32°C
விளம்பரம்
Advertisement

தபால் துறையில் 28,000 பணியிட வாய்ப்பு!

admin Published: January 28, 2026 2 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


ந்திய தபால் துறை என்பது வெறும் கடிதங்களைச் சுமந்து செல்லும் அமைப்பு மட்டுமல்ல; அது இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தொடர்பை ஏற்படுத்தி, கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற்றுத் திகழும் உலகின் மிகப்பெரிய தகவல் தொடர்பு வலைப்பின்னல் ஆகும். 1854-இல் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, சாதாரண மனிதனின் சேமிப்பு முதல் அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் வரை அனைத்தையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தபால் துறைக்கு ஈடு இணையற்ற இடமுண்டு. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பாதுகாப்பான மத்திய அரசுத் துறையில் பணியாற்றுவது என்பது பல இளைஞர்களின் கனவாகும். அந்த கனவை நனவாக்கும் வகையில், தற்போது இந்திய அஞ்சல் துறையில் ஜிடிஎஸ் (GDS) பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட வேலைவாய்ப்பு குறித்த விரிவான தகவல்கள் இதோ:

தேர்வு இல்லை! தபால் துறையில் 28,000 பணியிடங்கள்… சூப்பர் அறிவிப்பு

படித்து முடித்துவிட்டு அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு பொற்கால வாய்ப்பு வந்துள்ளது. 2026-ஆம் ஆண்டுக்கான கிராம அஞ்சல் பணியாளர் (GDS) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM) மற்றும் உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலிப்பணியிடங்கள் விவரம்: இந்தியா முழுவதும் மொத்தம் 28,740 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,009 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலங்களான கேரளாவில் 1,691, ஆந்திராவில் 1,060 மற்றும் கர்நாடகாவில் 1,023 பணியிடங்கள் எனப் பரவலாக வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முக்கியத் தேதிகள்:

  • விண்ணப்பம் தொடங்குகின்றது: ஜனவரி 31, 2026

  • விண்ணப்பிக்கக் கடைசி நாள்: பிப்ரவரி 14, 2026

  • விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: பிப்ரவரி 16

  • திருத்தங்கள் மேற்கொள்ள: பிப்ரவரி 18 – 19

  • தகுதியுடையோர் பட்டியல் வெளியீடு: பிப்ரவரி 28, 2026

தகுதி மற்றும் சம்பளம்:

  • கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (தேர்வு கிடையாது, 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி வழங்கப்படும்).

  • நிபந்தனைகள்: உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். மிதிவண்டி அல்லது இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

  • வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை. (SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு உண்டு).

  • சம்பளம்: கிளை போஸ்ட் மாஸ்டர் பணிக்கு ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படும்.

தகுதியுள்ளவர்கள் ஆந்தை வழிகாட்டி/வேலைவாய்ப்பு என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். மத்திய அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் இந்த அறிய வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!

உடனடி செய்திகள்