கர்நாடக மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் திட்டம் – ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்!

கர்நாடக மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் திட்டம் – ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்!

ர்நாடகாவில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வழங்கி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றது. அதில் கிரக ஜோதி என்னும் இலவச 200 அலகு மின்சார திட்டம், கிரஹலட்சுமி என்னும் குடும்ப தலைவிகளுக்கு ரூ2000 மாதம் வழங்கும் திட்டம் இவை முக்கியமானவை. அந்த வகையில் கிரஹ ஜோதி திட்டம் ஜூலை 1ம் தேதி விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து, பசுவதை தடைச் சட்டம் ரத்து என பல அதிரடியான அறிவிப்புகளை கர்நாடக மாநில அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை போன்றே கர்நாடகத்திலும் மகளிர் உரிமைத் தொகைக்கான அறிவிப்புகளை காங்கிரஸ் வெளியிட்டது.

அறிவித்தப்படி கர்நாடக மாநிலத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் ‘கிரஹ லட்சுமி’ திட்டத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் ராகுல் காந்தி தொடக்கி வைத்தார்.இதற்கான தொடக்க விழா மைசூரில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திட்டத்தின் கீழ் 1.08 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .இந்த விழாவில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மாநில அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் இது குறித்து, ஒரு கட்டிடத்தின் வலிமை அதன் அஸ்திவாரத்தில் உள்ளது. அது போல பெண்கள் தான் இந்தியாவின் அஸ்திவாரம் என குறிப்பிட்ட்டிருதார். மேலும் பெண்களின் அதிகாரத்தால் மட்டுமே நாடு வலிமை பெறும். கர்நாடகாவுக்கு வழங்கப்பட்ட 5 உத்தரவாதங்களில் 4 பெண்களுக்காக உருவாக்கப்பட்டவை.

கிரஹலக்ஷ்மி யோஜனா, திட்டம் மூலம் மாதத்திற்கு ரூ.2000 வங்கிக் கணக்குகளுக்கு வழங்கும், இது பெண்களுக்கான இந்தியாவின் மிகப்பெரிய பணப் பரிமாற்றத் திட்டமாகும். மேலும், பெண்களை மையப்படுத்திய இந்த கர்நாடக மாடல் இனி இந்தியா முழுவதும் செயல்படுத்தபடும் என அந்த பதிவில் ராகுல்காந்தி தெரிவித்தார்.

error: Content is protected !!