“குட் சமாரிட்டன் சட்டம்” குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு”
ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சரியான நேரத்தில், சரியான இடத்திற்கு கொண்டு சேர்க்கும் இந்த கோல்டன் ஹவர் என்ற முதல் ஒரு மணிநேரம் தான், வாழ்விற்கும் சாவிற்குமான இடைவெளியாக பல சமயங்களில் உள்ளது.”You can’t afford to be slow in an Emergency” என்பார்கள். அதாவது தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்தானது என்பதால், அடிபட்ட முதல் மணிநேரத்தை ‘கோல்டன் ஹவர்’ என்று அழைக்கிறார்கள் மருத்துவர்கள். முதலாம் உலகப்போரின் போது பிரெஞ்சு போர் வீரர்களின் உயிர்காத்த மருத்துவர்கள் ஆரம்பித்து வைத்த இந்த ‘கோல்டன் ஹவர்’ கான்செப்ட், விபத்துகள் மற்றும் போர்முனைக் காயங்களில் மட்டுமன்றி ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக், விஷக்கடி, தற்கொலை முயற்சி ஆகிய அனைத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது. இதுபோன்ற சூழல்களில் உயிர்காக்கும் சிகிச்சைகள், முதல் மணிநேரத்திற்குள் மேற்கொள்ளப்படும் போது, மரணங்களின் எண்ணிக்கை 22 % வரை குறைகிறது என்கிறது மருத்துவ அறிவியல்.
விபத்தில் அடிபட்ட யாரோ ஒருவருக்கு உதவப்போய், தேவையில்லாமல் போலீஸ் ஸ்டேஷன், விசாரணைகள், கோர்ட், கேஸ் என்றெல்லாம் பின்னர் அலைய வேண்டி வருமே… அதற்கு என்ன செய்வது? இந்த பயத்தினாலேயே பலரும் அடிபட்டவர்களுக்கு உதவிட பயப்படுகிறார்களே, அதற்கு என்ன செய்வது… என்ற கேள்விகள் எழுகிறதல்லவா? உண்மைதான். அப்படி ஏதேம் விபத்தில் அடிபட்டவர்களுக்கு உதவுபவர்களைத் தொல்லைப்படுத்தக் கூடாது என்பதற்காகவே வந்தது ‘குட் சமாரிட்டன் சட்டம்.’
மார்ச் மாதம் 2016-ம் ஆண்டு முதல் சுப்ரீம் கோர்ட்டில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம், விபத்தில் படுகாயமுற்றவர்களின் உயிர்காக்கவும், அவர்களுக்கு உதவுபவர்களை ஊக்கப்படுத்தவும் உதவும் முக்கியமான சட்டமாகும். இதன்படி விபத்தில் அல்லது மற்ற அசம்பாவிதங்களில் உதவும் குட் சமாரிட்டன்களை விசாரணைகளில் போலீஸ் இணைக்கக்கூடாது.
* இவர்கள் தங்களது அடையாளத்தை போலீசிற்கும், மருத்துவமனைக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை.
* இந்த குட் சமாரிட்டன்களுக்கு சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளிலிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
* முக்கியமாக, மருத்துவமனைகள் அடிபட்டவர்களுக்கு சிகிச்சை மறுக்கக் கூடாது. முதலுதவிக்கு கட்டணமும் பெறக்கூடாது.
* சாட்சியளிக்க தாமாகவே முன்வந்தால் ஒழிய, இந்த குட் சமாரிட்டன்களை கட்டாயப்படுத்தக் கூடாது.
– என்று கூறும் இந்த குட் சமாரிட்டன் சட்டம், 2019-ம் ஆண்டு முதல் மோட்டார் வாகன சட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.
அங்ஙனம் விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு உதவுபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட “குட் சமாரிட்டன் சட்டம்-2016” குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.இது குறித்து யுஜிசி செயலர் மணீஷ் ஆர். ஜோஷி பல்கலை., கல்லூரி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
சாலை விபத்துகளில் மதிப்புமிக்க உயிரை இழக்க நேரிடுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காதது, காவல் துறை, சட்ட நடைமுறைகள் போன்ற காரணங்களால் உதவி செய்யத் தயங்குவது போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டவரை காப்பாற்றுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2016-ம் ஆண்டு “குட் சமாரிட்டன்’ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம், விபத்தில் பலத்த காயமடைந்தவர்களின் உயிர்காக்கவும், அவர்களுக்கு உதவுபவர்களை ஊக்கப்படுத்தவும் உதவும் முக்கியமான சட்டமாகும். இதன்படி விபத்தில் அல்லது மற்ற அசம்பாவிதங்களில் உதவும் குட் சமாரிட்டன்களை விசாரணைகளில் போலீஸ் இணைக்கக்கூடாது. இவர்கள் தங்களது அடையாளத்தை காவல்துறைக்கும், மருத்துவமனைக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை.
இந்த குட் சமாரிட்டன்களுக்கு சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளிலிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும். முக்கியமாக, மருத்துவமனைகள் அடிபட்டவர்களுக்கு சிகிச்சை மறுக்கக் கூடாது. முதலுதவிக்கு கட்டணமும் பெறக்கூடாது. சாட்சியளிக்க தாமாகவே முன்வராத நிலையில் அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது.
எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைவரும் அச்சமின்றி, மனிதநேயத்துடன் உதவ முன் வர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு குட் சமாரிட்டன் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து அவர்களுக்கு தெளிவான விளக்கங்களை அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.