தயிர் சாதம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
அனைத்து சமையலறைகளிலும் பிரதானமாக உள்ள ஒரு உணவு, தயிர். இந்தளவுக்கு தயிரை மக்கள் விரும்பி உண்ண, அதன் தன்மைகளே முக்கிய காரணங்களாக உள்ளன. குறிப்பாக தயிரின் குளிர்ச்சி, இனிமையான சத்துகளே அவை பலராலும் விரும்பப்பட காரணமாக இருக்கிறது. இதுவொரு பக்கம் இருந்தாலும் விருப்ப உணவு என்பதைத்தாண்டி தினமும் தயிர் சாப்பிட்டால் அது நமக்கு அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருளான தயிரில் கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளன. ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி, சருமத்திற்கும் சிறந்த மாய்ஸ்சரைசராக தயிர் உள்ளது. அதன் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோமா?
“தயிராக இருந்தாலும், தயிரிலிருந்து தயாரிக்கப்படும் மோராக இருந்தாலும் இரண்டிலும் சத்துகள் அதிகம் காணப்படுகின்றன. குறிப்பாக, உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் (புரோபயாடிக்ஸ்) அதிகம் காணப்படுகின்றன. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் தன்மை இரண்டுக்கும் உண்டு. ஒரு மனிதனுக்கு தினமும் தேவைப்படும் கால்சியம் அளவில் 12 சதவிகிதம் 100 கிராம் தயிர், மோர் எடுத்துக்கொண்டால் கிடைத்துவிடும்.
கோடி கோடியாகப் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானுக்குக் காணிக்கையாகக் கொட்டிக் கொடுக்கின்றனர்.திருமலை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, சித்திரான்னம், பாதாம் கேசரி, அதிரசம், வடை, முறுக்கு, பொங்கல், புளி சாதம், உள்ளிட்ட உணவு பதார்த்தங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்பதை நாம் அறிவோம். ஆனால் திருமலையில் தினசரி குலசேகரன்படியைத் தாண்டி புதிய மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது தயிர்சாதம் மட்டும்தான்!!
இந்த தயிர்சாதிற்கு பல பெயர்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் தயிர் சாதம் கர்நாடகாவில் மொசரன்னா,கேரளாவில் தயிர் சோறு,தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் பெருகண்ணம் அல்லது தடோஜனம்,மகாராஷ்டிராவில் தாஹி பட் என்று அழைக்கப்படுகிறது இந்த உணவு!!
தயிர் சாதத்தில் புரோட்டீன், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகளவில் உள்ளது.இந்த சத்துக்கள் அனைத்துமே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதவை.தயிர் சாதத்தில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், இது செரிமானத்திற்கு உதவுகிறது. அதுவும் தயிர் சாதத்தை உட்கொள்வது வயிறு மற்றும் செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளித்து, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க உதவி புரியும்.அதோடு மட்டுமல்லாமல் தயிர் சாதம் மன அழுத்தத்தில் இருந்து நம்மை விடுவிக்க உதவுகிறது.தயிர் சாதம் குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியது. தயிர் சாதம் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடித்து விடும் என்று எண்ணி சிலர் இதைத் தவிர்க்க கூடும்!!
அத்துடன் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது: தயிர் சாதத்தில் ப்ரோ பயோடிக் நிறைந்துள்ளது. இதில் உள்ள சத்துக்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்கள் ஆரோக்கியமாக வளர உதவும். குறிப்பாக குளிர்காலத்தில் செரிமான அமைப்புக்கு தேவையான ஆதரவு தயிர் சாதத்தால் கிடைக்கிறது.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: தயிர் சாதத்தில் விட்டமின் டி மற்றும் ப்ரோபயாட்டிக் பண்புகள் உள்ளது. இது நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இது மூலமாக பருவகால நோய்களை தடுத்து ஆரோக்கியமாக இருக்க முடியும்.
அத்துடன் எடையைக் குறைக்க உதவும்: நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பும் நபர் என்றால் தயிர் சாதம் உங்களுக்கு ஏற்ற உணவாகும். இது உங்களின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையை நிர்வகிக்கும் புரதச்சத்துக்களைக் கொடுக்கிறது. மேலும் தயிர் சாதம் சாப்பிடுவதால் பசி குறைந்து அதிக உணவுகள் எடுத்துக் கொள்வது குறைகிறது.
மார்கழி மாதத்தில் காலை நேரத்தில் கோயில்களில் வழங்கப்படும். திருபிட்ஷை பலவகை கலந்த சாதங்களாக இருக்கும்! காலை நேர குளிரின் போது சில சமயம் சூடான தயிர் சாதத்தையும் திருபிட்ஷையாகக் கொடுப்பார்கள்.
அதெல்லாம் சரி தயிர் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?
பாலைப் புளிக்கவைத்தலைப் பிரைகுத்துதல், பிரை தைத்தல் என்றும் கூறுவர். தைத்தல் = குத்துதல். (முள் குத்தினால் ‘முள் தைத்தது’ – எனக் கூறுவதைப் போல) பாலில் மோர் ஊற்று தலைப் “பிரைகுத்துதல்” என்று சொல்வார்கள்.பிரை தைத்தது தயிர்! ஆம்… ‘தை’ என்ற வினையையொட்டி அமைந்த பெயரே தயிர்!தை > தய் > தயிர் = பிரை தைத்த பால்.
நிலவளம் ரெங்கராஜன்