று பெயரிடப்பட்டது.இரண்டாம் உலகப்போரின்போது இந்த துப்பாக்கி ரஷ்யப்படையினருக்கு பெரும் முன்னேற்றத்தைக் கொடுத்தது. பின்னர் இது உலகெங்கும் பிரபலமாகிவிட்டது. இந்த ரக துப்பாக்கியை வடிவமைத்த மிகைல் […]

December 24, 2013 admin
எம்.பி.பி.எஸ்..-இலவசமாய படிக்க விருப்பமா.! Running News

எம்.பி.பி.எஸ்..-இலவசமாய படிக்க விருப்பமா.!

இன்றைய சூழலில் பிளஸ் டூ படிக்கும் பெரும்பாலான மாணவ-மாணவிகளின் கனவு பொறியியல் படிப்பில் சேர்ந்து, எப்படியாவது சாப்ட்வேர் துறையில் வேலைக்குச் சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான். இருந்தாலும் எம்.பி.பி.எஸ். மீதான மோகம் மாணவர்கள் மத்தியில் குறைந்துவிடவில்லை. ஆனால் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றால்தான், அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் உறுதி என்று சொல்லும் அளவுக்கு மருத்துவப் படிப்பில் சேரக் கடுமையான போட்டி நிலவுகிறது. 0.5இல் எம்பி.பி.எஸ். வாய்ப்பைத் தவறவிடும் மாணவ-மாணவிகள் அநேகம். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் […]

December 24, 2013 admin
தேசிய சீனியர் பேட்மிண்டன்: பி.வி. சிந்து சாம்பியன்! Running News

தேசிய சீனியர் பேட்மிண்டன்: பி.வி. சிந்து சாம்பியன்!

தேசிய சீனியர் பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து சாம்பியன்ஷிப் வென்றார். இவர், சக போட்டியாளரான ரித்துபர்னாசை, 21-11, 21-17 என்ற புள்ளிகளில் தோற்கடித்து இந்த பட்டத்தை வென்றார். 78 ஆவது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் புது தில்லியில் கடந்த 16 ஆம் தேதி முதல் இன்று வரை(23) நடைபெற்றது.. மகளிர் அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்து, அருந்ததியை எதிர்கொண்டார். அதில் 21-17, 21-14 என்ற நேர் செட்களில் சிந்து […]

December 23, 2013 admin
உடனடி செய்திகள்