32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தொழில்

41 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 3 / 5
செய்திகள் வரிசை (பக்கம் 3)
ஆட்டோமொபைல் சந்தை அழிவை நோக்கி போகிறதா? Running News

ஆட்டோமொபைல் சந்தை அழிவை நோக்கி போகிறதா?

அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் தனது முதல் மின்சார காரை மூன்று வருடங்கள் முன் அறிமுகப் படுத்தியபோதே பெட்ரோலிய வகை கார் கப்பெனிகளின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து விட்டது. டெஸ்லா தவிர மற்ற கார் நிறுவனங்களும் அந்த சமயத்தில் தங்கள் மின்சார காரின் மாடல்களை ஆமை வேகத்தில் ஆர் & டி செய்து கொண்டிருந்தன. ₹35 லட்சம் கொடுத்து யார் வாங்கப் போகிறார் கள் என எண்ணின. ஆனால் டெஸ்லாவில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை கூடி மூன்று […]

August 16, 2019 admin
நம் நாட்டில் ஆட்டோமொபைல் இன்டஸ்ட்ரியில் 3 மாசத்தில் 2 லட்சம் பேர் வேலை போச்சு! Running News

நம் நாட்டில் ஆட்டோமொபைல் இன்டஸ்ட்ரியில் 3 மாசத்தில் 2 லட்சம் பேர் வேலை போச்சு!

ஆட்டோமொபைல் சந்தையில் உலக அளவில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது என்றால் அதற்கு காரணம் தமிழகம் தான். ஆட்டோமொபைல் தயாரிப்பில் தமிழகத்தின் பங்கு மட்டும் 35 சதவீதமாக உள்ளது. குறிப்பாக சென்னை ஆசிய அளவில் ஆட்டோமொபைல் தொழிலின் தலைமையகமாக திகழும் சூழ்நிலையில் இந்த ஆட்டோமொபைல் துறையில், கடந்த 3 மாதங்களில் 2 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக மோட்டார் வாகன முகவர்கள் கூட்டமைப்பான எப்ஏடிஏ(Federation of Automobile Dealers Associations) கூறியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் […]

August 4, 2019 admin
டாடாவின் நானோ கார் தயாரிப்புக்கு  “டாட்டா”! Running News

டாடாவின் நானோ கார் தயாரிப்புக்கு “டாட்டா”!

ரத்தன் டாடாவின் கனவு வாகனம் என்ற சிறப்புடன் அறிமுகப்படுத்தப்பட்ட ‘நானோ’ கார் உற்பத்தி நிறுத்தப்படுகிறது. கடந்த, 2009ல் 1 லட்சம் ரூபாய் விலையில் இந்த நானோ கார் அறிமுகமானது. இந்த காருக்கு துவக்கத்தில் இருந்த வரவேற்பு சில ஆண்டுகளில் குறையத் துவங்கியது. இதனால், உற்பத்தியும் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்த நிலையில் 2020, ஏப்., 1 முதல், நானோ கார் தயாரிப்பு விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்படும் எனத் தெரிகிறது. இது குறித்து  ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் பயணியர் வாகன […]

January 26, 2019 admin
தமிழ்நாடு எனது இன்னொரு வீடு! – சட்டக்கதிர் வெள்ளி விழாவில் இந்திரா பானர்ஜி! Running News

தமிழ்நாடு எனது இன்னொரு வீடு! – சட்டக்கதிர் வெள்ளி விழாவில் இந்திரா பானர்ஜி!

நம் நாட்டின் சட்டப் புத்தகங்கள் மற்றும் தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் சட்ட கதிர் இதழ் கடந்த 1992ல் தொடங்கப்பட்டது. இந்த இதழில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சார்பு நீதிமன்றங்களின் தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்தச் ‘சட்டக்கதிர்’ இதழ் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி சென்னையில் சட்டக்கதிர் சட்ட மாத இதழின் வெள்ளி விழாவும், சட்டம் மற்றும் நீதிக் கருத்தரங்கும், நீதித்துறையிலும் சட்டத்துறையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது. இந்த […]

January 19, 2019 admin
சிறிய கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்கத் தடை! Running News

சிறிய கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்கத் தடை!

ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை நாடெங்கும் அறிமுகப்படுத்தியதில் இருந்து, தொடர்ச்சியான முன்னேற்றங்கள் ஏற்பட்டு கொண்டுதான் வருகின்றன. மாநில நிதி அமைச்சர்கள் பலர் பங்கு பெற்ற, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டங்கள், ஒவ்வொரு முறையும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன.  அதிலும் இங்கேயுள்ள சிறு வணிகர்கள், பெரு வணிகர்கள் என, அனைத்து தரப்பினரும் தெரிவிக்கும் பல்வேறு கருத்துகளை, இந்தக் கவுன்சில் பொறுப்புடன் கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. அவர்கள் சந்திக்கும் சிரமங்களும், நடைமுறை சிக்கல்களும் மிகச் சரியாக புரிந்து  […]

January 13, 2019 admin
சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சிறப்பு பேருந்துகளின் விபரம்! Running News

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சிறப்பு பேருந்துகளின் விபரம்!

தீபாவளி விடுமுறைக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வருகின்ற 6-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட இருப்பதையடுத்து, சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக நவம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் 21 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு முன்னரே அறிவித்திருந்தது. ஆனால், தற்போது 5-ஆம் தேதியும் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை யடுத்து, முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த அதே அட்டவணைப்படி இன்று முதலே சிறப்பு […]

November 2, 2018 admin
காபி குடித்துக் கொண்டே டான்ஸ் ஆடலாம்! – ராஜூ சுந்தரம் திறந்து வைத்த ‘டான்ஸ் கஃபே’ Running News2

காபி குடித்துக் கொண்டே டான்ஸ் ஆடலாம்! – ராஜூ சுந்தரம் திறந்து வைத்த ‘டான்ஸ் கஃபே’

சென்னையில் புதிதாக ‘டான்ஸ் கஃபே ’ என்ற நடனத்துடன் கூடிய பொழுது போக்கு உணவகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. நடன இயக்குநர் ஷெரீஃப்பின் எண்ணத்தில் உதயமான இந்த ‘டான்ஸ் கஃபே’ என்ற வித்தியாசமான உணவகத்தை நடன இயக்குநர் ராஜு சுந்தரம் திறந்து வைத்தார். வளசரவாக்கத்தில் நடைபெற்ற இந்த உணவகத்தின் திறப்பு விழாவில் திரைப்பட நடன இயக்குநர்களான ராஜு சுந்தரம், சாண்டி, நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி மற்றும் ஏராளமான நாட்டிய கலைஞர்களும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்திய […]

September 24, 2018 admin
கலைஞர் மகன் சாதித்தான் என்று பெயர் வாங்க வேண்டும்! – மு.க.ஸ்டாலின் ஆசை! Running News

கலைஞர் மகன் சாதித்தான் என்று பெயர் வாங்க வேண்டும்! – மு.க.ஸ்டாலின் ஆசை!

எடுபிடியாக, அடிமையாகச் செயல்படும் அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். நான் ஓய்வெடுத்து விட்டால், இருளில் உள்ள தமிழகம் விடியவே விடியாது. என்று மு.க.ஸ்டாலின் விழுப்புரத்தில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பேசியுள்ளார். விழுப்புரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும் விழா நடை பெற்று வருகிறது. இந்த விழாவில் தொடக்க நிகழ்வாக விருதுகள் வழங்கப்பட்டது. அதன்படி பெரியார் விருது மும்பை வி.தேவதாசனுக்கும், அண்ணா விருது பொன்.இராமகிருஷ்ணனுக்கும், கலைஞர் விருது குத்தாலம் பி.கல்யாணம், பாவேந்தர் விருது […]

September 15, 2018 admin
கூடுதல் நேரம் பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தொகையை ரிட்டர்ன் கேட்கும் எஸ்பிஐ! Running News2

கூடுதல் நேரம் பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தொகையை ரிட்டர்ன் கேட்கும் எஸ்பிஐ!

மோடி அதிரடியாக அறிவித்த பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு கூடுதல் நேரம் பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தொகையைத் திருப்பிச் செலுத்துமாறு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தனது ஊழியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. 2016ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதியன்று பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு வங்கி ஊழியர்கள் கூடுதல் நேரமாகத் தொடர்ந்து 14 மணி நேரம் பணிபுரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. சில ஊழியர்களின் விடுமுறை விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன. அதைச் சரிக்கட்டுவதற்காக அவர்களுக்குக் கூடுதல் தொகையும் வழங்கப்பட்டது. 2017ஆம் […]

July 17, 2018 admin
மணல் குவாரிகள் மீதான தடை நீக்கம் …! – சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு Running News

மணல் குவாரிகள் மீதான தடை நீக்கம் …! – சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு

“இன்னும் 600 ஆண்டுகளில் பூமி ஒரு எரிபந்துபோல ஆகிவிடும்” என்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸின் எச்சரிக்கையைச் சுட்டிக்காட்டித்தான் ஐகோர்ட் நீதிபதி தமிழகத்தில் அடுத்த 6 மாத காலத்துக்குள் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் என்ற பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. நம் தமிழகத்தில் நடைபெற்ற மணல் கொள்ளை வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், பூமி எரிபந்தாவதற்கான முதல் கொள்ளி, தமிழகத்தில்தான் வைக்கப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றும்.மனிதன் ‘மண்’ வீட்டில் இருந்து ‘காரை’ வீட்டுக்கு […]

February 5, 2018 admin
உடனடி செய்திகள்