மெட்ராஸ் ஐகோர்ட்டில் அசிஸ்டெண்ட் புரொகிராமர் ஜாப் ரெடி!
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
காலியிடம்: அசிஸ்டென்ட் புரோகிராமர் பிரிவில் 46 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: அறிவியல், வணிகவியல், பொருளாதாரம், புள்ளியியல் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி,. சாப்ட்வேர் டேட்டா சயின்ஸ் பிரிவில் பி.இ., / எம்.இ., / எம்.எஸ்சி., / எம்.சி.ஏ., முடித்தவர்களுக்கு கம்ப்யூட்டர் அப்ளிகேசன் டிப்ளமோ தேவையில்லை.
வயது:1.7.2021 அடிப்படையில் பொது பிரிவினர் 18 -30 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்றபிரிவினர் 18-35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, வைவா வாய்ஸ்.
தேர்வு மையம்: சென்னை அல்லது மற்ற பகுதிகள். இறுதி முடிவை நீதிமன்ற தேர்வு பிரிவு எடுக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 15.3.2021
விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு