காணாமல் போகும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம்! – மே -25

காணாமல் போகும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம்! – மே -25

திருவிழாவில் குழந்தைகள் காணாமல் போகும் அனுபவம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஆனாலும் காணாமல் போன குழந்தைகளை பெற்றோர் தேடிக் கண்டு பிடித்துவிடுவார்கள். அல்லது குழந்தைகள் பெற்றோர்களைத் தேடிக் கண்டு பிடித்துக் கொள்வார்கள். திருவிழாவிலே குழந்தைகள் காணாமல் போகும் அந்தக் கணங்கள் குழந்தைகளுக்கம் தாய்மாருக்கும் கொடியதொரு பதைபதைப்பாகவே இருக்கும்.இந்நிலையில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 45 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாகவும் காணாமல் போன குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்களை மீண்டும் பெற்றோர்களிடம் ஒப்படைப்பதில் பெரும் சிரமம் உள்ளது. பல குழந்தைகள் தாங்கள் எங்கு இருந்தோம் என்பதுகூடத் தெரியாமல் உள்ளனர். மேலும் செவிதிறன் குறைபாடு, பார்வை இழந்த குழந்தைகள் மீட்கப்பட்டா லும் அவர்களை மீண்டும் சொந்த இடங்களுக்குக் கொண்டு சேர்ப்ப தில் பெரும் சிரமம் உள்ளது என்றும் தேசியக் குற்றப்பதிவு ஆணையம் தெரிவிக்கின்றது. இதையும் கவனத்தில் கொண்டே காணாமல் போகும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 25ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகளுக்கு அரசு மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தியே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
national missing child day. 2a
இட்டன் பாட்ஷ் அமெரிக்காவில் 1979-ம் ஆண்டு மே 25 ம் தேதி நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த இட்டன் பாட்ஷ் என்ற 6 வயது குழந்தை பள்ளிக்குச் செல்லும் வழியில் வழியில் காணாமல் போய்விட்டான். இட்டன் பாட்ஷின் தந்தை, புகைப்படக் கலைஞராக இருந்ததால் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுக் குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது தீவிர தேடுதல் வேட்டையை அங்கிருந்த ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டது. ஊடக நிறுவனங்களின் இந்த நடவடிக்கையால் 1979-ம் ஆண்டில் இருந்து 1981-ம் ஆண்டு வரையில் குளம், ஆறு போன்ற இடங்களில் அடையாளம் தெரியாமல் காணாமல் போன 29 குழந்தைகள் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டது. இதனையொட்டி 1983 ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ரீகன் மே 25-ம் தேதியை காணாமல் போகும் குழந்தைகளுக்கான தேசிய தினமாக அறிவித்தார். அன்றிலி ருந்து மே 25-ம் தேதி காணாமல் போகும் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. காணாமல் போகும் குழந்தைகள் இந்தியாவில் ஆண்டுதோறும் 45 ஆயிரம் குழந்தைகள் காணா மல் போகின்றனர் என்றும் இதில் தமிழகத்தில் மட்டும் 11 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றனர் என்றும் தேசியக் குற்றப் பதிவு ஆணையச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் மேற்கு வங்கமும், அடுத்த இடத்தில் தமிழகமும் இருக்கிறது என்பது வேதனையான விஷயம்.

இதற்கிடையில் குழந்தைகளைத் தொலைத் தாலோ அல்லது பொது இடங்களில் தனியாக இருப்பதைக் கண்டாலோ காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். இந்தப் புகாரின் அடிப்படையில் சைல்டு ஹெல்ப்லைன் தொடர்பு கொண்டு குழந்தை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். www.trackthemissingchild.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம்.

Related Posts