‘ஆர் யூ ஓகே பேபி’ – விமர்சனம்

‘ஆர் யூ ஓகே பேபி’ – விமர்சனம்

நம் நாட்டில் தத்தெடுப்பு விவகாரத்தில் ஏகப்பட்ட சட்ட சிக்கல் இருக்கிறதா? அதனால்தான் சட்டவிரோதமாக குழந்தைகளை வாங்குவது அதிகமிங்கு நடக்கிறது.. அதாவது நம் நாட்டில் திருமணமும், திருமணமான மறு வருடமே குழந்தைக்கான எதிர்பார்ப்பும் வாழ்வில் இன்றியமையாததாகிறது. சிலர் அன்பின் அடையாளமாக, காதலின் சாட்சியாக குழந்தைகளை பார்க்கிறார்கள். பலரும் தங்கள் தலைமுறையை விருத்தி செய்யும் ஆதாரமாக குழந்தைகளை நினைக்கிறார்கள். பல்வேறு காரணங்களால் இயற்கையாக கரு உண்டாகி, குழந்தை பிறப்பது குறைந்து வரும் தற்காலத்தில், குறைந்தபட்சம் சுற்றி இருப்பவர்கலின் கேள்வி, கேலிகளில் இருந்து தப்பிக்க குழந்தை பெற்றுக் கொள்கிறவர்களும் உண்டு. இதனிடையே குழந்தை பிறக்காத சோகத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களை பற்றிய செய்திகள் நாள்தோறும் ஊடகங்களில் வருகின்றன. அதே சமயம் தத்தெடுத்த குழந்தைகளால் பின்னாளில் சட்ட சிக்க வருவதும் நம் நாட்டில் அதிகம். இப்படியான சூழலில் இந்த தத்து குழந்தை பின்னணியில் தான் டி வியில் நடத்திய சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் அவலங்களை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்து. டிவியில் அந்த எபிசோட் ஷூட்டிங் நடக்கும் போது அதற்கு பின்னால் என்னென்ன அவமானங்களை சந்திக்கிறார், ஒரு நிகழ்ச்சிக்கு எப்படி ஆட்களை பிடிக்கிறார்கள் பின்னர் சீன் பரபரப்பாக வருவ தற்கு இயக்குனர் தரும் டார்ச்சர் ஆகியவற்றுடன் குழந்தையில்லா தம்பதிகளின் வலியையும், தத்து எடுப்பதில் உள்ள நடை முறை சிக்கல்களும் புரிய வைத்து விடுகிறார் டைரக்டர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

கதை என்னவென்றால் சமுத்திரக்கனி மற்றும், வித்யா (அபிராமி) குழந்தையில்லாமல் தவிக்கிறார்கள். இன்னொரு பக்கம் திருமணமே ஆகாமல் லிவ் டூ கெதரால் கர்ப்பமாகும். முல்லையரசி. இவரிடம் நர்ஸ் ஒருவர் நைசாக பேசி அவர் பிரசவிக்கும் குழந்தையை வாங்கி பாலன் தம்பதிக்கு தருகிறார். ஒரு வருடம் ஆன நிலையில் தனது குழந்தை யை திரும்ப தரும்படி கேட்கிறார் முல்லையரசி. பாலன் தர மறுப்பதால் விவகாரம் . ஏகப்பட்ட குடும்ப பிரச்சனைகளுக்கு தனது “சொல்லாததும் உண்மை” என்ற தொலைக்காட்சி லைவ் ஷோ மூலமாக நியாயம் வழங்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனை அணுகுகிறார். லக்ஷ்மி கதையைப் புரிந்து மிக எமோஷனலாக இந்த குழந்தையின் தாயை வைத்து நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார். ஆனால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை. மாறாக போலீஸார் குழந்தை தத்து கொடுத்ததில் சட்ட மீறல் உள்ளது என்ற கோணத்தில் தத்து பெற்ற கேரள தம்பதிகள் மீது வழக்கு பதிவு செய்து, குழந்தையை கைப்பற்றி சென்னையில் உள்ள காப்பகத்தில் சேர்த்து விடுகிறது. இறுதியில்.குழந்தை யாருக்கு கிடைக்கிறது என்பது எதிர்பாராத திருப்பம்.

குழந்தையை தத்தெடுக்கும் பாலனாக வரும் சமுத்திரக்கனிக்கு குறைந்த வசனங்கள் மற்றும் அதிக நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்ப்பு என்பதைப் புரிந்து அந்த கேரக்டருக்கே ஒரு வெயிட்டை ஏற்படுத்தி தருகிறார். அபிராமி வளர்ப்பு பிள்ளைக்காக தாய்ப்பால் சுரக்க வைக்கும் காட்சி நெகிழ்ச்சி. அதிலும் திருமணம் செய்யாமல் வாழும் முல்லையரசி அசோக் மூலமாக பிறக்கும் குழந்தையை தத்து கொடுத்துவிட்டு பின்னர் குழந்தை யைத் திரும்பக் கேட்டு போலீஸ் வரை செல்வது பெற்ற தாயின் உரிமை என்றாலும் அவர் குழந்தைக்காக பெற்றதை தவிர வேறு எதுவுமே செய்யவில்லை என்பதை அப்பட்டமாக எக்ஸ்போஸ் செய்து அசத்துகிறார்.
பொறுப்பற்ற காதலனாக அசோக் எதார்த்தம் காட்டுகிறார்.

குழந்தை யாருக்கு சொந்தம் என்ற வழக்கு கோர்ட்டுக்கு சென்ற பிறகு நடக்கும் வாத பிரதி வாதங்கள் நிஜ கோர்ட்டை கண்முன் நிறுத்து கிறது. நீதிபதியாக வரும் ஆடுகளம் நரேன் பொறுமையை கையாண்டிருப்பது கதாபாத்திரத் துக்கு பொருத்தம். மிஷ்கின் உள்ளிட்ட ஏனைய கதாபாத்திரங் களும் ஜாடிக்கேத்த மூடிகள்.

இளையராஜா இசை, கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவு ஓ கே.

ஆனால் முறைதவறி பிறந்த குழந்தை மற்றும் சட்டத்துக்கு புறம்பாக வாங்கியக் குழந்தையை வைத்து சொல்ல வந்த கதைக்கு தேவையான அழுத்தங்களைக் கொடுக்க தவறி விட்டதால் ஜஸ்ட் ஒரு எபிசோட் பார்த்த ஃபீலீங் மட்டுமே வருகிறது.

மார்க் 2.75.5

error: Content is protected !!