32°C

3 தேசிய விருதுகளுடன் ‘அமரன்’:46 ஆண்டுகால சாதனையைத் தொடரும் கமல்!-

admin Published: July 19, 2026 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து:

ந்திய திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் முத்திரை பதித்துள்ள கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம் தனது 46-வது ஆண்டைக் கொண்டாடி வருகிறது. இந்த மகத்தான திரைப்பயணத்தின் மற்றுமொரு பெருமைமிகு அத்தியாயமாக, கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் தயாரிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் இணைந்துள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் ‘அமரன்’ திரைப்படம் மூன்று உயரிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அமரன் வென்ற 3 தேசிய விருதுகள்:

  • சிறந்த இயக்குநர் – ராஜ்குமார் பெரியசாமி

  • சிறந்த பின்னணி இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்

  • சிறந்த படத்தொகுப்பாளர் – ஆர். கலைவாணன்

தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட உழைப்பு

இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தை, வலுவான திரைக்கதை மொழியுடனும் தெளிவான பார்வையுடனும் திரையில் உயிர்ப்பித்ததற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

காட்சிகளின் தீவிரத்தையும் உணர்வுகளையும் தனது அழுத்தமான பின்னணி இசையின் மூலம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றதற்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கௌரவிக்கப்பட்டுள்ளார். படத்தின் விறுவிறுப்பான கதை சொல்லும் ஓட்டத்தை நேர்த்தியாக வடிவமைத்த ஆர். கலைவாணனின் படத்தொகுப்பும் தேசிய அளவிலான பாராட்டைப் பெற்றுள்ளது.

கலை அர்ப்பணிப்பிற்கு கிடைத்த வெற்றி

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோரின் அர்ப்பணிப்புமிக்க நடிப்பு, கதையின் உண்மைத்தன்மையை ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிய வைத்தது. அதற்குச் சான்றாக இந்த விருதுகள் அமைந்துள்ளன.

தரமான படைப்புகளையும் திறமையான கலைஞர்களையும் பெரிய திரையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற தயாரிப்பாளர்களின் நம்பிக்கைக்குக் கிடைத்த இந்த வெற்றி, சர்வதேச அளவில் தமிழ் சினிமாவின் பெருமையை மீண்டும் உயர்த்தியுள்ளது. 46-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், காலத்தால் அழியாத இந்தியத் திரைப்படங்களைத் தொடர்ந்து வழங்கும் என்பதை ‘அமரன்’ படத்தின் இந்த தேசிய விருதுகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.