32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 133 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 133)
உலகமெங்கும் எர்த் அவர் ;  ஒரு மணி நேரம் விளக்குகள் அணைப்பு. மறக்க முடியுமா

உலகமெங்கும் எர்த் அவர் ; ஒரு மணி நேரம் விளக்குகள் அணைப்பு.

உலகம் முழுவதும் புவி வெப்பத்தால் இதுவரை ஏற்பட்ட மாற்றங்கள் கணக்கிலடங்காது. மேலும் உலகில் உள்ள எல்லா பாகங்களிலும் உள்ள காடுகள் அழிக்கப்பட்டதால் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. எங்கும் தொழில் மயம் ,அதன் மூலம் நாட்டை வளப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு ,மின்சார உற்பத்திக்காக எரிக்கப்படும் நிலக்கரி,பெருகி வரும் மோட்டார் வாகனங்கள், இரயில்கள், விமானங்கள் இவற்றிற்கு பயன்படுத்தும் பெட்ரோல் ,டீசல் வெளியிடும் புகை, சமையல் எரிவாயு, ரசாயன உரங்கள், குளிர்சாதனப் பெட்டி வெளியிடும் வாயுக்கள் இவை அனைத்தும் வளிமண்டலத்தில் நுழைந்து,அதன் […]

March 26, 2017 admin
திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய நாள்! மறக்க முடியுமா

திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய நாள்!

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் 20 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், 1967 தேர்தலில் தோல்வி அடைந்தது. ஆட்சியை தி.மு.கழகம் கைப்பற்றியது. புதிய முதல்_அமைச்சராக தி.மு.கழக தலைவர் அண்ணா பதவி ஏற்றார்.பதவி ஏற்பு விழா 1967  இதே மார்ச் 6_ந்தேதி, சென்னை ராஜாஜி மண்ட பத்தில் நடந்தது. கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில்தான் பதவி ஏற்பு விழா நடைபெறுவது வழக்கம். முதல் முறையாக, ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்றது. பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு, ராஜாஜி […]

March 6, 2017 admin
வாட்ஸ் அப் தொடங்கப் பட்ட நாளின்று + வாட்ஸப் மினி வரலாறு மறக்க முடியுமா

வாட்ஸ் அப் தொடங்கப் பட்ட நாளின்று + வாட்ஸப் மினி வரலாறு

ஜேன் கோம். பிரையன் ஆக்டன். இந்த இரண்டு பெயர்கள்தான் கொண்டவர்கள்தான் ‘வாட் ஸ் அப்’ என்ற தொழில் நுட்ப புரட்சியை உருவாக்கிய தொழில்நுட்ப வல்லுனர்கள். கோமுக்கு இப்போது வயசு நாற்பது. ஆக்டனின் வயது நாற்பத்தி நாலு. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் ஆசை ஆசையாக இவர்களிடமிருந்துதான் ‘வாட்ஸ் அப்’ உரிமையை காசு கொடுத்து வாங்கியது. விலை எவ்வளவு கொடுத்திருப்பார்கள்? குன்ஸாக சொல்லுங்களேன் பார்ப்போம். பத்து லட்சம்? ஐம்பது லட்சம்? ஒரு கோடி? பத்து கோடி? நூறு கோடி? […]

February 24, 2017 admin
“தமிழ் தாத்தா” – உ. வே. சாமிநாதையர்! மறக்க முடியுமா

“தமிழ் தாத்தா” – உ. வே. சாமிநாதையர்!

தமிழ் மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், அதாவது 19-ஆம் நூற்றாண்டின் நடுவில், தமிழுக்கு புத்துயிர் ஊட்ட, பலர் தோன்றினார்கள். அவர்களில் பெருமைக்குரியவராகத் திகழ்பவர்தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே. சாமிநாதன் என்கிற உ.வே.சா.! 1855-ஆம் ஆண்டு இதே பிப்ரவரி திங்கள் 19-ஆம் நாள் நாகை மாவட்டம் சூரியமூலை என்ற ஊரில் வேங்கடசுப்பையா- சரஸ்வதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர், தமிழுக்கு ஆற்றிய அரும்பணியும், அதன்பொருட்டு அவர் அடைந்த இன்னல்களும், தமிழ் மொழியை […]

February 19, 2017 admin
தில்லானா மோகனாம்பாள் படைப்பை திரைக்குத் தந்த கொத்தமங்கலம் சுப்பு! மறக்க முடியுமா

தில்லானா மோகனாம்பாள் படைப்பை திரைக்குத் தந்த கொத்தமங்கலம் சுப்பு!

இலக்கியவாதிகள் பொதுவாக சினிமாவில் சோபிப்பதில்லை என்ற அரதப்பழசான குற்றச்சாட்டு இன்றளவும் திரையுலகில் உண்டு. அதைத் தகர்த்த முன்னோடிகளில் ஒருவர் கொத்தமங்கலம் சுப்பு. தமிழ்த்திரையுலகின் தவிர்க்கமுடியாத சினிமா தயாரிப்பு நிறுவனமான ஜெமினி நிறுவனத்தின் பல வெற்றிப்படங்களின் ஆதாரமாக இயங்கியவர் சுப்பு. அங்கு ஜெமினி பட இலாகாவிலும், வாசன் அவர்கள் நடத்திய ஆனந்தவிகடன் பத்திரிகையில் எழுதும் எழுத்தாளராகவும், ஜெமினி படங்களில் நடிக்கும் நடிகராகவும் இப்படிப் பல துறைகளிலும் பிரகாசித்தவர் சுப்பு. கொத்தமங்கலம் சுப்பு என்கிற சுப்பிரமணியன் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை […]

February 15, 2017 admin
சதாவதானி செய்குத்தம்பி பாவலர் மறைந்த நாள் மறக்க முடியுமா

சதாவதானி செய்குத்தம்பி பாவலர் மறைந்த நாள்

நாஞ்சில் நன்னாட்டினரான செய்கு தம்பிப் பாவலர் சதாவதானி, தமிழ்ப் பெரும்புலவர், கலைக்டல். வடலூர் வள்ளலாரின் அருட்பாவை மருட்பாவென்று மறுத்தோரை எதிர்த்து “அருட்பா அருட்பாவே” என்று நிலை நாட்டியவர்.சிறாப் புராணத்திற்குச் சிறந்ததோர் உரையெழுதியவர். கேட்டாற்றுப்பிள்ளைத் தமிழ், அழகப்பக் கோவை முதலிய சிற்றிலக்கிய நூல்களையும், சில நாடக நூல்களையும் எழுதியவர். கூர்த்தமதி படைத்து விளங்கியதால் ஒரே சமயத்தில் நூறு வகையான செயல்கள் செய்யும் “சதாவதானம்” என்னும் கலையில் சிறந்து விளங்கியவர். செய்கு தம்பிப் பாவலர் பிறப்பால் முகம்மதியர். சதாவதானக் கலையில் […]

February 13, 2017 admin
மகத்தான பாடலாசிரியர் மருதகாசி! மறக்க முடியுமா

மகத்தான பாடலாசிரியர் மருதகாசி!

மரபிலக்கியச் சாயல்களையும், தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமிதங்களையும் திரைப்பாடல்களில் வெளிப்படுத்திய மகத்தான பாடலாசிரியர் மருதகாசி.பாடலாசிரியர்களின் வரலாற்றில், கண்ணதாசனுக்கு முன்பே அதிகப் பாடல்களை எழுதி சாதனை படைத்த முதல் கவிஞர் என்ற புகழுக்கும் உரியவர். ÷திருச்சி மாவட்டம் மேலக்குடிகாடு என்ற கிராமத்தில், 1920-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் அய்யம்பெருமாள், தாயார் மிளகாயி அம்மாள். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றபின், கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து, உயர் கல்வி கற்றார். அருணாசல கவிராயரின் படைப்புகளின் […]

February 13, 2017 admin
பரிணாமத் தத்துவத்தை உலகுக்கு அளித்த சார்ல்ஸ் டார்வின் தினம் இன்று! மறக்க முடியுமா

பரிணாமத் தத்துவத்தை உலகுக்கு அளித்த சார்ல்ஸ் டார்வின் தினம் இன்று!

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த இனம் தமிழினம்’ என்ற சொற்றொடரை நம்மில் பலர் கேட்டிருப்போம். கல் தோன்றுவதற்கு முன்பே மனிதன் தோன்றி விட்டான் என்பது கேட்பதற்கு சற்று அபத்தமாக இருந்தாலும் தமிழினம் மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதை எடுத்துக்கூற அப்படிப்பட்ட ஒரு மிகையான சொற்றொடர் உருவாக்கப்படிருக்கலாம். சரி கல்லும், மண்ணும் கிடக்கட்டும் மனிதன் எப்படி தோன்றினான் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்தது உண்டா? ஏதாவது ஒரு காலகட்டத்தில் எல்லோருக்கும் உதிக்கும் ஒரு கேள்விதான் […]

February 12, 2017 admin
மோதிலால் நேரு மறக்க முடியுமா

மோதிலால் நேரு

கஷ்ட ஜீவனமத்தில் வாழ்ந்து வந்த குடும்பத்தில் பிறந்து தனது அறிவாற்றல் மூலம் செல்வச் செழிப்பை அடைந்து, நாட்டின் சுதந்திரத்துக்காகத் தனது செல்வத்தை அர்ப்பணித்த மாபெரும் மனிதர் மோதிலால் நேரு. ஆக்ராவில் 1861 மே 6-ல் பிறந்தார்.மோதிலால் பிறப்பதற்கு 3 மாசங்களுக்கு முன்னரே அவரது அப்பா கங்காதர் நேரு காலமாகிவிட்டார். அலகா பாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியாற்றிவந்த மோதிலாலின் அண்ணன் நந்தலால்தான் அவரை வளர்த்தார். அலகாபாதில் குழந்தைப் பருவத்தைக் கழித்த மோதிலால், கான்பூரில் பள்ளிப்படிப்பைத் தொடங்கினார். சட்டம் பயின்ற […]

February 6, 2017 admin
முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை மறைந்த தினம்: மறக்க முடியுமா

முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை மறைந்த தினம்:

1969 ஜனவரி 31:- அண்ணாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சற்று நேரத்தில், மூச்சு விட இயலாத நிலை ஏற்பட்டது. அதனால் இதயத்துடிப்பு நின்று விட்டது. உடனே, அவருக்கு செயற்கை முறையில் மூச்சு வரும்படி செய்தார்கள். அதைத் தொடர்ந்து, அவருக்கு மீண்டும் இதயத் துடிப்பு ஏற்பட்டது. நாடித்துடிப்பும், ரத்த அழுத்தமும் மீண்டும் பழைய நிலையை அடைந்தன. எனினும் “உணர்வு” முழு அளவில் திரும்பவில்லை. கவர்னர் உஜ்ஜல்சிங், திராவிடர் கழகத்தலைவர் ஈ.வெ.ரா.பெரியார், காமராஜர், சி.சுப்பிரமணியம், முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத் […]

February 3, 2017 admin
உடனடி செய்திகள்