காஷ்மீர் துலிப் தோட்டம் வந்து பாருங்க – மோடி அழைப்பு = வீடியோ!

காஷ்மீர் துலிப் தோட்டம் வந்து பாருங்க – மோடி அழைப்பு = வீடியோ!

சியாவிலேயே மாபெரும் துலிப் தோட்டம் என்ற பெருமை இந்தியாவில் உள்ள ஒரு துலிப் மலர்த் தோட்டத்திற்கு உண்டு. அந்தத் ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசம், ஸ்ரீநகரில், சபர்வான் மலையடிவாரத்தில், துலிப்தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில், 64 விதமான, 15 லட்சம் மலர்கள் பூக்கின்றன. இந்த தோட்டம், மக்கள் பார்வைக்கு, திறக்கப்பட்டாச்சு.. நம் நாட்டு மக்கள் எல்லோரும் வந்து பாருங்க என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார் .

தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே. இந்தப் படம் யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் மறக்காது. அப்படி ஒரு அழகான காதல் கவிதை அது…ஷாருக்கான் ஒரு அழகு என்றால், கஜோல் இன்னொரு பிரமிப்பு.. அந்தக் காதல் காவியத்தின் இன்னொரு அங்கமாக இருந்தது அந்த அழகான துலிப் மலர் தோட்டம். துலிப் என்றாலே அழகுதான். அதைப் பார்த்தாலே காதல் வரும்.. அதுவும் காதல் துணையுடன் துலிப் மலர்க் கூட்டத்துக்குள் புகுந்து வந்து பாருங்கள், நிறைய வாழ வேண்டும் என்ற ஆசையும் வரும். வாழ்நாளில் ஒரு முறையாவது குடும்பத்தோடு போய் பார்க்கத் தகுந்த தோட்டமிது

இந்த தோட்டத்தில் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வண்ணமயமான கண்காட்சி அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படும். அவ்வகையில், இந்த ஆண்டின் கண்காட்சி 15 நாட்களிலிருந்து 30 நாட்கள் வரை நடைபெறும் இந்த கண்காட்சியை உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் உள்பட லட்சக்கணக்கான மக்கள் கண்டு களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 17-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் பாரசீக நாட்டில் இருந்து துலிப் மலர்கள் ஐரோப்பா கண்டத்துக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு பல பகுதிகளில் மரபணு மாற்றம் செய்து துலிப் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன

இந்நிலையில் இந்த தோட்டம் குறித்து, பிரதமர் மோடி, “ஜம்மு – காஷ்மீருக்கு, மார்ச், 25ம் தேதி சிறப்பான நாளாக அமைந்துள்ளது. மிக பிரமாண்டமான துலிப் தோட்டம் திறக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள், இந்த மிக அழகான தோட்டத்தைப் பார்க்க, ஜம்மு – காஷ்மீருக்கு வர வேண்டும். அங்குள்ள மக்களின் விருந்தோம்பலை அனுபவிக்க வேண்டும்.”இவ்வாறு, பிரதமர் கூறியுள்ளார்.

Related Posts

error: Content is protected !!