தமிழ் குரல் / AI Voice
அஜித், நயன்தாரா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வெளியான விஸ்வாசம் திரைப்படம் மிகப் பெரிய அளவில் ஹிட்டாகி உள்ளது. 150 கோடி ரூபாய் வசூலை நோக்கி விஸ்வாசம் சென்று கொண்டிருக்கும் நிலையில், அஜித் ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் நேற்று பாரதிய ஜனதாவில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரை படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறிந்ததே. என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை நான் தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்கு காரணம். சில வருடங்களுக்கு முன்னர் என் ரசிகர் இயக்கங்களை நான் கலைத்ததும் இந்த பின்னணியில் தான். என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ, என் ரசிகர்கள் இயக்கங்களின் மீதோ எந்த விதமான அரசியல் சாயம் வந்து விட கூடாது என்று நான் சிந்தித்ததின் சீரிய முடிவு அது.


