கோபி நயினாராக விஸ்வரூபமெடுத்து நிற்கும் நண்பர் மீஞ்சூர் கோபி அவர்களுக்கு ஒரு பகிங்கர கடிதம்!

கோபி நயினாராக விஸ்வரூபமெடுத்து நிற்கும் நண்பர் மீஞ்சூர் கோபி அவர்களுக்கு ஒரு பகிங்கர கடிதம்!

முன்னொரு காலத்தில் ‘மீஞ்சூர் கோபி’ என்று தன்னை அறிமுகப்படுத்தி பழகி வந்து தற்போது கோபி நயினார் என்ற பெயரில் நயன்தாரா நடிப்பில் இஅய்க்கி வெளியாகியுள்ளது ‘அறம்’. போன வெள்ளியன்று ரிலீஸாகி விமர்சன ரீதியாக இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. அது மட்டுமின்றி எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்களும், இணைய தளநணபர்களும் – நாங்க பாராட்டியதை ஏனிந்த கோபி கண்ணு கண்டுக்கலை என்ற ரேஞ்சில் செல்ல கோபம் கொண்டு  கோபிக்குழுவுக்கு சகட்டுமேனிக்கு மேலும் மேலும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே  ‘ரஜினி’மூலம் பிரபலமானதாகச் சொல்லிக் கொள்ளும் இயக்குநர் ரஞ்சித் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “அறம் வென்றது பெரும் மகிழ்ச்சி. கற்பி ஒன்று சேர் போராடு. இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கும் தோழர் நயன்தாராவுக்கு நன்றியும் வாழ்த்துகளும்” என்று ரொம்ப சாதாரணமாக பாராட்டு தெரிவித்திருந்தார்.

இந்த ரீசண்ட் சமூக போராளி ரஞ்சித்தின் இந்த சிம்பிளான  பாராட்டே சமூக வலைதளத்தில் பெரும் எதிர்வினைகளை கொடுத்திருக்கிறது. அதாவது சக படைப்பாளி கோபி நயினார் பெயரைக் குறிப்பிடாமல் தோழர் நயனுக்கும் நன்றியும் வாழ்த்துகளும் வெளியிட்ட பதிவால், பலரும் அவரை குதறி எடுக்கிறார்கள் என்பதுதான் ஹாட் டாபிக்.

உடனே இந்த சர்ச்சை தொடர்பாக முன்னாள் மீஞ்சூர் கோபியும் இன்றைய ஹிட் இயக்குருமான கோபி நயினார் வெளியிட்டுள்ள பதிவில், “இயக்குனர் ரஞ்சித்தும், நானும் சமூக அரசியலிலும், முன்னேற்றத்திலும் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பவர்கள். ஆனால் சில நலவிரும்பிகள் அன்பின் மிகுதியால் தங்கள் கருத்துகளை பதிவுசெய்து வருகின்றனர். இது ஆரோக்கியமான சூழலல்ல. தோழர்களே! படைப்பிற்கான விமர்சனங்களை வரவேற்கிறேன்.

நானும், இயக்குனர் ரஞ்சித்தும் இந்த சமூகத்தில் செய்ய வேண்டிய வேலைகளும், கடமைகளும் ஏராளம் இருக்கிறது. அதில் குறிப்பாக நாங்கள் இருவரும் ஒருமித்து செயல்பட வேண்டிய கட்டாயமும் கூட. அப்போது தான் இந்த பலம் எல்லோரையும் ஒருங்கிணைப்பதற்கான காரணமாக அமையக் கூடும். ஆதலால் உறவுகளை சிக்கல் ஆக்குகின்ற எந்தவொரு பதிவுகளையும் நான் அனுமதிக்க மாட்டேன். நலம் விரும்பிகளின் பதிவுகள் யாருக்கேனும் மனவேதனையைத் தந்திருந்தால் அவர்களுக்கு என் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்”என்று கோபி நயினார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கோபி தோழர் (மீஞ்சூரும் வேண்டாம்.. நயினாரும் இல்லை)க்கு உண்மையான நலம் விரும்பி ஒருவர் அனுப்பிய கடித்ததை நம் AanthaiReporter ஸ்பெஷல் ரிப்போர்ட்டர் கட்டிங் கண்ணையா கைப்பற்றி கொண்டு வந்துள்ளார். அக்கடிதத்தில் உள்ளது உள்ளபடி – இதோ – உங்கள் பார்வைக்கு

கோபி நயினாராக விஸ்வரூபமெடுத்து நிற்கும் நண்பர் மீஞ்சூர் கோபி அவர்களுக்கு வணக்கம்.

தங்கள் அறிக்கையைப் பார்த்து மனம் மகிழ்ந்தேன். உண்மையில் உயர்ந்த உள்ளம்தான் உங்களுக்கு. உங்களின் கருத்தையும் கதையையும் திருடித்தான் மெட்ராஸ் திரைப்படம் எடுக்கப்பட்டது என்று நீங்கள் புலம்பித் தீர்த்தபோது, அதை யாருமே கண்டுகொள்ளாமல் விட்டபோது உங்களுக்காக அல்ல உங்களின் நியாயத்தின் பக்கம் நிற்கத் துணிந்து ஆதரவு தெரிவித்த சிலரில் நாங்களும் ஒருவர் என்ற உரிமையில் சில கேள்விகளை கேட்க வேண்டி உள்ளது.

அன்று சவுக்கு சங்கர், வினவு இணையதளம் உள்ளிட்ட பலரும் அதுகுறித்து எழுதிய போது விவாதித்த போது “ இயக்குனர்  இரஞ்சித் அவர்களும் நானும் சமூக அரசியலிலும், முன்னேற்றத்திலும் ஒரே இலக்கை நோக்கிப் பயணிப்பவர்கள்” என்று கூறியிருக்கலாமே. ஊடகங்களை எல்லாம் உங்கள் வேலையைப் பாருங்கள் என்று கூறியிருக்கலாமே? எந்த புரட்சி உங்களைஅப்போது தடுத்தது தோழா?

அடுத்து கத்தி திரைப்படம் குறித்த சர்ச்சை வெளியான போதும் வீதிக்கு வந்தீர்கள். நியாயம் கிடைக்காதா என்று பலரிடமும் சென்றீர்கள். கடைசியாக பத்திரிகையாள நண்பர் பா, ஏகலைவன் “‘நாலு இட்லி+ஒரு டீ= கத்தி சுட்ட கதை” என்று முகநூலில் பதிந்தார்.  உங்களுக்காக வேண்டி  பல்வேறு  ஊடக நண்பர்களிடம் பேசினார். அதன் பேரில்  ஆந்தையார், அந்தணன், வெற்றிவேல் போன்ற மூத்த சினிமா பத்திரிகையாளர்கள் பலரும் அதை செய்தியாக்க அன்று பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஏன் நாங்கள் மட்டும் அல்ல, லட்சக்கணக்கான நபர்களும் உங்களை பொது வெளியில் தூக்கிப் பிடித்து நின்றார்கள்.

புகழின் உச்சியில் இருந்த ஏ.ஆர், முருகதாஸை பலரும் விமர்சித்தார்கள். அதனாலேயே பல ஊடக நண்பர்கள் அவருக்கு எதிராய் ஆனார்கள்.. அப்போது நீங்கள் ‘தோழர்களே, இது ஆரோக்கியமான சூழல் அல்ல. படைப்பிற்கான விமர்சனங்களை மட்டும் வரவேற்கிறேன்” என்று இன்று சொல்வதைப் போல் அன்று கூறியிருக்கலாமே? ஏன் மறந்தீர்கள்.

கத்திக்கு எதிராக சுழன்று கொண்டிருந்த போது இந்த பா.இரஞ்சித்தும், அவருக்காக பரிந்து பேசும் மற்றவர்களும் இங்குதானே இருந்தார்கள். அவர்கள் எல்லாம் உனக்காக ஒரு வார்த்தை பேசியிருப்பார்களா? ‘நானும் இயக்குனர் இரஞ்சித்தும் இந்த சமூகத்தில் செய்ய வேண்டிய வேலைகளும் கடமைகளும் ஏராளம் இருக்கின்றது” என்று நீங்கள் சொல்வது போல், உங்களின் சமூக கடமைமைக்கு துணையாக பா. இரஞ்சித் வந்து துணை நின்றாரா?

இன்று வெற்றி பெற்ற பிறகு, ‘நானும் அவரும் சேர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயமும்கூட” என கூறுவதைப் போல் அன்று கத்தி பட விவகாரத்தின் போது நீங்கள் கூறியிருக்கலாமே? அன்று உங்களுக்குத் துணையாக இரஞ்சித்தை அழைத்திருக்கலாமே? ஏன் மறந்து போனது. குறைந்த பட்சம் ‘மெட்ராஸ் திரைப்படம் திருடப் பட்ட கதை என்ற சர்ச்சை எழுந்த போதாவது, ‘நானும்  இரஞ்சித்தும் ஒற்றை நோக்கில் பயணிப்பவர்கள். யாரும் விமர்சிக்காதீர்கள்” என்ற அறிக்கையை வெளியிட்டிருக்கலாமே? ஏன் மறந்தீர்கள்.

சரி, “நலம் விரும்பிகளின் பதிவு யாருக்கேனும் மன வருத்தத்தை தந்திருந்தால் அவர்களுக்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுகூற உங்கள் மனச்சாட்சி உறுத்த வில்லையா? உங்கள் ஆதரவாளரிகளின், நலம் விரும்பிகளின், சாதி பார்க்காமல் ஆதரித்த ஆயிரம்கணக்கான ரசிகர்களின் நம்பிக்கையை அல்லவா அடகு வைத்திருக்கிறீர்கள்.

ஒரு படத்தின் வெற்றியை பாராட்டத் தெரிந்த இயக்குனர் பா. இஞ்சித்திற்கு, அந்த படத்தின் இயக்குனர் பெயர் கோபி நயினார் என்பது தெரியாத ஒன்றா.? ஆக உங்களின் வெற்றி அவருக்கு மனதளவில் உவகையைத் தரவில்லை. அப்படியானவரின் நேர்மையை நடுநிலைமையோடு சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள். . உங்களின் நலம் விரும்பியாககூட அல்ல, நியாயத்தை எதிர்பார்ப்பவர்களாக அவரை விமர்சித்து கேள்வி எழுப்புகிறார்கள். அதில் உங்களுக்கு என்ன வந்தது.

உங்களை வருந்தச் சொல்லி யார் கட்டாயப் படுத்தினார்களோ, அவர்களிடம் நீங்கள் தனிமையில் கேட்டிருக்கலமே கோபி. நலம் விரும்பிகளின், நடுநிலையாளர்களின், நியாயத்தை கேட்டவர்களின் தன்மானத்தை ஏன் குத்திக் கிழிக்க வேண்டும்.அன்று உங்களுக்காக முன்வந்து எழுதிய ஊடகங்களிடம் எல்லாம் வந்து, ‘உறவுகளை சிக்கலாக்குகிற எந்த ஒரு பதிவுகளையும் நான் அனுமதிக்க மாட்டேன்” என்று ஒரு வார்த்தை கூறியிருக்கலாமே கோபி. நாங்கள் எங்கள் வேலையை பார்த்திருப்போமல்லவா? ழுது ங்கள், நியாயத்தைக் கேளுங்கள் என்று ஆதங்கப்பட்டு நீங்கள்தானே?

ஒன்றை யோசிக்க வேண்டும் கோபி. பாதையை மறந்தவன் பயணத்தை தொடர முடியாது. இதே அறம் திரைப்படம் தோல்வி கண்டிருந்தால் உங்களின் நிலை என்னாகியிருக்கும் என யோசித்து பாருங்கள். அப்போது இப்படி யாரும் உங்களை வற்புறுத்தி ‘நானும் இயக்குனர் ரஞ்சித்தும் ஒற்றை இலக்கை நோக்கிப் பயணிப்பவர்கள்’ என்று அறிக்கை வேண்டும் என கேட்டிருப்பார்களா? காற்றில் அடித்துச் செல்லும் வெற்றுக் காகிதம் போல் கேட்பாரற்று கிடந்திருப்பீர்கள்.

இப்போது ஒரே இலக்கை நோக்கி பயணிப்பவர்கள் என்று கூறுவோர் அன்று உங்களை கண்டுகொள்ளாமல், வெற்றி களிப்பில் நின்ற பா. இரஞ்சித்தின் பக்கம் நியாயம் பேசி நின்றவர்கள் தானே? உங்களை கைவிட்டவர்கள்தானே? என்பதை சற்றுத் திரும்பி
அப்போது யாரும் வந்து உன்னை தாங்கிக் பிடித்திருக்க மாட்டார்கள்.  அப்படி யான வர்களுக்காக உங்களின் நலன் விரும்பிகளாக இருந்தவர்களை கொச்சைப்  படுத்திருக்க கூடாது. அவர்களுக்காக வேண்டி உன் நியாயத்தின் பக்கம் நின்றவர்களை காயப்படுத்தியிருக்க கூடாது”

– இப்படிக்கு உங்கள் போக்கால் மனம் உடைந்து போனவன்

error: Content is protected !!