32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

ஆய்வு முடிவுகள்

146 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 3 / 15
செய்திகள் வரிசை (பக்கம் 3)
செய்திகளின் எதிர்காலம்:பொழுதுபோக்குச் சந்தையில் 7 சதவீதப் போராட்டம்! Exclusive

செய்திகளின் எதிர்காலம்:பொழுதுபோக்குச் சந்தையில் 7 சதவீதப் போராட்டம்!

“தகவல் என்பது அதிகாரம்” (Information is Power) என்ற காலம் மெல்ல மறைந்து, “தகவல் என்பது பொழுதுபோக்கு” (Information is Entertainment) என்ற காலத்திற்குள் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். ஒரு இணையதளச் செய்தி ஆசிரியராக, திரையில் மின்னும் இந்தத் தரவுகள் நம்மைப் போன்றவர்களுக்குத் தூக்கமில்லாத இரவுகளைக் கொடுக்கலாம். ஆனால், இதைப் புரிந்து கொள்வதுதான் ஊடகத்துறையின் அடுத்த கட்டப் பிழைப்பிற்கு (Survival) ஒரே வழி. தரவுகள் சொல்லும் கசப்பான உண்மை சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் செய்தி நுகர்வு (News Consumption) […]

April 18, 2026 admin
குடும்ப பட்ஜெட்டில் பெண்களே கெட்டிக்காரர்கள்: ஷாப்பிங்கில் ஆண்களை அலறவிடும் ஆய்வு முடிவுகள்! Exclusive

குடும்ப பட்ஜெட்டில் பெண்களே கெட்டிக்காரர்கள்: ஷாப்பிங்கில் ஆண்களை அலறவிடும் ஆய்வு முடிவுகள்!

“வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வரச் சொல்லி ஆண்களிடம் ஒரு பட்டியலைக் கொடுத்தால், அவர்கள் திரும்பி வரும்போது பையில் இருக்கும் பொருட்களையும், கையில் இருக்கும் பில்லையும் பார்த்தால் குடும்பத் தலைவிகளுக்கு தலைசுற்றும்.” இது பல வீடுகளில் நடக்கும் அன்றாட நகைச்சுவை நாடகம். ஆனால், இது வெறும் கிண்டல் மட்டுமல்ல, இதில் ஒரு ஆழமான பொருளாதார உண்மையும் ஒளிந்திருக்கிறது. ஒரே பொருளை வாங்குவதற்கு ஆண்கள் ஏன் கூடுதல் பணம் செலவழிக்கிறார்கள்? பெண்களால் மட்டும் எப்படி மிகச்சரியான ‘டீல்களை’ பிடிக்க […]

April 9, 2026 admin
கூகுள் முதல் இன்ஸ்டாகிராம்: ஊடக உலகின் சிம்மாசனத்தைக் கைப்பற்றிய சமூக வலைதளங்கள்! Exclusive

கூகுள் முதல் இன்ஸ்டாகிராம்: ஊடக உலகின் சிம்மாசனத்தைக் கைப்பற்றிய சமூக வலைதளங்கள்!

பாரம்பரிய ஊடகங்களின் கோட்டைகள் தகர்ந்து வரும் நிலையில், ராய்ட்டர்ஸ் இன்ஸ்டிடியூட் (Reuters Institute) வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கை ஊடக உலகின் எதிர்காலம் குறித்த அதிரடி உண்மைகளைச் சுமந்து வந்துள்ளது. 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இன்றைய இளைய தலைமுறையினர் செய்திகளை அணுகும் முறையில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றங்களை இந்த ஆய்வு தரவுகளுடன் நிரூபிக்கிறது. 2015 vs 2025: ஒரு தசாப்த காலத் தலைகீழ் மாற்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தரவுகளின்படி, 36 சதவீத […]

March 28, 2026 admin
தினமும் ஒரு கப் காபி..நோய்களைத் தள்ளி வைக்கும் ‘அமுதம்’!-புதிய ஆய்வில் ஆச்சரியத் தகவல்! எடிட்டர் ஏரியா

தினமும் ஒரு கப் காபி..நோய்களைத் தள்ளி வைக்கும் ‘அமுதம்’!-புதிய ஆய்வில் ஆச்சரியத் தகவல்!

நம்மில் பலர் காலை உணவு இல்லாமல்கூட இருப்பார்கள்; ஆனால், காபி-டீ இல்லாமல் இருக்கமாட்டார்கள்! இதில் காபி குடிப்பதை ஃபேஷனாகவும் தங்களின் சுதந்திரமாகவும் கூட பலர் கருதிக்கொள்கிறார்கள். சுண்டியிழுக்கும் நறுமணம்; கிறங்கடிக்கும் சுவை; உள்ளிருக்கும் நாடி நரம்புகளில் மடைதிறந்து சட்டெனப் பாயும் உற்சாக வெள்ளம் என மனிதகுலத்தின் முக்கால்வாசி பேர் இக்காப்பியின் கட்டுப்பாட்டில்தான்! இத்தனைக்கும் 1800கள் வரை இந்த தேசத்தில் காபி, டீ இல்லை. பெரும்பான்மை இல்லங்களில் கொதிக்கும் நீரில் சுக்கு (காய்ந்த இஞ்சி) தட்டி, சுவைக்கு கருப்பட்டி சேர்த்து […]

March 22, 2026 admin
உலக மகிழ்ச்சி அறிக்கை 2026:மின்னணு திரையில் தொலைந்துபோகும் நிம்மதி! Exclusive

உலக மகிழ்ச்சி அறிக்கை 2026:மின்னணு திரையில் தொலைந்துபோகும் நிம்மதி!

சிரிப்புக்கும் மகிழ்ச்சிக்கும் வரி கிடையாதுதான், ஆனால் அந்த மகிழ்ச்சியை அளவிடுவதற்கு ஒரு சர்வதேச அளவுகோல் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ‘உலக மகிழ்ச்சி அறிக்கை’ (World Happiness Report), இந்த ஆண்டும் பல சுவாரசியமான மற்றும் அதிர்ச்சிகரமான தகவல்களைச் சுமந்து வந்துள்ளது. 2026-ஆம் ஆண்டுக்கான இந்த அறிக்கையில், உலகின் மகிழ்ச்சியான நாடாக ஃபின்லாந்து ஒன்பதாவது முறையாகத் தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. அதே நேரத்தில், இந்தியா தனது நிலையில் சிறிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. ஃபின்லாந்தின் […]

March 19, 2026 admin
பூமி ஒரு கேம்?-விரைவில் ‘ஆஃப்’ செய்யப்படலாம்!அதிர வைக்கும் ஏஐ பேராசிரியர்! Exclusive

பூமி ஒரு கேம்?-விரைவில் ‘ஆஃப்’ செய்யப்படலாம்!அதிர வைக்கும் ஏஐ பேராசிரியர்!

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் உண்மையானதுதானா அல்லது ஒரு சக்திவாய்ந்த கணினியால் உருவாக்கப்பட்ட மெய்நிகர் உலகமா? பல ஆண்டுகளாகத் தத்துவவாதிகள் கேட்டு வந்த இந்தக் கேள்விக்கு, பிரபல ஏஐ (AI) பேராசிரியர் ஒருவர் தற்போது பகீர் விளக்கத்தைக் கொடுத்துள்ளார். இந்தப் பிரபஞ்சம் ஒரு ‘சூப்பர் இன்டெலிஜென்ஸ்’ (Superintelligence) எனப்படும் அதீத நுண்ணறிவை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ‘சிமுலேஷன்’ என்றும், அந்த நோக்கம் நிறைவேறியதும் இது ‘சுவிட்ச் ஆஃப்’ செய்யப்படலாம் என்றும் அவர் எச்சரிக்கிறார். ஏன் இந்த சிமுலேஷன் […]

March 14, 2026 admin
போலி ஆய்வுகள்…போலி முடிவுகள்…-விஞ்ஞானிகள் ஏன் பொய் சொல்கிறார்கள்? – ஒரு பகீர் பின்னணி! Exclusive

போலி ஆய்வுகள்…போலி முடிவுகள்…-விஞ்ஞானிகள் ஏன் பொய் சொல்கிறார்கள்? – ஒரு பகீர் பின்னணி!

மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் அறிவியல் என்பது வெறும் பாடப்புத்தகம் அல்ல; அது நாம் உலகைப் பார்க்கும் கண்கள். “அறிவியல் என்றாலே அது உண்மையானது, ஆதாரப்பூர்வமானது” என்கிற ஒருமித்த கருத்து பல நூற்றாண்டுகளாக நம்மிடையே வேரூன்றி இருக்கிறது. இதற்குக் காரணம், அறிவியல் என்பது குருட்டு நம்பிக்கைகளைத் தகர்த்து, ‘ஏன்?’, ‘எப்படி?’ என்ற கேள்விகளுக்கு விடை தேடும் ஒரு பயணமாக இருப்பதே ஆகும். அறிவியலின் அடிப்படைத் தூண்களாக நாம் கருதுபவை: பகுத்தறிவு: எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் தர்க்கரீதியாகச் சிந்திப்பது. ஆதாரங்கள்: […]

March 11, 2026 admin
பெஸ்டியா? பாப்புலர் குரூப்பா?-பதின்ம வயதினரை ஆட்டிப்படைப்பது யார்? Exclusive

பெஸ்டியா? பாப்புலர் குரூப்பா?-பதின்ம வயதினரை ஆட்டிப்படைப்பது யார்?

பதின்ம வயதில் (Adolescence) நுழையும் சிறுவர்களுக்குப் பெற்றோர்களை விட நண்பர்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும். “யார் சொல்வதைக் கேட்பது?” என்கிற குழப்பம் அவர்களுக்கு ஒருபுறம் இருந்தாலும், உண்மையில் அவர்கள் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொருவரைத் தேடுகிறார்கள் என்பதை அமெரிக்காவின் புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகம் (FAU) நடத்திய புதிய ஆய்வு நிரூபித்துள்ளது. நட்பு என்பது ஒரே மாதிரியான அழுத்தம் தரும் விஷயம் அல்ல; அது மிகவும் நுணுக்கமானது என்பதை 543 மாணவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வு விளக்குகிறது. இருவேறு […]

March 9, 2026 admin
சொந்தச் சொதப்பல்களைக் கண்டு சிரிப்பதே ஆகச்சிறந்த ‘பவர் மூவ்’ Exclusive

சொந்தச் சொதப்பல்களைக் கண்டு சிரிப்பதே ஆகச்சிறந்த ‘பவர் மூவ்’

வாழ்க்கையில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் நம்மைப் பல நேரங்களில் சங்கடத்திற்குள்ளாக்கும். ஒரு பார்ட்டியில் கண்ணாடி கதவை கவனிக்காமல் மோதுவது அல்லது ஒருவரது பெயரைத் தவறாகக் குறிப்பிடுவது எனப் பட்டியல் நீளும். இதுபோன்ற தருணங்களில் நாம் காட்டும் ‘ரியாக்‌ஷன்’தான் நமது ஆளுமையைத் தீர்மானிக்கிறது என்கிறது அமெரிக்க உளவியல் சங்கத்தின் (APA) புதிய ஆய்வு முடிவுகள். சங்கடம் VS சிரிப்பு: எது அதிக மதிப்பைத் தரும்? கார்னெல் பல்கலைக்கழகத்தின் ‘எஸ்சி ஜான்சன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்’ பேராசிரியரான […]

March 6, 2026 admin
பறவைகளின் கீதத்தில் ஒளிந்திருக்கும் மனித மூளையின் வரைபடம் ஆய்வு முடிவுகள்

பறவைகளின் கீதத்தில் ஒளிந்திருக்கும் மனித மூளையின் வரைபடம்

இயற்கையின் இசைக்கலைஞர்களான கனரி (Canary) பறவைகளின் கீச்சொலிகள் வெறும் வசந்த காலத்தின் அழைப்பல்ல; அவை கோடிக்கணக்கான நரம்பணுக்களின் நுட்பமான உரையாடல். மனித மொழியின் ரகசியங்களை உடைக்க, இப்போது ஒரு புதிய சாவி கிடைத்துள்ளது. அதன் பெயர் ‘TweetyBERT’. கூகுளின் தேடல் இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் அதே ‘BERT’ தொழில்நுட்பத்தை, பறவைகளின் பாடல்களைப் புரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் மடைமாற்றியுள்ளனர். இயற்கையின் தரவுத் தொகுப்பு கனரி பறவைகள் ஏன்? மற்ற பறவைகளை விடவும் இவை மிக நீண்ட, சிக்கலான பாடல்களைப் பாடும் திறன் […]

March 6, 2026 admin
உடனடி செய்திகள்