இந்திய அறிவியல் வளர்ச்சியில் நேருவைக் குறிப்பிடாமல் பேசவே முடியாது!

இந்திய அறிவியல் வளர்ச்சியில் நேருவைக் குறிப்பிடாமல் பேசவே முடியாது!

வஹர்லால் நேருவுக்கும் இந்திய விண்ணியல் ஆய்வுக்கும் சம்பந்தமில்லை என்று தைரியமாக அடித்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றி முன்பே ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். பலரும் எழுதி இருக்கிறார்கள். இருப்பினும் உண்மை போலவே பல பதிவுகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அவை பெரும்பாலும் வேண்டுமென்றே பரப்பப்படுபவை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவர்களின் பொய்த் தலைவர் அமித் ஷா அப்படித்தானே ஆணையிட்டு இருக்கிறார்? பொய்யாக இருந்தாலும் உங்களுக்கு சாதகமாக இருந்தால் உண்மை என்று சொல்லிப் பரப்புங்கள் என்ற மூடர் கூடத்தின் தலைவரின் கட்டளையையே இந்த மூடர் கூடம் செயல்படுத்தி வருகிறது.வரலாற்றை சுருக்கமாக கீழே கொடுத்துள்ளேன். மூடர் கூடத்தில் தெரியாமல் மாட்டிக் கொண்ட சில மிதவாத சிந்தனையாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கலாம்.

🛰️1962ல் விக்ரம் சராபாய் உந்துதலின் பேரில் நேரு அரசு விண்வெளி ஆய்வுக்காக Indian National Committee for Space Research – INCOSPAR – என்று ஒரு அமைப்பை நிறுவியது.

🛰️இந்திய அணுசக்தி நிறுவனத்தின் அங்கமாக இது உருவானது.

🛰️இந்தியாவின் முதல் ராக்கெட் தளம் கேரளாவின் தும்பா எனும் ஊரில் நிறுவப்பட்டது.

🛰️ராக்கெட் ஏவுவதற்கு உகந்த இடமாக கருதப்பட்டதால் இங்கே முன்னர் இருந்த சர்ச் தாமாக முன்வந்து இடத்தை இந்திய அரசுக்கு தானம் செய்து அங்கே நிறுவினார்கள்.

🛰️ இந்தியாவின் முதல் ராக்கெட் நவம்பர் 1963ல் தும்பாவில் இருந்து ஏவப்பட்டது. இதற்கு sounding rocket என்று பெயர். வளி மண்டலத்தின் மேற்பகுதியை ஆராய அனுப்பப்பட்ட சோதனை ராக்கெட் இது.

🛰️இந்த தும்பா தளம் இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது.

🛰️நேரு 1964 மே மாதம் இறந்தார்.

🛰️ 1968ல் இந்த விண்வெளி ஆய்வு நிறுவனத்துக்கு தன்னாட்சி வேண்டும் என்ற கருத்து வலுப்பட்டது.

🛰️1968ல் அந்த அமைப்பு கலைக்கப்பட்டு 1969ல் இஸ்ரோ என்ற தனி நிறுவனமாக நிறுவப்பட்டது.

🛰️ INCOSPARன் இயந்திரங்கள் மற்றும் ஏவுதளங்கள் இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டன. விண்ணியல் ஆய்வில், அணுசக்தி ஆய்வில், ஜெனெடிக் ஆய்வில், தொழில் நுட்ப ஆய்வுகளில், கனரக பொறியியலில், அனைத்திலும் நேருவின் பங்கு இருக்கிறது. ஏன், இந்தியாவின் முதல் கணினியே 1955ல் இந்திய புள்ளியியல் கழகத்தினால் இறக்குமதி செய்யப்பட்டது. எனவே ஐடி துறையிலும் முன்னோடி அவர்தான். அவர் வாழ்ந்த காலத்தில் இந்தியாவில் ஒரு டீக்கடையில் கூட யாராவது அறிவியல் பற்றிப் பேசினாலே காரை எடுத்துக் கொண்டு அங்கே போய் விடுகிற அளவுக்கு இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டியவர் நேரு.

நீங்கள் எந்த விதமான அறிவியல் என்று சொன்னாலும் நேருவைக் குறிப்பிடாமல் பேசவே முடியாது என்பதுதான் உண்மை. இந்துத்துவர்களுக்கு கசப்பைத் தரும் உண்மை.

✍️ ஸ்ரீதர் சுப்ரமணியம்

error: Content is protected !!