“’கணம்’ போன்ற படம் 10 வருடங்களுக்கு ஒருமுறை தான் வரும்” – ஷரவானந்த் பெருமிதம்!

“’கணம்’  போன்ற படம் 10 வருடங்களுக்கு ஒருமுறை தான் வரும்” – ஷரவானந்த் பெருமிதம்!

மிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் கணம். தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் பிரபலமான தெலுங்கு நடிகர் ஷரவானந்த் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். 80-ஸ் நடிகை அமலா, நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் நடித்துள்ளார்.அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் வாழ்க்கை பயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது.ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து வழங்கும் இப்பட அனுபவம் குறித்து ஷரவானந்த் சொன்னது இது:

SR.பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் மீது மிகுந்த நம்பிக்கையும், மரியாதையும் இருக்கிறது. ஆகையால், சுமார் கடந்த 10 வருடங்களாக பிரபுவுடன் தொடர்பிலேயே இருந்தேன். அவர் பேனரில் பல சிறந்த இயக்குனர்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறார். வெவ்வேறு விதமான கதைகளுக்கு இயக்குனர்களை ஊக்கப்படுத்தி வாய்ப்பளித்து வருகிறார். எங்களைப் போன்றோர்களுக்கு இவரைப் போன்று தயாரிப்பாளர்கள் தான் தேவை. அவருடைய நிறுவனம் ஒரு தொழிற்சாலை போன்று செயல்படுகிறது. ஆகையால் தான் வித்தியாசமான சிறந்த படங்களை கொடுக்க முடிகிறது. இவருடைய வழிமுறைகள் எனக்கு பிடித்திருக்கிறது. பிரபுவுடன் தொடர்பில் இருந்ததால் தான் தமிழ் வசனங்களை சுலபமாக பேச முடிந்தது. இல்லையென்றால், நிறைய கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருந்திருக்கும். மேலும், இந்த படம் எனக்கு சிறந்த படமாக தோன்றியது. எனது தீவிரத்தை விட இப்படத்தின் கதை மிகப்பெரியது.

டைரக்டர் ஸ்ரீ இந்த கதையைக் கூறும்போது அமலா மேடம் தான் பொருத்தமாக இருப்பார் என்று கூறினேன். அமலா மேடம் கதை கேட்டதும் ஒப்புக் கொண்டார். தமிழில் நிறைய கற்றுக் கொண்டேன். இதுபோன்ற படம் 10 வருடங்களுக்கு ஒருமுறை தான் வரும். இப்படி ஒரு கதையை எழுதியதன் காரணம், அவர் அம்மாவிடம் இருந்த அன்பு தான் காரணம் என்று தெரிந்து கொண்டேன். படம் பார்த்தால் உங்களுக்கே புரியும். சை ஃபை படமாக பார்த்தாலும் நன்றாக இருக்கும், அதை விடுத்து அம்மா சென்டிமெண்ட் என்று பார்த்தாலும் அனைவருக்கும் நெருக்கமான படமாக இருக்கும். ஒவ்வொரு காட்சியையும் ஸ்ரீ கார்த்திக் நடித்து காட்டுவார், அப்போது நான் ஏன் இப்படி எழுதுனீர்கள்? என்று கேட்டேன். எனது அம்மா இப்படித்தான் இருப்பார் என்று கூறுவார். ஒவ்வொரு காட்சியையும் அவரின் அம்மாவை நினைத்தே எழுதியிருக்கிறார்.

நாம் எந்த உணவு உண்டாலும், அதே உணவை அம்மா கையால் சமைத்து அம்மா ஊட்டிவிடும் போது அந்த உணர்வே வேறாக இருக்கும், அந்த உணர்வு ஒவ்வொருக்கும் அவர்களின் அம்மாவை சம்பந்தப்படுத்தும். எனக்கும் அப்படித்தான் என் அம்மாவை சம்பந்தப்படுத்தியது. இதுவரை நான் கமர்ஷியல் படங்களில் தான் நடித்திருக்கிறேன். பொதுவாக ஒரு நடிகருக்கு இதுபோன்ற ஒரு கதையில் நடிப்பதற்கு பாதுகாப்பற்றத் தன்மை இருக்கும். ஆனால், இந்த கதையின் மீதும், அந்த உணர்வின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கதை என்னைத் தேடி வந்ததில் பாக்கியமாக கருதுகிறேன்” என்றார்.

error: Content is protected !!