அமராவதி நகர் சைனிக் பள்ளி நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு!

அமராவதி நகர் சைனிக் பள்ளி நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு!

ந்தியப் பாதுகாப்புப் படைகளான ராணுவம், கப்பற்படை, விமானப் படைகளில் உயர் நிலை அதிகாரிகளாய்த் தேர்ந்தெடுக்கப் படுவதற்காகச் சிறுபிராயத்தில் இருந்தே மாணவர்களைத் தயார்படுத்த மத்திய அரசாங்கத்தால் 1961-ல் சைனிக் பள்ளிகள் நிறுவப்பட்டன. இந்தியா முழுவதும் 28 சைனிக் பள்ளிகள் உள்ளன. மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும் தமிழக அரசும் இணைந்து நடத்தும் சைனிக் உண்டு உறைவிடப் பள்ளி திருப்பூர் மாவட்டம் அமராவதி நகரில் செயல்பட்டுவருகிறது.மத்திய அரசின் பாடத் திட்டத்தின்படி இயங்கும் ஆங்கில வழிப் பள்ளி இது. இங்குப் பாடத்துடன் குதிரை ஏற்றம், நீச்சல், துப்பாக்கிச் சுடுதல், மலையேற்றம், விமானம், கப்பல் அமைப்புகள் குறித்துக் கற்றுத் தரப்படுகின்றன.

சி.பி.எஸ்.இ.யில் இணைக்கப்பட்ட இந்தப் பள்ளியில், பயிற்று மொழி ஆங்கிலமாக இருந்தாலும் தமிழ், இந்தி, ஆங்கிலம் என்ற மும்மொழி திட்டம் பின்பற்றப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இங்குப் பயிலலாம். பெற்றோரின் மாத வருமான அடிப்படையில், ரூ.50,000வரை மத்திய, மாநில அரசுகளின் உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த நிலையில், அமராவதி நகரின் சைனிக் பள்ளிக்கு 6வது மற்றும் 9வது வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய சைனிக் பள்ளிகளுக்கான நுழைவுத்தேர்வு வருகிற ஜனவரி 21-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. https://aissee.nta.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வருகிற டிசம்பர் 16-ம் தேதி வரை இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். 6-ம் வகுப்பில் சேர மாணவ, மாணவிகளுக்கு 31.03.2024க்குள் 10 முதல் 12 வயது வரை இருக்க வேண்டும். இதே போல் 9ம் வகுப்பில் சேர மாணவ மாணவிகளுக்கு 31.03.2024-க்குள் 13 முதல் 15 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு குறித்த முழுமையான தகவல்களுக்கு https://exams.nta.nic.in/AISSEE/ என்ற லிங்க்கில் பார்க்கலாம். இங்கு பயிலும் மாணவர்களுக்கு இந்திய ராணுவம், இந்திய கப்பற்படை ஆகியவற்றில் பணியாற்ற முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!