32°C

காரின் பின் பக்கம் அமர்வோர்களுக்கும் சீட் பெல்ட் கட்டாயம்!

admin Published: September 22, 2022 1 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து:

கார்களில் நவீன வசதிகள் பல இருந்தாலும் என்ன விலை கொண்டதாக இருந்தாலும், அவற்றில் ஏர்பேக், சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் போன்ற அம்சங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய அரசும் அறிவுறுத்தியுள்ள நிலையில் காரின் பின் பக்கம் இருப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்று இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கார் தயாரிப்பாளர்கள், பின் இருக்கையில் அமர்பவர்கள் சீட் பெல்ட் அணிவதற்கான அலாரம் அமைப்பை கட்டாயமாக நிறுவவேண்டும் என்று இந்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க அக்டோபர் 5 கடைசி தேதி என்று கூறியுள்ளது.

இந்திய தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் இறந்ததையடுத்து, இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இந்த விதிகளை விதித்துள்ளது.

இது குறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், காரில் பயணிக்கும் அனைவரும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்றும், தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்தார்.