ஆப்கானிஸ்தானை முழுமையாகக் கைப்பற்றியது தலிபான் படை!

ஆப்கானிஸ்தானை முழுமையாகக் கைப்பற்றியது தலிபான் படை!

லகின் பல பகுதிகளில் இன்னும் கொரோனா அச்சம் குறையவில்லை என்ற கவலையுடன் இருக்கும் சூழலில் சர்வதேச தீவீரவாதிகளில் இரு குரூப்பான தலிபான் படையினர் ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஜலாலாபாத்தை இன்று காலை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் மட்டுமே அரசின் கைவசம் இருந்தது. ஆனால் தற்போது தலிபான் அந்த அதிகாரத்தையும் கைப்பற்றியதை அடுத்து இடைக்கால தலைவராக அலி அகமது ஜலாலி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சூழலில் ஆப்கானிஸ்தானுக்குக் கூடுதல் படைகளை அனுப்பிவைக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாகவே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. 20 ஆண்டுகளாக அரசுப் படைகளுக்கு அமெரிக்க படைகள் ஆதரவாக இருந்து வந்த நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் நாட்டு படைகளை வெளியேற அமெரிக்க அரசு உத்தரவிட்டது. இன்னும் சில நாட்களில் மிச்சமிருக்கும் அமெரிக்க படைகளும் முழுமையாக வெளியேற இருக்கும் நிலையில் நிலைமையை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தலிபான்கள் அங்கு சண்டையை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். இதன் காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் வியக்கத்தக்க முன்னேற்றத்தை தலிபான்கள் எட்டியிருக்கின்றனர். மொத்தம் உள்ள 34 மாகாண தலைநகரங்களில் 26ஐ தலிபான்கள் கைப்பற்றியிருக்கின்றன. எஞ்சியிருக்கும் நகரங்களில் தலைநகர் காபுல் மட்டுமே முக்கியம் வாய்ந்த நகராக இருக்கிறது. ஆனால் அங்கும் தலிபான்கள் தற்போது கால்பதித்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்நிலையில், ஆப்கனுக்கு கூடுதல் படைகளை அமெரிக்கா அனுப்பியுள்ளது. ஏற்கெனவே அங்கே 3000 அமெரிக்க வீரர்கள் இருந்த நிலையில் தற்போது மேலும் 2000 பேரை அமெரிக்கா அனுப்பியுள்ளது. அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் ஆப்கன் பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் இந்தக் கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!