பணி புரிவோகளுக்கான பி.இ. படிப்பு: ஜூலை 11 வரை விண்ணப்பிக்கலாம்!

பணி  புரிவோகளுக்கான பி.இ. படிப்பு: ஜூலை 11 வரை விண்ணப்பிக்கலாம்!

ம்.. தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் சாா்பில் பணியாற்றுபவா்களுக்கான பி.இ. படிப்பில் சேர ஜூலை 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் 8 அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றிக் கொண்டே படிக்க விரும்புபவா்களுக்கான பி.இ. படிப்புகள் நடத்தப்படுகின்றன. சிவில், மெக்கானிகல், எலெக்ட்ரிகல் – எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் – கம்யூனிகேஷன், கணினி அறிவியல் ஆகிய 5 படிப்புகள் இதில் நடத்தப்படுகின்றன.நடப்பு ஆண்டு முதல் மூன்றரை ஆண்டு (7 செமஸ்டா்) கல்வியாக நடத்தப்பட உள்ள இந்தப் படிப்புகளில் சேர விரும்புபவா்கள் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பம், அது தொடா்பான விவரங்களை https://www.ptbe-tnea.com/ இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பங்களை ஜூலை 11-ஆம் தேதி மாலை 5 மணி வரை அனுப்பலாம். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு கோவை தொழில்நுட்பக் கல்லூரி (சிஐடி) ஒருங்கிணைப்பு மையத்தை 0422 – 2590080, 94869 77757 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்கேற்கும் கல்லூரிகள்:

1. அரசினர் பொறியியற் கல்லூரி. (GCT) கோயம்புத்தூர் – 641073
2. அரசினர் பொறியியற் கல்லூரி, சேலம் – 636011
3. அரசினர் பொறியியற் கல்லூரி, திருநெல்வேலி – 627007
4. அழகப்பசெட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி (ACGCET), காரைக்குடி – 630 004
5. தந்தை பெரியார் அரசினர் பொறியியற் கல்லூரி- வேலூர் 632 002
6. அரசினர் பொறியியற் கல்லூரி, பர்கூர் – 635104
7. கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (CIT), கோயம்புத்தார் – 641 014
8. தியாகராஜர் பொறியியற் கல்லூரி, மதுரை – 625 015

தகுதி:

விண்ணப்பதாரர் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளன்று பட்டயப் படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிகிறவராகவோ அல்லது இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்திருந்தவராகவோ இருக்க வேண்டும்.

1) விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பதாரர் www.ptbe-tnea.com என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும்.

2) ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு முடிவுறும் நாள்: 11.07.2025

3) பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் ஆன்லைன் வாயிலாகச் செலுத்த வேண்டும்.

4) இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தினை இணையதளம் வாயிலாக பதிவு செய்வதற்கு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை (TFC) மையத்தினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்து (TFC) மையங்களிலும் போதிய அளவில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தக் கல்வியாண்டில் Part Time B.E./B.Tech.பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும்.

மேலும் விவரங்கள் அறிய www.ptbe-tnea.com என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

CLOSE
CLOSE
error: Content is protected !!