“ஆர்யன்” திரைப்பட முன் வெளியீட்டு விழா – ராட்சசனுக்குப் பின் அடுத்த த்ரில்லர் சவால்! 🚨

“ஆர்யன்” திரைப்பட முன் வெளியீட்டு விழா – ராட்சசனுக்குப் பின் அடுத்த த்ரில்லர் சவால்! 🚨

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில் உருவாகியுள்ள “ஆர்யன்” திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் விஷ்ணு விஷால், இயக்குநர் செல்வராகவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

விழாவில் படத்தின் டீசர், டிரெய்லர், மற்றும் சிங்கிள் பாடல் பிரத்தியேகமாக திரையிடப்பட்டது.

படக்குழுவினர் பகிர்ந்த முக்கிய தகவல்கள்:

எழுத்தாளர்/இயக்குநர் மனு ஆனந்த்:

“எஃப்.ஐ.ஆர். எப்படி எனக்கு முக்கியமான படமோ, அதேபோல் ‘ஆர்யன்’ பிரவீனுக்கு மிக முக்கியமானது. பிரவீன் என் நண்பர், விஷ்ணு என் முதல் ஹீரோ. விஷ்ணு விஷால் கதை கேட்டபோது நான் தான் பிரவீனை சிபாரிசு செய்தேன். மிகச் சிறந்த திரைக்கதை இது. அக்டோபர் 31 அன்று பிரவீனின் திறமை புரியும். ‘ராட்சசன்’ படத்தை பலர் தவிர்த்த போது துணிந்து நடித்து தயாரித்தவர் விஷ்ணு விஷால். செல்வா சார் இப்படத்தில் மிரட்டியிருக்கிறார்.”

எடிட்டர் ஷான் லோகேஷ்:

“ஆர்யன் மிக முக்கியமான படம். இதுவரை வந்த கிரைம் சைக்கோ கில்லர் படங்களின் வழக்கத்தை உடைத்து, புதிதாக ஒன்றைச் செய்துள்ளது. வில்லனின் ஆர்க்கையே முழுதாக மாற்றிய படம் இது. விஷ்ணு விஷால் பணத்தைப் பற்றி கவலைப்பட மாட்டார்; படம் சரியாக வரவேண்டும் என்பதில் கறாராக இருப்பார். சினிமாவை உண்மையாகக் காதலிக்கும் ஒருவர். ஜிப்ரான் எங்களுக்குக் கிடைத்த வரம். செல்வா சாரின் கண்ணே பல விஷயங்கள் பேசும்.”

இசையமைப்பாளர் ஜிப்ரான்:

“எல்லோரிடமிருந்தும் ‘ராட்சசன்’ மாதிரி இருக்குமா என்ற கேள்வி வந்துகொண்டே இருக்கிறது. ‘ராட்சசன்’ படத்தில் வில்லன் யார் என்பதே கேள்வி, ஆனால் இதில் வில்லன் யார் எனத் தெரிந்துவிடும், அதன்பிறகுதான் கதை தொடங்கும். செல்வா சார் நடிப்பிற்காக மியூசிக் செய்தது சந்தோஷமாக இருந்தது. இந்தப் படத்துக்கான சவுண்ட், ராட்சசனிலிருந்து முற்றிலும் வேறு விதமாக இருக்கும். இது ஒரு முழுமையான தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும்.”

இயக்குநர் செல்வராகவன்:

“விஷ்ணு விஷால் பற்றி நான் கேள்விப்பட்டிருந்தாலும், அவருடன் வேலை பார்த்தபோதுதான் அவரைப் பார்த்து பிரமித்தேன். அவர் வீட்டுக்கே போக மாட்டார். எப்போதும் சினிமா தான். சினிமாவைக் காதலிக்கிற, நேசிக்கிற, மதிக்கிற ஹீரோ. அதேபோல் இயக்குநர் பிரவீனும் அப்படித் தான். உங்களின் நேசிப்புக்கு நல்லதே நடக்கும். நன்றி.”

இயக்குநர் பிரவீன் K:

“எஃப்.ஐ.ஆர் படப்பிடிப்பின் போது உருவான கதை இது. எந்த ஒரு இயக்குநருக்கும் முழுதாகப் புரிந்து கொண்ட ஒரு நடிகன் கிடைப்பது வரம். எனக்கு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் விஷ்ணு விஷால் கிடைத்தது வரம். இந்தக்கதையை இந்தியில் அமீர் கான் நடிப்பதாக இருந்தது. பல தடைகள் வந்தபோதும், விஷ்ணு சார் இப்படத்தைத் தாங்கினார். இந்தப்படத்தை முழுதாக வேறுமாதிரி அணுகியிருக்கிறோம். ஷ்ரத்தா, மானசா, ஜிப்ரான், ஷான், ஹரீஷ் என எல்லோரும் அற்புதமான உழைப்பைத் தந்துள்ளனர்.”

நடிகர் விஷ்ணு விஷால்:

“கிரைம் படம் என்றாலே கண்டிப்பாக ‘ராட்சசன்’ உடன் ஒப்பிடுவார்கள், அதைத் தடுக்க முடியாது. நானே ராட்சசனை மீறி படம் செய்ய முடியாது என நினைத்தேன். ஆனால், நாங்கள் வேறொரு அனுபவம் தர முயற்சி செய்துள்ளோம். இது கோவிட் சமயம் ஆரம்பித்த படம், பிரவீன் ஐந்து வருடங்கள் உழைத்துள்ளார். இந்தி வெர்ஷனில் அமீர் சார் நடிப்பதாக இருந்தது. அவரே கதை கேட்டுப் பாராட்டியபோது உற்சாகம் வந்தது. பான் இந்தியா என்பது ரூட்டடாக எடுத்த படங்கள் தான் மாறியுள்ளன. அதனால் தமிழ் ஆடியன்ஸுக்கு எடுக்கலாம் என முடிவெடுத்தோம். இந்தப் படம் பொறுத்த வரை செல்வா சார் தான் ஹைலைட்; அவருக்கும், படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி.”

“ஆர்யன்” என் பையன் பேர். அவர் பேரில் ஒரு நல்ல படம் தந்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. – விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷாலின் மகன் ஆர்யன்:

“என்னுடைய அப்பா என் பெயரில் படமெடுத்துள்ளார். என் பெயரில் படம் வருவது எனக்குப் பெருமையாக உள்ளது. அனைவரும் அக்டோபர் 31-ம் தேதி திரையரங்கில் படம் பாருங்கள்.”

படம் பற்றிய குறிப்புகள்:

  • கலைஞர்கள்: விஷ்ணு விஷால், இயக்குநர் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி, சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ் மற்றும் அபிஷேக் ஜோசப் ஜார்ஜ்.
  • சிறப்பு: விஷ்ணு விஷால், ‘ராட்சசன்’ வெற்றிக்குப் பின் மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
  • தொழில்நுட்பம்: விஷ்ணு விஷால் நடித்த “எஃப்.ஐ.ஆர்.” படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்த படத்தில் இணை எழுத்தாளராகப் பணியாற்றியுள்ளார்.
  • வெளியீடு: இந்த இன்வெஸ்டிகேட்டிவ் ஆக்‌ஷன் த்ரில்லர் அக்டோபர் 31 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

error: Content is protected !!