“தாமரை மலரட்டும் – தமிழகம் வளரட்டும்.” என்ற Tag Line வெளியிட்ட பாஜக!

“தாமரை மலரட்டும் – தமிழகம் வளரட்டும்.”  என்ற Tag Line வெளியிட்ட பாஜக!

சென்னையில் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு அறிவுசார் பிரிவின் சார்பாக கட்சியின் புதிய நிர்வாகிகளுடன் தற்போது நடைபெற இருக்கும் தமிழ் நாடு சடடமன்ற தேர்தலில் பின்பற்ற வேண்டிய யுக்திகள் குறித்து “தமிழகமும் தாமரையும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் பாஜகவின் ஆதிக்க கொடி பறந்து வரும் நிலையில் தர்போது தமிழகத்திலும் பாஜக பக்காவாக காலூன்ற பாடுபட்டு வர்கிறது. .அதன் பொருட்டு நட்சத்திர வேட்பாளர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா என பல்வேறு முக்கிய புள்ளிகளுடன் களமிறங்கியுள்ள பாஜக அதற்கான பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு பாஜக அறிவு சார் பிரிவின் தலைவர் செல்வி தாமு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், .கு. க. செல்வம்,. ஆர்.கே. சுரேஷ், கலா மகேஷ், கண்மணி, பிரமீட் நடராஜன், டெய்சி சரண் என தமிழ்நாடு பாரதிய னதாதா கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தற்போது நடைபெற இருக்கின்ற 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கட்சியின் செயல் திட்டங்கள் குறித்தும், பாஜக சார்பில் தயாரான தேர்தல் அறிக்கை 12 ஆயிரம் இடங்களில் 4,500 பெட்டிகள் அமைக்கப்பட்டு, 60 எல்.இ.டி வாகனம் மூலமாக இரண்டு லட்சத்து 10 ஆயிரம் மக்களிடமும், மிஸ்டு கால் தொடர்பு மூலம் 1.2 லட்சம் மக்களிடமும் கருத்து கேட்கப்பட்டதையும் பாஜகவின் தேர்தல் அறிக்கை சாராம்சம்சங்களையும் விரிவாக சொல்லும்படி அறிவுறுத்தப்பட்டது..

மேலும் வேட்பாளர்கள் வெற்றி பெற செய்ய எடுக்க வேண்டிய யுக்திகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு விளக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் Tag Line ஆக – “தாமரை மலரட்டும் – தமிழகம் வளரட்டும்.” என்ற Tag Line வெளியிடப்பட்டது.

Related Posts