இங்கிலாந்து பிரதமர் போரிஸ் டூட்டிக்கு வந்துட்டாருன்னு சொல்லுங்க!

இங்கிலாந்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 20 ஆயிரத்தைத் கடந்து உள்ளது. உலகில் அதிகமாக கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இங்கிலாந்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. அதிலும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூட இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் ஐ சியூவில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்றார். குணமடைந்த பிறகு, ஒரு வாரத்துக்கு முன்பு வீடு திரும்பினார். தற்போது தனது ஓய்வு இல்லத்தில் தங்கி இருப்பவர் நாளை முதல் பணிக்கு திரும்புகிறார். இதை ஒட்டி இன்று தனது அலுவலக பணிகளை தொடர்வது குறித்தும், இனி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் ராப் மற்றும் வேந்தர் ரிஷி சுனிக் ஆகியோருடன் மூன்று மணிநேர ஆலோசனையில் ஈடுபட்டார்.
இது குறித்து வந்த தகவல்படி ,கொரோனா வைரஸ்தொற்று காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.தொடர்சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தல் போன்றவற்றின் காரணமாக தற்போது அதில் இருந்து மீண்டுள்ளார். இதனையடுத்து நாளை (திங்கட்கிழமை) பிரதமர் அலுவலகத்திற்கு வந்து பணிகளை துவங்க உள்ளார் என இங்கிலாந்து பத்திரிகை செய்தியை மேற்கோள் காட்டி சின்ஹூவா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றால் மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் அந்நாட்டின்வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் ராப் பிரதமர் பொறுப்பை ஏற்றிருந்தார்.
இதனிடையே பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இல்லத்தில் நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக்கை சந்தித்தார் என ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக 1,49,569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலியானோரின் எண்ணிக்கை 20,319 ஆக அதிகரித்துள்ளது. 20 ஆயிரத்திற்கும் மேல் பலியோரின் நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், மற்றும் பிரான்ஸ்நாடுகளுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.