ஆதார் – விமர்சனம்!

ந்திய தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (NCRB) அறிக்கைப்படி,  நம் நாட்டில் 2000 ஆம் வருஷம் தொடங்கி 2020 வரை – சுமாராக 1888 லாக் அப் டெத் எனப்படும் காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அதிலும் கடந்த பத்தாண்டுகளில் அதிக காவல் மரணங்கள் நடந்த மாநிலங்களின் பட்டியலில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ள நிலையில், இரண்டாவது இடமாக தமிழ்நாடு உள்ளது. ஆனால் இன்றுவரை ஒரு காவலர்கூட குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறவில்லை. இச்சூழலில் மேற்படி போலீஸ் என்னும் அதிகார வர்கத்தின் அடாவடிப் போக்கையும், அத்துமீறலையும் அம்பலப்படுத்த முயன்றுள்ள படமே ‘ ஆதார்’

அதாவது கட்டிட வேலை செய்து பிழைப்பு ஓட்டும் கருணாஸ் அவர் மனைவி கர்ப்பிணி மனைவி ரித்விகா. இவர்கள் தங்கி வேலை பார்க்கும் இடத்தில் ஆள் வைத்து கம்பிகளை திருடுகிறார் இனியா. அதை கருணாஸும், ரித்விகாவும் கண்டு பிடித்து தடுக்கின்றனர். இதனால் இனியா கோபம் அடைகிறார். இச்சூழலில் ரித்விகாவுக்கு பிரசவ வலி ஏற்படுகிறது. அப்போது கருணாஸ் இல்லாததால் இனியா ஒரு ஆட்டோவில் அவரை அரசு மருத்துவமனை அழைத்துச் சென்று சேர்க்கிறார். அங்கே குழந்தை பெற்ற நிலையில் ரித்விகா காணாமல் போய் விடுகிறார். மனைவி காணாமல் போனதால் பதறும் கருணாஸ் கைக் குழந்தையுடன் போலீஸ் நிலையம் வந்து புகார் தருகிறார். இனியாதான் ரித்விகாவை கடத்தியதாக சொல்கிறார் ஆனால் இனியா பாதாள சாக்கடையில் பிணமாக கண்டெடுக்கப் படுகிறாள். அப்படியானால் ரித்விகாவை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பதை கொஞ்சம் விலாவாரியாக சொல்லி இருப்பதுதான் ‘ஆதார்’ கதை.

கட்டிட தொழிலாளியாக தன்னுடைய எதார்த்தமான நடிப்பை கருணாஸ் வெளிப்படுத்தி இருக்கிறார். கிழிந்த பனியன், அழுக்கு லுங்கி, கையில் குழந்தை என்று அவருக்கே உரிய பரிதாபத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். அதிகாரத்தின் மிரட்டலில் விக்கித்து போய் கண்ணாலேயே கதறும் சராசரி மனிதனை அப்படியே திரையில் பிரபலித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.

கருணாஸ் ஒய்ஃப்பாக வரும் ரித்விகாவுக்கு அதிக வேலை இல்லை .ஆனால் ஒட்டு மொத்த ஸ்டோரியும் இவரைச் சுற்றிதான் என்பதைப் புரிந்து தன்னை எக்ஸ்போஸ் செய்து கொள்வதில் பாச் செய்து விட்டார் . இனியா-வுக்கும் கொஞ்சூண்டு நேர வாய்ப்புதான் என்றாலும் , திருட்டுத் தொழில் செய்யும் தன்னிடமும் இரக்கமும், நேர்மையுமுண்டு என்பதை வெளிக்காட்டி கவர்ந்து விடுகிறார். அசிஸ்டெண்ட் கமிஷனராக வரும் . உமா ரியாஸ், கெட்ட இன்ஸ்பெக்டர், ‘பாகுபலி’ பிரபாகர் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட ரோலின் கனத்தைப் புரிந்து ஆதார்-க்கு வலு சேர்த்திருகிறார்கள் அருண் பாண்டியன் ரொம்ப நல்ல போலீஸ் என்ற ரோலை ரொம்ப நல்லா செய்திருக்கிறார்.

அடுத்தத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பாணியை இறுதிவரை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் ராம்நாத். ஆனால் சினிமாவை நாடக பாணியில் கொண்டு போய் விட்டதாலோ என்னவோ கருணாசின் சோகம் கண்களைப் பாதித்த அளவு மனசைப் பாதிக்கவில்லை.. அதர்க்கு பலமான வசனங்கள் மிஸ் ஆனதும் கூட காரணமாக இருக்கலாம். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் எதுவும் பெரிதாக மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை ஓரளவு கதைக்கு பலத்தைக் கொடுத்திருக்கிறது.மகேஷ் முத்துசாமியின் கேமரா ஒர்க்-கால்தான் ஆதார் மிளிர்கிறது..

எடுத்த வலுவான கதையை இன்னும் யோசித்து ஷார்ப் செய்திருக்கலாம் என்றாலும் இந்த ஆதார் -தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றுதான்

மார்க் 3/5 .

error: Content is protected !!