32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1057 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1057)
ஐபிஎம் நிறுவனத்திலிருந்து 15000 பேர் பணி நீக்கம்! Running News

ஐபிஎம் நிறுவனத்திலிருந்து 15000 பேர் பணி நீக்கம்!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம் தங்களது கம்பெனியில் மறுசீரமைப்பு பணியை துவக்கியுள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதிலும் இருந்து 15000 பேர் பதவி இழப்பார்கள் என தெரிகிறது. குறிப்பாக இந்தியா, பிரேசில் மற்றும் ஐரோப்பியா பகுதியில் செயல்படும் இந்நிறுவனத்தின் ஊழியர்களில் பெரும்பாலனவர்கள் வீட்டுக்கு போகும் நிலை ஏற்படும் என தெரிகிறது. ஐபிஎம் நிறுவனம் அதன் ஆய்வு பணிகளுக்காக புகழ் பெற்றது. ஒரு காலத்தில் கம்ப்யூட்டரோடு அறியப்பட்ட இந்நிறுவனம், பிசி யுகத்தில் அந்த பெருமையை இழந்து விட்டாலும், தன்னுடைய […]

February 15, 2014 admin
ஆண்களை பலாத்காரம் செய்வது அதிகரிப்பு – இங்கிலாந்து வெளியிடும் அதிர்ச்சி! Running News

ஆண்களை பலாத்காரம் செய்வது அதிகரிப்பு – இங்கிலாந்து வெளியிடும் அதிர்ச்சி!

உலகம் முழுவதும் பெண்கள் பலாத்கார கொடுமைக்கு ஆளாகி வருவது அதிகரித்து வருகிறது. அதேவேளையில் ஆண்களும் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். அவர்களும் பல கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்ற விஷயம் பெரிதாக பேசப்படுவதில்லை. இங்கிலாந்தில் ஆண்டுக்கு 72 ஆயிரம் சிறுவர்கள், ஆண்கள் பலாத்காரத்துக்கு ஆளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.மேலும் இது போல் ”பலாத்காரத்தால் ஆண்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, 5 லட்சம் பவுண்ட் நிதி ஒதுக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து அரசு நேற்று முன்தினம் […]

February 15, 2014 admin
வாசனையை பரப்பி தகவல் சொல்லும் ஸ்மார்ட் போன் Running News

வாசனையை பரப்பி தகவல் சொல்லும் ஸ்மார்ட் போன்

ஸ்மார்ட்போன்கள் அதன் பன்முக வசதிகளுக்காகவும், இணைய இணைப்பு வசதிக்காகவும், கம்ப்யூட்டர் போல செயல்படும் தன்மைக்காகவும், ஸ்டேட்டஸ் அடையாளமாகவும் இன்று உல்கம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.அதிலும் விஞ்ஞான தொழில் நுட்பம் நாளும் வளர்ந்து வருகிற இந்த நாட்களில் ஸ்மார்ட் போன் மனிதர்களுக்கு குறிப்பாக உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு, எப்போதும் பரபரப்பாக இயங்குகிறவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கம்ப்யூட்டர் செய்யக்கூடிய அத்தனை வேலைகளையெல்லாம் இந்த ஸ்மார்ட் போன் செய்து விடுவதால் இதன் விற்பனை தினந்தோறும் எகிறிக் கொண்டே போகிறது. […]

February 15, 2014 admin
இது கதிர்வேலன் காதல் விமர்சனம்! Running News

இது கதிர்வேலன் காதல் விமர்சனம்!

சுந்தர பாண்டியன் மூலம் நட்பு பிளஸ் காதல் என்ற பாணியில், குடும்பத்தோடு படம் பார்க்க வைத்த இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்,மற்றும் அதே டைப்பில் ஒ.க.ஒ.க. ஹிட கொடுத்த உதயநிதி ஆகிய இருவருக்கும் இது இரண்டாவது படம். இந்த இருவருடைய முதல் படத்தின் பாதிப்பும் இப்படத்தில் இருந்தாலும், எந்த வித ஆபாசமான காட்சிகளோ, வசனங்களோ இல்லாமல் இருப்பதற்காக இருவருக்கும் ஒரு சபாஷ் சொல்லலாம் என்றாலும் படத்தை படு ஸ்லோவாக கொண்டு போனதற்கு ஒரு கொட்டும் கொடுக்க வேண்டும்! மதுரையில் உள்ள […]

February 15, 2014 admin
தேவைகள் ஏங்குது… பணமோ தூங்குது! Running News

தேவைகள் ஏங்குது… பணமோ தூங்குது!

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை உறுப்பினர்களில், 30 பேர் தொகுதி மேம்பாட்டிற்காகத் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு கோடி முதல் ஏழு கோடி வரை செலவிடாமல் வைத்திருக்கின்றனர். வரும் மே மாதத்திற்குள் இந்தத் தொகை செலவு செய்யப்படவில்லை என்றால் கோடிக்கணக்கான நிதி மக்களுக்குப் பயனில்லாமல் காலாவதி ஆகிவிடும்.இப்போது மக்களவை உறுப்பினர்களாக இருப்பவர்களின் பதவிக்காலம் வருகின்ற மே மாதம் 15-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அந்த உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுக்குச் செலவிட அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு […]

February 15, 2014 admin
சுற்றுச்சூழல்: இந்தியாவுக்கு 155-வது இடம்! Running News

சுற்றுச்சூழல்: இந்தியாவுக்கு 155-வது இடம்!

இந்த ஆண்டுக்கான “உலக சுற்றுச்சூழல் குறியீடு, 2014′, அமெரிக்காவின் புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.உலகிலுள்ள 178 நாடுகளின் சுற்றுச்சூழல் தன்மையை ஆராய்ந்த இந்த மையம் நல்ல தரமான சுத்தத்துடன் விளங்கும் சுற்றுச்சூழல் கொண்ட நாடுகளை முதலில் அட்டவணையிட்டு வரிசைப்படுத்தியுள்ளது. அதில் இந்தியாவிற்கு 155ஆவது இடம். நம் நாட்டின் சுற்றுச்சூழல் எவ்வளவு மோசமான நிலைமையை அடைந்துள்ளது என்பதை இந்த வரிசை எண் வெளிப்படுத்துகிறது.இந்த அட்டவணைப்படி மிகவும் சுத்தமான சுற்றுச்சூழல் உள்ள முதல் ஐந்து நாடுகள்: […]

February 15, 2014 admin
இந்த வாரம் ஒன்றை கற்போம் – 5 Running News

இந்த வாரம் ஒன்றை கற்போம் – 5

இந்த வாரம் ஒன்றை கற்போம் -வரிசையில் இப்போது- உங்கள் மொபைல் ஃபோன் / டேப்ளட் பேட்டரியை பாதுகாப்பது / இலவச பேட்டரி மீட்டர் சாஃப்ட்வேர் எப்படி?என்று பார்ப்போமா?சரியான ஜோடியை தேர்ந்தெடுககவிடில் வாழ்க்கை எப்படி சூனியம் ஆகுமோ அதே தான் பலரின் மொபைல் ஃபோன் வாழ்கை. எப்ப பார் சுகர் பேஷன்ட் மாதிரி சார்ஜரோடு திரிஞ்சிகிட்டு இருப்பாங்க. இது ஏன்? – முதல் முதல் ஃபோன் வாங்கின உடனே ஃபோனை ஃபிளைட் மோட் அல்லது ஆஃப் செஞ்சிட்டு தொடர்ந்து […]

February 15, 2014 admin
சென்னை ஹைகோர்ட் நீதிபதிகளுக்கான பரிந்துரை பட்டியல் – சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு! Running News

சென்னை ஹைகோர்ட் நீதிபதிகளுக்கான பரிந்துரை பட்டியல் – சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு!

சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் பதவிக்கான பரிந்துரை பட்டியலை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. உத்தேச நீதிபதிகள் பரிந்துரைப் பட்டியலையும் சுப்ரீம் கோர்ட் திருப்பி அனுப்பியது. முன்னதாக இந்த பரிந்துரை பட்டியலை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் மற்றும் நீதிபதிகள் தத்து, லோதா அடங்கிய குழு பரிசீலனை செய்தது. மேலும் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு 12 பேர் அடங்கிய பட்டியலை இந்த குழு திருப்பி அனுப்பியுள்ளது. சென்னை ஹைகோர்ட்டுக்கு புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக 12 பேர் அடங்கிய […]

February 14, 2014 admin
டெல்லி முதல்வர் பதவியிலிருந்து கெஜ்ரிவால் ராஜினாமா! Running News

டெல்லி முதல்வர் பதவியிலிருந்து கெஜ்ரிவால் ராஜினாமா!

தில்லி சட்டமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் அனுபவமில்லாத நாங்களும் சில நேரங்களில் ஏதாவது தவறு செய்ய வாய்ப்பிருப்பதாகவும் யாருடைய மனதையாவது எனது கருத்து புன்படுத்தியிருந்தால் மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.. எதிர்கட்சிகளின் சட்டசபை நடவடிக்கைக்கு கண்டம் தெரிவித்துள்ள அவர், சட்டத்தை மீறி எம்எல்ஏக்கள் செயல்படுவதாக கூறினார்.முன்னதாக இந்த ஜன்லோக்பால் மசோதா சட்டமன்றத்தில் தோல்வி அடைந்ததையடுத்து கெஜ்ரிவால் ராஜினாமா செய்வார் என்று கூறப்பட்ட நிலையில் இன்று சட்டசபையில் பேசிய கெஜ்ரிவால், ”அம்பானியை காப்பாற்றுவதற்காக டில்லி அரசுக்கு எதிராக காங்கிரசும், பா.ஜ.,வும் […]

February 14, 2014 admin
பேஸ்புக்கில் கணக்கு தொடங்கிய பெண் கல்லால் அடித்து கொலை! Running News

பேஸ்புக்கில் கணக்கு தொடங்கிய பெண் கல்லால் அடித்து கொலை!

இன்றைய காலகட்டத்தில் சகலத் தரப்பினராலும் உபயோகப்படுத்தப்படும் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற இணையதளங்களில் பெண்கள் புகைப்படங்களை வெளியிடுவது இஸ்லாமிற்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் இத்தகைய பேஸ்புக்கில் நண்பர்களை தேடுவது சரியல்ல எனவும்.அதிலும் அவர்கள் தங்கள் புகைப்படங்களை வெளியிடுவது தவறானது என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் சிரியாவில் பேஸ்புக் இணையதளத்தில் கணக்கு தொடங்கிய பெண் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சிரியாவின் ராக்கா சிட்டியை சேர்ந்த பெண் அல் ஜஸ்ஸிம். அவர் பேஸ்புக் இணைய தளத்தில் […]

February 14, 2014 admin
உடனடி செய்திகள்