32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 74 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 74)
எக்சிட் போல்கள் தரும் குழப்பங்கள்! Exclusive

எக்சிட் போல்கள் தரும் குழப்பங்கள்!

கடைசிக் கட்டத் தேர்தல் முடிந்து விட்டதால் எக்சிட் போல் முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கின்றன. தேசிய அளவிலான பெரும்பாலான ஆய்வுகள் பாஜக தலைமையிலான என்டிஏவுக்கே வெற்றி என்பதைக் குறிக்கின்றன. நானூறை அடைய முடியவில்லை என்றாலும் சென்ற தேர்தலை விட மேம்பட்ட எண்ணிக்கையில்தான் பாஜக ஆட்சி அமைக்கப் போவதாகத் தோன்றுகிறது. எக்சிட் போல் முடிவுகள் நம்பகத்தன்மை கொண்டவை அல்ல என்று பாஜக விமர்சகர்கள் அங்கலாய்க்கிறார்கள். மாநில எக்சிட் போல் முடிவுகள் பல முறை தவறி இருக்கின்றன. தேசிய அளவில், […]

June 2, 2024 admin
காளைகளைப் பாதுகாப்பதற்கென கூடிப் பணியாற்றுங்கள்! Exclusive

காளைகளைப் பாதுகாப்பதற்கென கூடிப் பணியாற்றுங்கள்!

உடலுறவைப் பற்றி மெத்தப் படித்த மனிதர்களாகிய நீங்கள் என்ன கருத்துகளைக் கொண்டிருக்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு மாடு. எனக்கு ஐந்தறிவுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. என்னையும் என் இனத்தவரையும் பொறுத்தவரை, உடலுறவு கொள்வது மிகுந்த இன்பம் தரும் செயல். பிள்ளை பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் ‘கடமை’ என்று உங்களில் சில மேதாவிகள் உடலுறவைப் புரிந்துகொள்வது எனக்குத் தெரியும். நான் கன்று ஈன்று நான்கு மாதங்களுக்கு மேல் கடந்துவிட்டன. இன்னும் சில நாட்களில் எனக்கு உடலுறவுகொள்ள வேண்டிய தேவை […]

June 1, 2024 admin
சுவாமி விவேகானந்தரின் இறுதி மூன்று நாட்கள்! Exclusive

சுவாமி விவேகானந்தரின் இறுதி மூன்று நாட்கள்!

தாம் உடலை விட இன்னும் மூன்று நாட்கள் இருந்தபொழுது கங்கைக் கரையோரம் மூன்று பேருடன் உலாவிக் கொண்டிருந்த போது ஓரிடத்தில் நின்றார். மடத்து நிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் வில்வமரம் ஒன்று இருந்தது. அந்த வில்வ மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்வது சுவாமிகளின் வழக்கம். அந்த வில்வமரத்தைச் சுட்டிக்காட்டி தாம் தேகத்தை விட்ட பின்பு அதை இம்மரத்துக்கு அருகில் வைத்து தகனம் செய்து விடும்படி சுவாமிகள் உத்தரவிட்டார்.இந்த பேச்சைக் கேட்டவர்களுக்கு என்ன விடை சொல்வது என்று விளங்கவில்லை. சடலத்தைத் […]

May 31, 2024 admin
ஏன் இம்முறை பாரதீய ஜனதா உறுதியாகத் தோற்கிறது? Exclusive

ஏன் இம்முறை பாரதீய ஜனதா உறுதியாகத் தோற்கிறது?

சுவாரசியமான கேள்வி இல்லையா? 90 களின் துவக்கமாக இருக்கலாம், கோடை விடுமுறையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மாணவனாக இருந்த காலத்தில் என்னுடைய சக நண்பன் ஒருவன் நான் பாரதீய ஜனதாவை ஆதரிப்பேன் என்று என்னிடம் சொன்னான். என்னால் இன்றுவரை அந்த அதிர்ச்சியை செரித்துக் கொள்ள முடியவில்லை. தமிழகத்தின் ஊரகப் பகுதியில் வசிக்கிற ஒரு கீழ்நிலை நடுத்தரக் குடும்பம் பாரதீய ஜனதாவை ஆதரிக்காது என்று அப்போது நான் உறுதியாக நம்பினேன். எனது நம்பிக்கையின் அடிப்படைகள் வேறு. நான் ஒரு […]

May 30, 2024 admin
காவ்யாவை வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்! Exclusive

காவ்யாவை வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்!

காவ்யா மாறன் குறித்து தோழர்களும், புரட்சியாளர்களும் வன்மம் கக்குகிறார்கள். SRH அணியின் முதலாளி சிறுதொழில் செய்கிறார்கள் அப்பாவும் மகளும் என்றெல்லாம். 2008 இல் IPL அறிமுகமான போது அவருக்கு வயது 16, கடந்த போட்டிகளின் போது கூட அவர் பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை.இந்த IPL தொடர் முழுவதும் அவர் தனது அணியை திடல்களில் இருந்து உற்சாகப்படுத்தினார். எல்லாக் கிரிக்கெட் ரசிகர்களையும் போல தோல்வியடைந்த போது கலங்கினார். வெற்றியடைந்த போது கொண்டாடினார். நேற்றைய போட்டியில் கூட இறுதியில் KKR […]

May 27, 2024 admin
பிரதமர் பதவி வகிப்பவருக்கு என்று ஒரு மாண்பு இல்லையா? Exclusive

பிரதமர் பதவி வகிப்பவருக்கு என்று ஒரு மாண்பு இல்லையா?

‘முஸ்லிம்களிடம் அடிமைப்பட்டு அவர்களிடம் எதிர்க் கட்சிகள் முஜ்ரா நடனம் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.’… என்று பிரதமர் மோடி பீகாரில் பிரச்சார மேடையில் பேசி இருக்கிறார். முஜ்ரா என்பது முகலாயர் காலத்தில் உருவான கலாச்சாரம். அரச குடும்பத்தினரும், அதிகார வர்க்கத்தினரும் தங்கள் பொழுதுபோக்குக்காக (!) பணக்கார பாலியல் தொழிலாளி இல்லங்களுக்குப் போவது வழக்கம். அங்கே அவர்களை மகிழ்விக்க இளம் விலைமாதர்கள் ஆடும் நடனத்துக்கு முஜ்ரா நடனம் என்று பெயர். இவை பெரும்பாலும் பாலியல் இச்சையைத் தூண்டும் வகையில் அரைகுறை ஆடைகளுடனும், […]

May 26, 2024 admin
சவக் குழிகளாகும் சமூகவலைத்தளங்கள்! Exclusive

சவக் குழிகளாகும் சமூகவலைத்தளங்கள்!

சென்ற மாதம் ஆந்திராவையே உலுக்கிய “கீதாஞ்சலி விவகாரம்” சிலருக்கு தெரிந்திருக்கலாம். ஆந்திராவில் ஆளும் ஜெகன் அரசு ஏழை மக்களுக்கு இலவசமாக வீட்டுமனைகள் வழங்கிக்கொண்டிருக்கிறது. அந்தத் திட்டத்தின் கீழ் வீட்டுமனை பெற்றவர்களில் ஒருவர்தான் இளம்பெண்ணான கீதாஞ்சலி. வீட்டுமனை பட்டா வழங்கும் விழாவில் கலந்துகொண்டு வீட்டுக்கான சான்றிதழ்களைப் பெறுகிறார். சொந்தமாக ஒரு காணி நிலம் கூட இல்லாத கீதாஞ்சலிக்கு சொந்தமாக வீடு கிடைத்ததில் பெரிய மகிழ்ச்சி. உள்ளூர் தொலைகாட்சி ஒன்றில் உற்சாகம் பொங்க முதல்வர் ஜெகனுக்கு நன்றி சொல்லிப் பேசுகிறார் […]

May 23, 2024 admin
மருத்துவப் படிப்பு எனும் மாயத் தோற்றம்…! Exclusive

மருத்துவப் படிப்பு எனும் மாயத் தோற்றம்…!

17 வயதில் மருத்துவக்கல்லூரியில் நுழைந்து இளநிலை முடிக்கும் போது வயது 24 ஆகியிருக்கும்.பிறகு குறைந்தபட்சம் ஒரு வருடம் NEET preparation. 25 வயதில் முதுநிலை சேர்ந்தால் முடிக்கும் போது 28. அதன் பின்னர் பிறகு ஒன்று அல்லது இரண்டு வருட super speciality தயாரிப்பு. முடிக்கும் போது 32 அல்லது 33. வெகு சிலர் 30-31ல் முடிக்கின்றனர். இந்த கணக்கு எந்த வருடமுமே தவறாமல் மிகச் சரியாக நடந்தால் வரும் Result. சூப்பர் ஸ்பெசாலிட்டி முடிக்கும் வரை கடிவாளமிட்ட குதிரை […]

May 22, 2024 admin
ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ராய்சியின் இறப்பின் விளைவுகள்?! Exclusive

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ராய்சியின் இறப்பின் விளைவுகள்?!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ராய்சி ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து போயிருக்கிறார். ராய்சியின் ஆட்சிக்காலம் ஈரானின் மாற்றத்துக்கு முக்கியமான ஒரு மைல்கல்லாக இருந்திருக்கிறது. அவருக்கு முன்பிருந்த ஹசன் ரூஹானி ஒரு மிதவாதத்தலைவர். பேச்சு வார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்த்து வைத்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தியவர். அமெரிக்காவுடன் அணுஆயுத ஒப்பந்தத்தை கையொப்பமிட்டதில் ரூஹானிக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அந்த ஒப்பந்தத்தை கிழித்துப் போட்டது […]

May 21, 2024 admin
அச்சு இதழ்களின் சாம்ராஜ்யம் முடிந்துவிட்டது! Exclusive

அச்சு இதழ்களின் சாம்ராஜ்யம் முடிந்துவிட்டது!

89 ஆண்டுகள் வந்துகொண்டிருந்த ரீடர்ஸ் டைஜெஸ்ட் அச்சிதழை இங்கிலாந்தில் நிறுத்திவிட்டார்கள். எனக்கு மிகப்பிடித்த இதழ்களில் ஒன்று. சிறுவயதில் ஒரு முறை கூட அதன் புதிய இதழை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்ததே இல்லை. எப்போதும் ஆண்டுகளுக்கு முந்தைய பழைய இதழ்கள்தான் கிடைக்கும். பழைய இதழாகவேதான் இதை அச்சிடுவார்களோ என்றுகூட நினைத்திருக்கிறேன். உக்கடம் பழைய புத்தகசந்தையில் அதிகம் பார்த்த இதழ் இதுதான். முழுக்க முழுக்க வாசகர் துணுக்குகளால் நிறைந்திருக்கும். உடல்நலம், ஃபேஷன், மனநலம், மோடிவேஷன் என எல்லாம் கலந்துகட்டி நிறைவான […]

May 20, 2024 admin
உடனடி செய்திகள்