அரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு ஐந்தாண்டுகளில் 1.3 கோடி உயர்ந்திருக்குது!

அரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு ஐந்தாண்டுகளில் 1.3 கோடி உயர்ந்திருக்குது!

அன்றாட காய்ச்சிகளின் கஷ்டம் மட்டும் அதே நிலையில் இருப்பது வாடிக்கை. அதே சமயம் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் மட்டும் கோடிக் கணக்கில் எகிறுவதும் வாடிக்கை. அந்த வகை யில்   2015ம் ஆண்டுக்குப் பிறகு டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் சொத்து மதிப்பு ரூ.1.3 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது அவரது பிரமாணப் பத்திரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

புது தில்லி தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மிக் கட்சியின் முதல்வா் வேட்பாளா் அரவிந்த் கேஜ்ரிவால் ஜாம் நகரில் உள்ள தோதல் அலுவலகத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தாா்.

அவரது பிரமாணப் பத்திரத்தில் கேஜ்ரிவாலின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.3.4 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அவரது சொத்து மதிப்பு ரூ.2.1 கோடி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கேஜ்ரிவாலின் வங்கி இருப்பு 2015ல் ரூ.2.26 லட்சமாக இருந்த நிலையில், 2020ல் இது ரூ.9.65 லட்சமாக உயர்ந்துள்ளது.

அதேப்போல, கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவாலின் வங்கி இருப்பு 2015ம் ஆண்டில் 15 லட்சமாக இருந்த நிலையில், 2020ல், அதுவே ரூ.57 லட்சமாக உயர்ந்துள்ளது.

இது பற்றி கட்சியினர் கூறுகையில், சுனிதா கேஜ்ரிவால் விருப்ப ஓய்வு பெற்றதால் கிடைத்த பணப்பலன் மற்றும் நிரந்தர வைப்புத் தொகையில் சேமித்து வைத்திருந்த ரொக்கம் ஆகியவற்றால்தான் வங்கி இருப்பு அதிகரித்துள்ளது என்று தெரிவித்தனர்.

மேலும், சுனிதாவின் அசையாச் சொத்துக்களின் மதிப்பு உயராத நிலையில், கேஜ்ரிவாலின் அசையாச் சொத்துக்களின் மதிப்பு ரூ.92 லட்சத்தில் இருந்து தற்போது ரூ.177 லட்சமாக உயர்ந்துள்ளது.

2015ம் ஆண்டு இருந்த அதே அசையாச் சொத்துக்கள்தான் தற்போதும் கேஜ்ரிவாலிடம் இருப்பதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் இயற்கையாகவே சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாகவும் கட்சியினர் விளக்கம் அளித்துள்ளனர்.

Related Posts

error: Content is protected !!