32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 75 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 75)
நம் உடம்பிற்கு மதுவை விட கோபம் மிக மோசமானது!. Exclusive

நம் உடம்பிற்கு மதுவை விட கோபம் மிக மோசமானது!.

இது சங்கிகளுக்கு மட்டுமல்ல, நம்மில் பலருக்கும், ஏன் எல்லோர்க்குமே பொருந்தும். ஒரு 8×10 ரூமில் 10 ஆண்களை அடைத்து வைத்தால் அவர்கள் சந்தோஷமாக பேசி சிரித்துக் கொண்டிருப்பார்கள், அல்லது சீட்டாட்டம் போல ஏதாவது விளையாடிக் கொண்டு இருப்பார்கள். காரணம், அவர்களுக்குள் பேசும்போது ஏதாவது ஒரு டாபிக்கில் அபிப்ராய பேதங்கள் வந்தால் அதை தவிர்த்து, அந்த விஷயத்தை கடந்து பைபாஸ் செய்வார்கள். அதனால்தான் அந்த சந்தோஷமும், பிரச்சினையற்ற போக்கும் அங்கிருக்கும்.ஆனால் அதே ரூமில் நான்கு பெண்களை அடைத்து வைத்தால், […]

May 19, 2024 admin
இன்றையத் துயரம்: அச்சிதழ்களுக்கு அஞ்சலி செலுத்திய “Reader’s Digest Exclusive

இன்றையத் துயரம்: அச்சிதழ்களுக்கு அஞ்சலி செலுத்திய “Reader’s Digest

ஏகப்பட்ட ஆண்டுகளுக்கு முன்னரே உள்ளம் கவர் ரீடர்ஸ் டைஜஸ்ட் இந்த மே இதழ்தான் கடைசி என்று வந்துள்ள சேதி கனமான கவலையை ஏற்படுத்தி விட்டது. !. சர்வதேச வாசகர்களின் கர்வமிகு அடையாளம். வழுவழு தாளில் வசீகரிக்கும் கையடக்கக் கச்சித இதழ். வாசகர் உலகை – உலக வாசகர்களை வாரி விழுங்கிய “அச்சு வெள்ளம்”. ரீடர்ஸ் டைஜெஸ்ட் (Readers Digest) 1922 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் டெவிட் வாலஸ் மற்றும் அவரது மனைவி லிலா பெல் வாலஸ் ஆகியோரால் […]

May 18, 2024 admin
விவாகரத்து என்பது யாதெனில்..? Exclusive

விவாகரத்து என்பது யாதெனில்..?

ஆண்கள் வருவார்கள் , போவார்கள். எப்போதும் என் தோழிகள் உடனிருப்பார்கள் எனச் சொல்லி இருப்பவர் ஜெனிஃபர் லோஃபஸ். ஜெனிஃபர் 3 முறை விவாகரத்து ஆனவர். இங்கே பெண்களுக்கு ஆண்கள் அளவுக்கு நட்பு வட்டம் இல்லை. பல பெண்களுக்கு தோழிகளே இல்லை. தோழிகள் இருந்தால் விவாகரத்து அவ்வளவு கடினமாக இருக்காது பெண்களுக்கு. இது கிடக்கட்டும்…. ஏதோ ஒன்றுக்கு நீங்கள் தேர்வாகவில்லை என்றால் நிறுவனங்கள் ஒரு டெம்ப்ளேட் மெயில் அனுப்பும் இல்லையா ? அது போல செலிபிரிட்டிகள் விவாகரத்து செய்யும் […]

May 15, 2024 admin
யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டுவை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்துவதே பிழையானது!. Exclusive

யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டுவை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்துவதே பிழையானது!.

யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டதை ஒட்டி ஊடக நண்பர் பேசிக்கொண்டிருந்தார். ‘இது அநியாயம்ங்க, எப்படிங்க இதை அனுமதிக்கலாம் பேட்டி எடுத்ததுக்கு எப்படி கைது பண்ண முடியும். பேட்டில பேசின விஷயங்களுக்கு பேட்டி எடுத்தவர் அல்லது ஒளிபரப்பினவர் எப்படி பொறுப்பாக முடியும், இது ஊடக சுதந்திரத்தையே கேள்விக்குறியாக்குகிற ஒன்றாக இருக்கிறது, இப்படியே போனால் யாருமேபேட்டி எடுக்க முடியாது’’ என்று கொதிப்பாக பேசினார். வெயில் நேரத்தில் இவ்வளவு கொதிப்பு ஆகாதுதான். அவருக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் கொடுத்துவிட்டு உரையாடினேன். […]

May 14, 2024 admin
சாதாரணப் பொது ஜனம் ரயில் கொள்ளையர்களாக மாற வாய்ப்பு! Exclusive

சாதாரணப் பொது ஜனம் ரயில் கொள்ளையர்களாக மாற வாய்ப்பு!

கடந்த சில மாதங்களாக இந்திய ரயில்வேயில் ஒரு விஷயம் அதிகம் நடக்கிறது. பலரும் கவனித்திருக்கலாம். நம்முடைய ரயில்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது. அடிமாடுகளை கேரளாவுக்குக் கொண்டு போகிற லாரிகளை விடவும் நெரிசலாக ரயில் பெட்டிகள் மாறிவிட்டன. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஏறுவதும், அதில் எந்தத் தயக்கமும் இல்லாமல் பிறருடைய சீட்டுகளில் அமர்ந்துகொள்வது, அதில் தூளி கட்டித் தூங்குவது, பாதைகளில் கூட உட்கார்ந்துகொள்வது என்பது சகஜமாகிவிட்டது. ஸ்லீப்பரில் ஆரம்பித்து இப்போது ஏசி இரண்டாம் […]

May 14, 2024 admin
வெள்ளிங்கிரி மலையை ஓர் ஆன்மிக குப்பைமலையாக்கி விட்டார்கள்1 Exclusive

வெள்ளிங்கிரி மலையை ஓர் ஆன்மிக குப்பைமலையாக்கி விட்டார்கள்1

இப்போதெல்லாம் வெள்ளிங்கிரி மலை ஆன்மிக ட்ரெக்கிங் பற்றி இரண்டுவிதமான செய்திகள்தான் வருகின்றன. ஒன்று அங்கே குவிந்து கிடக்கும் குப்பைகள். மற்றொன்று அங்கே மூச்சுத்திணறல் உண்டாகி மயக்கம்போட்டு மாண்டுபோகிறவர்கள் பற்றியது. பல நூறு டன் குப்பைகளை ஆண்டு தோறும் அகற்ற வேண்டியிருக்கிறது. வருடத்திற்கு பத்து முதல் இருபது பேர் வரை இறந்துபோகிறார்கள். கடந்த பத்தாண்டுகளாகத்தான் இந்த கூத்து. சென்ற ஆண்டு இந்த மலை ஏறினேன். சிறுவயதிலிருந்தே எனக்கு மிகவும் பிடித்த ஆன்மிக ட்ரெக்கிங் தளங்களில் ஒன்று இது. ஈஷா […]

May 13, 2024 admin
மோடி எந்த விவாதத்துக்கும் தயாராக இருக்க மாட்டார்! Exclusive

மோடி எந்த விவாதத்துக்கும் தயாராக இருக்க மாட்டார்!

ஓய்வு பெற்ற ஒரு நீதிபதி மற்றும் மூன்று மூத்த ஊடகவியலாளர்கள் இணைந்து அமெரிக்க ஜனாதிபதி விவாதம் போல ஒன்றை ஏற்பாடு செய்ய முயற்சித்து வருகிறார்கள். எந்த அரசியல் சார்பும் இன்றி இந்த விவாதம் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். இதற்கு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி இருவருக்கும் அழைப்பு அனுப்பி இருக்கிறார்கள். இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு நேற்று காங்கிரஸ் கடிதம் அனுப்பி இருக்கிறது. ராகுல் அல்லது மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொள்வார் என்று கட்சி தெரிவித்திருக்கிறது. […]

May 12, 2024 admin
ராட்வீலர் மாதிரி கொடூர நாயினங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கலாம் Exclusive

ராட்வீலர் மாதிரி கொடூர நாயினங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கலாம்

வளர்ப்பு நாய்களைப் பற்றி நிறைய கற்பிதங்கள் அல்லது போலிநம்பிக்கைகள் உண்டு. அந்த நாய்கள் சுத்தமாக இருக்கும். தடுப்பூசி போட்டிருப்பார்கள். அந்த நாய்கள் மனிதர்களை கடிக்காது. அது கத்த மட்டும்தான் செய்யும். அவை பேன்ட் ஷர்ட் ஷூ டை அணியவில்லையே தவிர மிகவும் நாகரிகமானவை. ஆங்கிலத்தில்தான் குரைக்கும். அவை மிகவும் அன்பானவை. புது ஆட்களிடம் கூட அன்போடு பாசமாக வாலாட்டி நடந்துகொள்ளும். கண்ட இடங்களில் வாயை வைக்காது. டாமி சூச்சூ போ என்றால் சொன்ன இடத்தில் மட்டும்தான் போகும். […]

May 8, 2024 admin
மறக்க முடியாத மர்ம மரணங்கள் பட்டியல் தொடர்கிறது! Exclusive

மறக்க முடியாத மர்ம மரணங்கள் பட்டியல் தொடர்கிறது!

இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே.ஜெயக்குமார் தனசிங் (60) மர்ம மரணம் தொடர்பான விசாரணையில் பல்வேறு முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் உள்ளது. அவர் எங்கேயாவது நெல்லை பக்கம் பார்த்தால் அண்ணா என்பார். அவர் மரணம் அடைந்ததை ஒட்டி விசாரணைகள்நடந்துகொண்டிருக்கிறன. பல்வேறு மாதிரியான யூகங்கள் வெளி வருகின்றன. இது மாதிரியான வழக்குகள் முன்பே தமிழகத்தில் உதாரணமாக2012ல் அமைச்சர் கே என் நேரு அவர்களின் தம்பி ராமஜெயம் கொலையுண்டது இன்னும் கண்டுபிடிக்க முடியாத மர்மமாகவே இருக்கிறது. […]

May 6, 2024 admin
31-ம் ஆண்டில் மதிமுக தொண்டர்களுக்கு வைகோ செய்யும் நன்மை என்ன தெரியுமா? Exclusive

31-ம் ஆண்டில் மதிமுக தொண்டர்களுக்கு வைகோ செய்யும் நன்மை என்ன தெரியுமா?

1964-ம் வருஷம் சென்னை, கோகலே மன்றத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு கருத்தரங்கில், பேரறிஞர் அண்ணா முன்னிலையில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது, வைகோவுக்கு. அதன் மூலம் அவரது அரசியல் பயணமும் ஆரம்பித்தது. பின்னர் திமுக மாணவரணி இணைச் செயலாளர், அமைப்புச் செயலாளர் என பல்வேறு பதவிகளை எட்டிப்பிடித்தார். அதை அடுத்து ,தொடர் பொதுக்கூட்டங்களில் வைகோ இடைவிடாமல் நிகழ்த்தும் உரைக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்தது.இது அவருக்கு வேறு வித நெருக்கடியையும் உருவாக்கிக் கொடுத்தது. இதனிடையே அவர் 1989-ம் ஆண்டு திடீரென […]

May 6, 2024 admin
உடனடி செய்திகள்