“புதிய தலைமுறை ஆசிரியர் விருது 2023”

“புதிய தலைமுறை ஆசிரியர் விருது 2023”

சீர்மிகு ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்யும் “புதிய தலைமுறை ஆசிரியர் விருது 2023” வரும் செப்டம்பர் 2, சனிக்கிழமை, மாலை 6:00 மணிக்கு ண்ணா நகர் கிழக்கில் உள்ள அம்மா அரங்கத்தில் நடைபெறுகிறது.

இவ்விழாவில் புதுமை, கிராம சேவை, பழங்குடி மேம்பாடு, பெண்கல்வி, செயலூக்கம், மொழித்திறன் மேம்பாடு, அறிவியல் விழிப்புணர்வு, படைப்பாக்கம் மற்றும் சிறப்புத் தேவையுடைய குழந்தைகள் கல்வி என ஒன்பது பிரிவுகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வருடம் முதல்முறையாக தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

பிரபல நட்சத்திரங்கள் மற்றும் சாதனையாளர்கள் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறார்கள். இவ்விழாவின் தொகுப்பு செப்டம்பர் 5ம்தேதி, புதியதலைமுறையில் ஒளிபரப்பாகிறது.

error: Content is protected !!